வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 30, 2010

நடைபாதை - எதிர்வினை

அன்பரீர் ! வாழ்க !

தங்களின் 112 பக்கத்தில் அடங்கிய 24 தலைப்புக்கள் கொண்ட 'நடைபாதை' சிறுகதைத் தொகுப்பை, 11.10.08ல் பெற்றேன். படித்தேன்.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் தங்களின் சமூதாய உணர்வைக் காட்டிய வண்ணம், எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ரசித்தேன். குறிப்பாக 'வலி' என்ற சிறுகதையும், 'இன்னொரு கண்ணதாசன்', 'உனக்கு நீ செய்யும் உதவி' போன்றவை நன்று.

'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதை 'உரத்தசிந்தனையின் பரிசு பெற்றது என்று நினைக்கிறேன். அதில் படித்ததாக நினைவு. சரியா ?

சிறுகதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை மட்டுமல்ல; சில ச்மூதாயப் பழுது நீக்குபவையும் ஆகும். உங்கள் முயற்சி வெல்க !

கட்டுரையிலிருந்து கதை எழுத முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'எனது கீதை'யிலிருந்து இது மாறுபட்டிருப்பதும், முன்னேற்றப்பாதையில் செல்வதும் நன்று. கூடுமானவரை ஆங்கில சொற்களைத் தவிர்த்த பேச்சு மொழியை இனி பயன்படுத்துக.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அரிமா மூரளீதரன்
15.10.2008நான் சந்தித்த வாசகர்களில் மிகவும் வித்தியாசமானவர். எந்த புத்தகம் கொடுத்தாலும் இரண்டே நாட்களில் படித்து முடித்து அதன் விமர்சனத்தை தபாலில் அனுப்பி விடுவார்.

'எனது கீதை' நூல் வெளியீட்டு முன்பு நாள், இவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புத்தகத்தை பற்றி பாராட்டி பேசினார். நூல் வெளிவர முன்பே எப்படி புத்தகம் இவருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. புத்தகம் படித்து விட்டு கருத்துக்கள் சொல்பவர்கள் மிக சிலரே. அதில், முரளீதரன் போன்றவர் மிகவும் வியப்பு தக்க மனிதர். தொலைப்பேசியில் கருத்தை கூறினாலும், கடித்ததில் எழுதி அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று கடித்தம் எழுதி அனுப்புவார்.

இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருப்பவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இவரை நேரில் சந்திக்கும் போது ஏமாற்றம் தான். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர். 63 வயது.

சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரை, கதை கொண்டு நினைவில் வைத்து பேசுவார். தீவிரமாக வாசித்தவர்களை பார்த்திருக்கிறேன். வாசித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு மனிதனை சந்தித்தேன் என்றால் அது இவர் தான். என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்லாமல் மற்றவர் எழுதிய கட்டுரை, கதைகளை அந்த எழுத்தாளரிடம் சொல்லி தன் கருத்தை கூறுவார். இவர் போன்ற வாசகரை பார்க்கும் போது தான் எழுத்துபவருக்கு தன் எழுத்து மீது நம்பிக்கை பிறக்கிறது.

சமீபத்தில் உடல் நல குறைவால் எந்த நிகழ்ச்சிக்கும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஒய்வு பெறும் வரை குடும்பத்திற்காக உழைத்தவர். ஒய்வு பெற்ற பிறகு 'தமிழுக்காக உழைத்தேன்' என்று சொல்லுவார். ஆனால், அவர் உடல் ஒத்துழைக்கவில்லை.

இவருடைய விமர்சனத்தை படிக்கும் போதும், கேட்கும் போதும் உத்வேகமாய் இருந்தது. அதே சமயம் செய்ய நினைத்ததை காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும் பயமும் பற்றிக் கொண்டது.

நடைபாதை நூலை வாங்க...

Monday, June 28, 2010

படித்ததும் பார்த்ததும் - 28.6.10

நேற்று (27.6.10) சென்னை கடற்கரை அருகே ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் குரல் போராட்ட சமயத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை. இன்றைய (28.6.10) இந்து நாளேடில் இரண்டாவது பக்கத்தில் ஓரினசேர்க்கையாளர்களின் போராட்டத்தின் செய்தி வெளிவந்துள்ளது. இவர்களில் குரல் இந்த முறையாவது அரசு காதுகளுக்கு கேட்க வேண்டும்.

***
பெரம்பூர் பகுதியில் 'தாய்மண் இலக்கிய கழகம்' என்ற அமைப்பை மூப்பது வருடங்களாக 'அருமையார்' என்பவர் நடத்திவருகிறார். 85 வயது. பக்கா தி.மு.க காரர். வீடு முழுக்க அண்ணா, கலைஞரோடு ஐம்பது வருடங்கள் முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருக்கும்.

தி.மு.க காரராக இருந்தாலும் மேடை தோறும் கலைஞரை திட்டாமல் இருக்கமாட்டார். காரணம், தன் பெண்ணை தலைவர் கொள்கைப்படி தமிழ் படிக்கவைத்தார். ஆனால், தலைவரோ ஆங்கில பள்ளியில் படிக்க வைத்தார். தமிழ் தெரியாத பல பணக்காரர்கள் மட்டுமே மந்திரியாக இருக்கிறார்கள் என்ற கோபம். திருக்குறளை தெரியாதர் மந்திரியாக கூடாது என்று சொல்லுவார். தமிழ் படித்தவனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பல வருடங்களாக அவர் நடத்து சிற்றிதழில் எழுதிவருகிறார்.

செம்மொழி மாநாட்டில், கலைஞர் 'தமிழ் படித்தவனுக்கு அரசு வேலையில் முன்னுரிமை' என்ற அறிவித்துள்ளார். இருந்தும், பாதிக்கப்பட்ட இவரின் மனம் மாறவில்லை. பழ.கருப்பையா எழுதிய கட்டுரையை தனது இதழில் எழுதி கலைஞரின் மீது இருக்கும் கோபத்தை காட்டியுள்ளார்.

88 வயது கலைஞரின் சாதனை போற்றும் சமயத்தில், அவரை எதிர்க்கும் 85 வயதுக்காரரின் குரல் மக்களுக்கு எப்போது கேட்க போகிறது ?

***
இலக்கிய நகைச்சுவை

பல பேர் ஒரு புத்தகத்தை படித்தால் - இலக்கியம்
ஒருவரே பல முறை படித்து புரியவில்லை என்றால்
பின் நவீனத்துவ இலக்கியம்

(சத்தியமா இது என்னுடைய நகைச்சுவை இல்லை.)

***

We can bookயில் மேலும் இரண்டும் புத்தகங்கள் சேர்ந்துள்ளன. அதுவும் விருது பெற்ற புத்தகங்கள்.

மில்
ம.காமுத்திரை
விலை.150, பக்கங்கள்:272
சுஜாதா நினைவு பரிசு போட்டியில் சிறந்த நாவல் பரிசு பெற்ற புத்தகம்.**
நீர்வலை
எஸ்.ஷங்கர்நாராயணன்
விலை.70. பக்கங்கள்:160
2006 யின் தமிழ அருசு விருது பெற்ற நாவல்இரண்டு புத்தகங்கள் சேர்த்து ஆர்டர் செய்பவர்களுக்கு கோரியர் செலவு இல்லை.

Friday, June 25, 2010

காதல் கவிதை !"இலங்கை அதிபரின் பேத்தியோ
அழகாளே தமிழர் நெஞ்சை
கொலை செய்கிறாய்" என்றேன் அவளிடம்.

"பார்வையாலே கற்பழிக்கிறாய்
நீ என்ன இலங்கை இராணுவமா !!"
என்றாள் அவள்.

***

A +ve இரத்தமும்
A –ve இரத்தமும்
சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து
என்று விஞ்ஞானம் சொன்னது !

இரண்டு இரத்தம் சேர்ந்ததால் தானே
நம் காதலுக்கு சாட்சியாக
சிசு உருவானது !

***

நான் இவ்வளவு அழகாக கவிதை எழுதுவேன் என்று
உன்னை பற்றி எழுதும் போது தான் தெரிந்துக் கொண்டேன்.

Thursday, June 24, 2010

கிரேக்கர்கள் ஓரின சேர்க்கையை ஏன் கொண்டாடினார்கள் ??

'300' என்ற ஆங்கிலப்படம். மற்ற நாடுகளுக்கு சென்று யுத்தம் நடத்துவதற்காக படைகளை தயாரிக்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத வீரர்களை உருவாக்க நினைக்கிறார்கள். அதனால், ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது ஒவ்வொருவனுக்கும் போர் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கிறார்கள். குழந்தைகளை பெற்று கொள்வதற்காகவே பெண்களிடம் புணர்கிறார்கள். பிறக்கும் ஆண் குழந்தையை ஐந்து வயதில் அன்னையிடம் இருந்து பிரித்து கடுமையான பயிற்சிக் கொடுத்து பெரும் படையை உருவாக்கி யுத்தம் செய்வது தான் கதை.

பண்டைய காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் போர் பிரியர்களாக இருந்தார்கள். போர் களத்தில் நாட்கள் கடத்துவதில் பெருமையாக நினைத்தார்கள். தங்கள் பலத்தை ஒரு ஆணிடம் காட்டுவதில் வீரம் என்று போற்றியவர்கள். கிளியோபட்ராவால் வந்த யுத்தமாகட்டும், 'இலியட்' இதிகாசத்தில் ஹெலனை வைத்து நடந்த மகா யுத்தமாகட்டும். பெண் யுத்தத்திற்கு காரண பொருளாக இருக்கிறாளே தவிர யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததில்லை. யுத்தம் நடத்த காரணத்தை தேடுபவர்களகாக தான் கிரேக்கர்களின் போர் ஆசை இருந்தது.பெண்களிடம் கூடுவதும் இனப்பெருக்கத்திற்காக மட்டும் தான். தங்களுக்கு ஒரு வாரிசு உருவாக்கி கொள்வதிலும், அடுத்த தலைமுறைக்கு படைகளை உருவாக்கி கொடுப்பது தான் பெண்ணின் முக்கிய வேலையாகவே வைத்திருந்தார்கள். அதனால், பெண்களுக்கு எந்த வித அதிகார பங்கும், பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. ஆண்டு கணக்கில் போர் விரும்பியர்களான கிரேக்க கணவர்களை அவர்கள் மனைவியர் பிரிந்து இருக்க வேண்டியதாக இருந்தது.

போர்களத்திற்கு சென்ற வீரர்கள் தங்கள் இச்சைக்கு ஆண்ணை புணர்ந்துக் கொள்ள இன்னொரு ஆண் நாடுவதுண்டு. அதே போல், ஆண் துணை இல்லாமல் பிரிந்து இருக்கும் பெண் இன்னொரு பெண்ணை தீண்டுவதும் கிரேக்கர்களின் வழக்கத்தில் ஒன்று. விதவை திருமணமோ, திருமணத்துக்கு முன் உடலுறவோ அவர்கள் கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல.

போர் காலத்திலும் சரி, போர் ஒத்திகை சமயங்களிலும் சரி புணர்ந்து கொள்வதற்கு ஆண் ஆணை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இன்றும், இராணுவத்தில் ஓரின சேர்க்கையில் தங்கள் உணர்ச்சிகளை திர்த்துக் கொள்கிறார்கள். இதில், அமெரிக்க இராணுவமோ, இந்திய இராணுவமோ விதிவிளக்கல்ல.

மண்ணை வெற்றி பெரும் பொது பெண்ணையும் பாலியல் தொல்லை செய்வது முகலாயர் படையெடுப்பு தொடங்கி, இன்றைய ஈழத்தை ஆக்கிரமித்த இலங்கை வரை பொதுவான ஒன்று. ஆனால், உலக வரைப்படம் வரையாத காலத்தில் மாவீரர் அலெக்ஸாண்டர் தன் வெற்றி கொண்ட நாடுகளில் பெண்களை பாலியல் தொல்லை செய்ய அனுமதித்ததில்லை. தன் படை வீரர்களுக்கும் பெண்களை தொல்லை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். பெண்கள் பாலியல் கொடுமை செய்த வீரர்களுக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறான்.

பல தேசங்கள் வெற்றி பெற்ற மாவீரன் வெற்றிக் கொண்டாடிய தேசங்களில் பண்களை புணர்ந்துக் கொள்ளாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவன் ஓரின சேர்க்கையாளன் என்பதால் தான். மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி எழுதிய வரலாறு எழுத்தாளர்களும் அவரை அப்படிதான் குறிப்பிடிருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் கூடுவது தான் இயற்கை என்று சொல்கிறோம். ஆனால், அந்த இயற்கையான உணர்வால் எத்தனையோ பெண்கள் பாலியல் தொல்லை ஆளாகிறார்கள். ஆனால், ஓரின சேர்க்கை கொண்டாடிய கிரேக்க கலாச்சாரத்தில் ஆண் ஆணையும், பெண்ணையும் கற்பழித்ததாக எந்த புகாரும் வந்ததில்லையாம்.

இந்தியாவில் 53 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாளாம். காவல்துறையில் பதிவான வழக்கில் இருந்து வந்த புள்ளி விபரம் இது. பதிவாகாத வழக்குகளை வைத்து பார்த்தால், 40 நிமிடத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படலாம். பசிக்கு உணவு கிடைக்காத நேரத்தில் திருட தோணும். அது போல், செக்ஸ் தேவையான சமயத்தில் செக்ஸ் கிடைக்காத போது தான் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தற்கரிதியான வாதம் செய்யமுடியாது.

இப்படி செக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் நடப்பதை கட்டுப்படுத்தாதவர்கள், எங்களுக்கு பிடித்தவர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஏன் எதிர்கிறார்கள் என்று லெஸ்பியன் பெண் தன் உருமைக்காக கேள்வி எழுப்புகிறாள்.

பெண்களின் பாதுகாப்புகாக போதிய சட்டம் இல்லை என்பதற்காக 'ஓரின சேர்க்கை' சரி என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் லெஸ்பியன் விரும்பி சென்றால், ஆண்கள் அவர்களை மேலும் தொல்லை செய்யலாம்.ஆண்களும் 'ஓரின சேர்க்கையில்' ஈடுபட வேண்டியது இருக்கும்.

இப்படி ஒரு கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு கேள்வி தான் எழுகிறது. இதற்கு முடிவு காண முடியாமல் பட்டிமன்ற விவாதம் போல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.கிரேக்க கலாச்சாரம் அழிந்து விட்ட நிலையில் அதை மேற்கொள் காட்டுவது 'ஓரின சேர்க்கையாளர்' வாதத்திற்கு ஆதரவாக அமையவில்லை.

ஓரின சேர்க்கையாளர் தங்கள் ஆதராவாக சொல்லப்படும் வாதங்கள் அடுத்த பதிவில்....

****

இந்த பதிவு எழுத அண்ணன் கோவிகண்ணன் 7 பதிவுகள் உதவியாக இருந்தது. கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி !!

Wednesday, June 23, 2010

We Can Books பட்டியல் - 2

We Can Books இரண்டாவது பட்டியல்.

கட்டுரை களஞ்சியம்
- 'சோலை' தமிழினியன்விலை.60, பக்கங்கள் : 160

29 எழுத்தாளர் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரை தொகுப்பு. சோலை தமிழினியன் பல எழுத்தாளர்களிடம் கட்டுரை தொகுத்து, சுயமாகவே பிரசுரத்திள்ளார்.

***

வைரஸ் புன்னகை
- சோலை தமிழினியன்விலை.40, பக்கங்கள் : 80

11 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் இரண்டு சிறுகதைகள் நம் உரத்தசிந்தனை பரிசு பெற்றுள்ளது. ஆனந்த விகடன், சாவி போன்ற வார இதழோடு பல இலக்கிய இதழ்களிலும் வெளியான கதைகளை எழுதியவர் 'சோலை' தமிழினியன்.

***

இரத்த ஆறு
- எஸ்.ஷங்கர்நாராயணன்விலை.60, பக்கங்கள் : 160

கார்கில் யுத்தத்தை மையமாக வைத்து தமிழில் எழுத்தப்பட்ட சிறுகதை தொகுப்பு. தமிழக அரசு பரிசு, பாரத் ஸ்டேட் வங்கி பரிசு பெற்ற எஸ்.ஷங்கர்நாராயணன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்

***

வசீகர பொய்கள்
- எஸ்.ஷங்கர்நாராயணன்விலை.60, பக்கங்கள் : 160

'பாரத் ஸ்டேட் வங்கி ' பரிசு பெற்ற நூல். 18 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பை எஸ்.ஷங்கர்நாராயணன் எழுதியுள்ளார்.

***

தைவான் நாடோடிக்கதைகள்
- தமிழில்' மதுமிதாவிலை.40, பக்கங்கள் : 88

Folk Tales of Taiwan நூலின் தமிழாக்கம். குழந்தைகளின் மனம் கவர்ந்த சிறுகதைகளை மதுமிதா தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

***

மகாபுள்வெளி
- ஆன்டன் செகாவ், தமிழில் : ம.ந.ராமசாமிவிலை.80, பக்கங்கள் : 192

'ஸ்டெப்' என்ற ரஷ்ய மொழியிலும், 'தி ஸ்டெப்பி' என்ற ஆங்கில மொழியிலும் வெளிவந்த நாவலின் தமிழாக்கம் 'மகாபுல்வெளி'. இதை எழுதியவர் ஆன்டன் செகாவ். ம.ந.ராமசாமி திறம்பட தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.


*********

புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ் காணும் முறையில் வாங்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in / nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

ரூ.150 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம்.

இன்னொரு மகிழ்ச்சியான அறிவிப்பு.

நாகரத்னா புத்தகங்கள் ரூ.100 மேல் வாங்கினால் தபால் செலவு இல்லை.(உதாரணத்திற்கு பரிசல், கேபிள் புத்தகங்கள் வாங்க விரும்புபவர்கள் ரூ.100 வங்கியில் செலுத்தினால், புத்தகங்கள் வீடு தேடி வரும்).

நாகரத்னா பதிப்பகத்திற்கு அளித்த ஆதரவை 'We Can Books'க்கு அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்.
நல்ல புத்தகங்கள், விருது பெற்ற புத்தகங்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும்.

Tuesday, June 22, 2010

We Can Books பட்டியல் - 1

அன்பான பதிவு நண்பர்களுக்கு,

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தங்களோடு சில புத்தகங்களை விற்பனை உரிமை வாங்கி 'We Can Books' என்ற பெயரில் விற்பனை செய்துவருகிறது. வாசகர் பார்வைக்கு வராத நல்ல புத்தகங்கள், விருது பெற்ற புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டமாக 13 புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன் பட்டியல் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

**

1.வளமுடன் வாழ்வோம் வா
- துருவன்விலை.40 . பக்கங்கள் : 112

யாரும் வாழ்ந்தது போதும் என்று நினைப்பதில்லை. ஏதாவது ஒரு தேடலை நோக்கி தான் வாழ்க்கை செல்கிறது. தன் தேடலை தெரிந்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் இந்த புத்தகம் ஒரு 'கைய்ட்'.

**
2. வரம் தரும் வாழ்வு
- துருவன்


விலை.75 . பக்கங்கள் : 160

வாழ்க்கை இவ்வளவு சுவையானதா ? நம் ரசிக்க வேண்டிய சந்தோஷங்கள் இன்னும் உள்ளதா ? சோகம், விரக்தி, கவலை எல்லாம் இந்த புத்தகம் உங்களை அறக்கடித்து விடும். வாழ்க்கையை வரமாக பெற்று, மற்றவர்களுக்கு பாடமாக மாற்றி வாழ்ந்த பல வாழ்க்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட நூல்.

நம் உரத்தசிந்தனை - என்.ஆர்.கே விருது பெற்ற புத்தகம்.

**

3. ஓஷோ - தமிழ் ஹைக்கூ புரிதல்
- செல்லம்மாள் கண்ணன்விலை.30 . பக்கங்கள் : 80

ஹைக்கூ கவிதைகளில் இப்படி ஒரு ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற பிரம்மிப்பும், வியப்பையும் வரவழைக்கும் விதமாக செல்லம்மாள் கண்ணன் எழுத்து நடையுள்ளது. ஓஷோவின் தத்துவத்தை, அதற்கு ஒப்பான ஹைக்கூ கவிதை கூறி விளக்கம் தந்து புரிய வைக்கும் நூல்.

**
4. சலாம் இஸ்லாம்
- களந்தை பீர்முகமுதுவிலை.50 . பக்கங்கள் : 160

17 இஸ்லாமிய எழுத்தாளர் எழுதிய சிறுகதை தொகுப்பு. சல்மா, தோப்பில் முஹம்மது மீரான், நாகூர் ரூமி போன்றவர்களில் சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

**

5. சூரியனுக்கு சுப்ரபாதம்
- ஜெயந்தி சங்கர்விலை.35 . பக்கங்கள் : 88

ஆர்னால்ட் பென்னட் எழுதிய 'How to live on 24 hours a day' தமிழ் வடிவம். பல பல நூல்கள் எழுதிய ஜெயந்தி சங்கர் இந்த நூலை தமிழில் எழுதியுள்ளார்.

**

6. தகப்பன்சாமி
- பத்ரிநாத்விலை.25 . பக்கங்கள் : 96

11 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் இலக்கிய சிந்தனையில் பரிசு பெற்ற ஒரு கதையும், ஜோதி வினாயகம் நினைவுச் சிறுகதை குழுவில் சிறந்தவையாக ஐந்து முறை பரிசு பெற்ற சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.இந்த நூலை எழுதிய பத்ரிநாத் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அண்ணா பல்கலை தந்தி அலுவலகத்தில் பணியாற்றியவர்.

**

7. தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை
- ம.ந.ராமசாமிவிலை.25 . பக்கங்கள் : 80

தீவிர இலக்கிய வாசிப்பும், பற்றும் கொண்டவர்களில் ம.ந.ராமசாமி மிகவும் முக்கியமானவர். இவர் எழுதிய 'நாலாவான்' சரித்திர நாவல் புதியபார்வை பரிசு பெற்றுள்ளது. 'இந்திய ஆங்கிலச் சிறுகதைகள்' சாகித்ய அகாதெமிக்காக தமிழில் மொழி பெயர்த்துள்ளது.

'தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை' நாவல் திண்ணை இணையதள வார இதழில் தொடராக வெளிவந்தது.


*******

மீதம் உள்ள புத்தங்கள் அடுத்த பதிவில் இடம் பெறும். புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ் காணும் முறையில் வாங்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

ரூ.150 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம்.

இன்னொரு மகிழ்ச்சியான அறிவிப்பு.

நாகரத்னா புத்தகங்கள் ரூ.100 மேல் வாங்கினால் தபால் செலவு இல்லை.(உதாரணத்திற்கு பரிசல், கேபிள் புத்தகங்கள் வாங்க விரும்புபவர்கள் ரூ.100 வங்கியில் செலுத்தினால், புத்தகங்கள் வீடு தேடி வரும்).

நாகரத்னா பதிப்பகத்திற்கு அளித்த ஆதரவை 'We Can Books'க்கு அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்.

Monday, June 21, 2010

படித்ததும் பார்த்ததும் - 21.6.10

ஜூனியர் விகடனில் வந்த செய்தி.

ஜூன் 26 அன்று, ஓரின சேர்க்கையாளர்கள் சென்னை கடற்கரை அருகே மாபெரும் பேரணி நடத்த சென்னை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். 'இவர்களுக்கு அனுமதி அளித்தால் அதை எதிர்த்து சென்னை கடற்கரையில் நாங்கள் எதிர்ப்பு தேரிவிப்போம்' என்று 'இந்து மக்கள் கட்சி'யை சேர்த்த கண்ணன் தெரிவித்துள்ளார். யாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் சென்னை காவல்துறையினர் உள்ளனர்.

***

செம்மொழி மாநாடு சில விமர்சனங்கள்

நேற்று ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்த போது செம்மொழி மாநாடு பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. செம்மொழி மாநாடு பாடலை ஏன் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்தார்கள் ? இளையராஜாவுக்கு கொடுத்திருக்க வேண்டும். சோ 'துக்ளக்' ல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கொடுத்த ஆஸ்கர் விருதை திரும்ப பெற வேண்டும் என்று எழுதியிருப்பதாக கூறினார்.

*

செம்மொழி புத்தக கண்காட்சி நாகரத்னா பதிப்பக புத்தகங்களை இடம் பெற இரண்டு பதிப்பகங்களை அனுகிய போது அவர்கள் 'செம்மொழி மாநாடு அரசியல் மாநாடு போல் இருக்கும். ஸ்டால் போட்டால் நஷ்டம் ஏற்ப்படும்' என்று கருத்து தெரிவித்தார்.

*

ஒருவர் '15 வருடங்களாக பதிவு செய்த்து நடத்தி வரும் பல முக்கிய இலக்கிய அமைப்புகளுக்கு வாய்ப்பு தரவில்லை' என்று குறைப்படுக் கொண்டார்.

எந்த ஒரு நிகழ்ச்சியும் எல்லோரும் திருப்தி படுத்தி நடத்தி விட முடியாது. ஆனால், நிகழ்ச்சி நடத்தும் முன்பே பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. சொம்மொழி மாநாடு முடிந்ததும் இன்னும் பல விமர்சங்கள் ஏழும் என்று நினைக்கிறேன். பொருத்திருந்து பார்ப்போம்.


***

லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை

அதிகாரவர்த்திற்கும், போராடும் மக்களுக்கும் இடையே மாட்டி சிக்கி தவிக்கும் இடங்களில் லால்கரும் ஒன்று. அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாதிக்கப்படுவதும், மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் நக்ஸல்பாரி தாக்குதலிலும் அழியப்படும் மக்களின் மூன்றாவது பார்வை தான் இந்த புத்தகம்.

சந்தோஷ் ராணா, குமார் ராணா போன்ற எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்பும், அ.மார்க்ஸ்ஸின் கட்டுரை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள.

விலை.30. பக்கங்கள் : 56
புலம் வெளியீடு

***

இலக்கிய நகைச்சுவை


ஒரு புத்தகத்தை பார்த்து எழுதினால் - திருட்டு
பல புத்தகங்களை பார்த்து எழுதினால் - திரட்டு !

***

வரும் ஜூன் 26, அனைத்ந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், பெரம்பூ கிளை சார்பாக நடத்தப்படும் இலக்கிய கூட்டத்தில் நான் எழுதிய நான்கு சிறுகதைகள் விமர்சனம் செய்யவிருக்கிறார்கள். நேரம் இருக்கும் நண்பர்கள் வரலாம்.

இடம் :
V.O.C ஆரம்ப பள்ளி ,
பட்டேல் ரோடு,
பெரம்பூர், சென்னை - 11.

நிகழ்ச்சியில் அன்று, நான் எழுதிய 'என்னை எழுதிய தேவதைக்கு' (விலை.55/-) மற்றும் நடைபாதை (ரூ.40) இரண்டு நூலும் சேர்த்து ரூ.70 (~30% கழிவு) கிடைக்கும்.

Thursday, June 17, 2010

உறங்காத உணர்வுகள் - எதிர்வினை

என் உறங்காத உணர்வுகள் நூலுக்கு வந்த முதல் வாசகர் கடிதம்.

டியர் கண்ணன்,

உங்கள் உறங்காத உணர்வுகள் கவிதைகள் நன்றாக இருந்தது. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது " நான் பார்க்காத சகோதரிக்கு...". உங்கள் சகோதரியாக நான் இருக்கிறேன். என் பெயர் கே.காயத்ரி. பத்தாம் வகுப்பு படிக்கிறேன். உங்கள் நூறு அதிசயங்களும் சூப்பர். பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

அன்புள்ள,
காயத்ரி
20.9.03

***
உறங்காத உணர்வுகள் கவிதை நூலின் அணிந்துரை.

எல்.பி.வெங்கட்ராமன்
துணைவேந்தர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


இன்நூல் மனித உணர்வுகள், மனித நேயம் இவைகளை நன்றாக பிரதிபல்லிக்கும் விதாமாக உள்ளது. தேசப்பற்று, காதல், விரக்தி, கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி என்று ஒவ்வொரு உணர்வுகளை நன்றாக சித்தரித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக,

"மகாத்மா தன் சோகத்தை முறையிட
அயோத்தி ராமனிடம் சென்றார்
அவரிடம் கூற மறந்து விட்டேன்
இன்று டிசம்பர் ஆறு என்று !
அயோத்தி ராமனோ !
தலைமறைவாகி விட்டான் !


இந்த வரிகளில் குஜராத் மதக்கலவரத்தையும், டிசம்பர் ஆறு நடந்த மதக்கலவரத்தையும் சம்பந்தப்படுத்தி எழுதியுள்ளார். இந்த எழுத்தாளர் ஒரு இளைஞனின் ஆதங்கத்தை நன்றாக சித்தரிக்கும் ஆற்றல் கொண்டவர்.

"அயோத்தி இடத்தை நிரப்பும் முயற்சியில்
என் கவிதையின் பக்கம் மட்டுமே நிரம்பியது"


என்ற வரிகளில் நாட்டை பற்றி அவருக்கு இருக்கும் ஏக்கத்தை காட்டுகிறது.

காதலைப் பற்றி சொல்லு கண்ணன் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அழகு. காதலைச் சொல்லத் துடிக்கும் இளைஞனின் நிலையை

"நான்கு மொழி கற்று அறிந்தவன் நான்
எந்த மொழிகளும் உதவவில்லை
உன்னிடத்தில் என் காதலை சொல்ல !"

விளக்குகிறார்.

"விரக்தியில் பேசுகிறான்" என்ற தலைப்பில் விரக்தியில் ஒருவன் பேசும் வார்த்தைகளையும், "எய்ட்ஸ் குழந்தை" தலைப்பில் எய்ட்ஸ் நோயில் அவதைப்படும் குழந்தைகளையும், முதியோர் இல்லம்" என்ற தலைப்பில் முதியோர்கள் படும் துயரத்தையும், "பேசும் சிலை" என்ற தலைப்பில் கண்ணகி சிலை பிரச்சனைப் பற்றி போன்ற சமூதாய இன்னல்களை பற்றி எழுதியிருக்கும் வரிகள் சமூதாயத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் தைரியம் கொண்டவர் என்று தெரிகிறது.

"பலமுறை நினைத்துப் பார்த்தும்
வாழ்ந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தது
மீண்டும் அந்த நாட்கள் சென்று
வாழ முடியவில்லை"


என்ற வரிகளில் பள்ளிப் பருவத்தை பிரித்த இவரின் ஏக்கம் தெரிகின்றன.

இவர் மேலும் பல கவிதை தொகுப்புகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எங்கள் பல்கலைக்கழக மாணவனின் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதுவதில் மகிழ்ச்சி அடைக்கிறேன். வளரட்டும் இவரது தமிழ் பணி.

எல்.பி.வெங்கட்ராமன்
12.3.2003

****

இந்த புத்தகம் போடும் போது நாகரத்னா பதிப்பகம் தொடங்க போகிறோம் என்ற கனவு துளிக் கூட இல்லை. ஆனால், நாகரத்னா பதிப்பகம் தொடங்குவதற்கு இந்த நூல் தான் முதல் படியாக இருந்தது.

இந்த நூலின் பிரதிகள் என்னிடம் ஒன்று தான் இருக்கிறது. நான்கு பிரதிகள் நியூ புக் லாண்ட், தி.நகர் கடையில் இருக்கிறது. அடுத்த பிரதி போடலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்.

ஒரு சில கவிதைகளை பதிவில் ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறவும்.

Wednesday, June 16, 2010

கவிதை: சுற்றம்

கர்ணனின் வள்ளல் குணம் போல்
பெருகிவரும் ஓசோன் ஓட்டை !

பச்சை ஆடை நீக்கி
இயற்கைக்கு பிளாஸ்டிக் ஆடை !

குடிநீருக்கு பதிலாக
தினமும் பெப்ஸி, கோக் !

நம்மை குளிர வைத்து
தரணியை வெப்பமாக்கும் ஏ.சி !

நாளை,
போபால் போல்
உலகம் மாறலாம் !

தீர்ப்புக்காக காத்திருக்கும்
மக்கள் போல்
உயிர் உருவாக
பூமி காத்திருக்கலாம் !

Tuesday, June 15, 2010

ஹோட்டலில் ஜாக்கிரதையாக இருங்க !!

தப்பு செய்ய நா ஹோட்டல் போல.... சாப்பிட தான் போறேன். நல்ல ஹோட்டலா பார்த்து தான் சாப்பிட போறேன். எனக்கு பிடிச்ச சிக்கன் கறி, மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணுவேன். வயறு முழுக்க சாப்பிட்டு சந்தோஷமா வெளிய வர போறேன். இதுல என்னத்த ஜாக்கிரதையா இருக்க வேண்டி கிடக்கு ??

- தலைப்பை படித்ததும் இப்படி எல்லாம் உங்கள் மனதில் எண்ணம் வரலாம். என் பர்ஸ் யாரும் திரட முடியாது. அப்படியே திருடினாலும், பணத்தை அதிகமாக கார்ட் தான் நிறைய இருக்கும்.இன்று பணத்தை விட கிரடிட் கார்ட்டை அதிகம் பாதுகாக்க வேண்டும் என்று முன்பைய அத்தியாயித்திலே சொல்லியிருக்கிறேன். பணம் தொலைந்தால், இவ்வளவு தான் தொலைந்தது என்று உங்களால் சொல்ல முடியும். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்தால் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று நாம் வாடிக்கையாளர் சேவை தொடர்பு கொள்ளும் வரை தெரியாது. நான் என்னவோ ஹோட்டலில் கிரடிட் கார்ட் திருடு போவதை பற்றி சொல்ல போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். 'டிப்ஸ்' என்ற பெயரில் உங்கள் திருடு போகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு 'டிப்ஸ்' வைப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஐந்நூறு ரூபாய்க்கு நண்பர்களோடு சாப்பிட்டால், பத்து ரூபாய் நாமாக வைத்தால் எப்படி திருட்டாகும். அரை மணி நமக்காக பரிமாறியவற்கு பணம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமாக இருக்குமா ? எதிர் கேள்வி வரலாம். உங்கள் பில்லுக்கு நீங்கள் பணமாக கொடுக்கும் பட்சத்தில், தட்டில் 'டிப்ஸ்' வைப்பதில் பிரச்சனையே இல்லை. ஆனால், கிரடிட் கார்ட்டில் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

மற்ற இடங்களில் வாங்கிய பொருளுக்கு கிரடிட் கார்ட்டில் பணம் செலுத்தினால் போதும். கடைக்காரன் கொடுக்கும் காகிதத்தில் நீங்கள் பொருள் வாங்கிய பணம் தான் இருக்கும். அதற்கு தான் நீங்களும் கையெழுத்து போடுவீர்கள். ஆனால், ஹோட்டலில் அப்படி இல்லை. நீங்கள் சாப்பிட்டதற்கு பணம் போக , 'டிப்ஸ்' என்ற Merchant Copy யில் காலியான இடம் இருக்கும். அதை நிரப்பாமல் கையெழுத்து போட்டு கொடுத்தால் அவ்வளவு தான். ஹோட்டல் நிர்வாகிகள் காலியாக இருக்கும் 'டிப்ஸ்' இடத்தை நிரப்பி விருவார்கள்.

உதாரணத்திற்கு, ராஜேஷ் தன் நண்பர்களோடு உணவருந்த உயர்தர உணவகத்திற்கு செல்கிறான். அங்கு பல வகையான உணவுகள், சிக்கன், மட்டன் என்று ஒரு பிடி பிடிதாகிவிட்டது. வெய்ட்டர் 1256 ரூபாய் என்று பில்லை நீட்டுகிறார். ராஜேஷ் ஸ்டைலாக தன் பர்ஸ்ஸில் இருக்கும் கிரடிட் கார்ட் பில் மீது வைக்க, வெய்ட்டர் 1256 ரூபாய்க்கு கார்ட் தெய்த்து கொண்டு வருகிறார். ராஜேஷ் 1256 ரூபாய் சரியாக இருப்பதை பார்த்து கையெழுத்துப் போட்டு கொடுத்துவிடுகிறான். மாத இறுதியில், கிரடிட் கார்ட் கணக்கு வரும் போது ராஜேஷ் சாப்பிட்ட ஹோட்டல் பெயருக்கு 1300 ரூபாய் கட்ட வேண்டும் என்று இருந்தது.

1256 ரூபாய் சாப்பிட்டதற்கு எப்படி 1300 ரூபாய் ??

ராஜேஷ் 'டிப்ஸ்' என்ற இடத்தை நிரப்பாமல் விட்டதால், ஹோட்டல் நிர்வாகம் தங்களுக்கு வேண்டிய தொகை நிரப்பிக் கொள்ள அனுமதி தந்துவிட்டான். அதனால், அவர்கள் 44 ரூபாய் என்று 'டிப்ஸ்' இடத்தில் நிரப்பி 1300 ரூபாய் என்று ராஜேஷ் கிரடிட் கார்ட் கணக்கில் காட்டுகிறது.

கிரடிட் கார்ட் மூலம் டிப்ஸ் தர விருப்பமில்லை என்றால், காலியான இடத்தை அடித்துவிட்டு, Total என்ற இடத்தில் உங்கள் பில் பணத்தை எழுத்தி கையெழுத்து போட்டு கொடுங்கள்.

துணி கடையில் துணி வாங்கும் போது 'டிப்ஸ்' என்று 'Transaction Slip ல் வருமா என்று கேட்டால், வராது. பொதுவாக , உணவக சம்பந்தப்பட்ட இடங்களில் 'டிப்ஸ்' 'Transaction Slip ல் வரும்.

ராஜேஷ் அனுபவத்தை படித்த பிறகு போல் ஹோட்டலில் 'டிப்ஸ்' இடத்தை நிரப்பாமல் யாரும் கிரடிட் கார்ட் ஸ்லிப்பை கையெழுத்து போடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.ஹோட்டலில் ஜாக்கிரதையாக இருங்க !!

Monday, June 14, 2010

படித்ததும் பார்த்ததும் - 14.6.10

ஜீ தமிழ் டி.வி யில் ஞாயிறு காலை 9:30 மணி 10: 30 மணி வரை "மக்களின் மனசாட்சி" நிகழ்ச்சி ஒளிப்பரப்புகிறார்கள். சென்னை மா நகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மக்களின் குறைக் கேட்டு நிபர்த்தி செய்கிறார். ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்ததில் அரசாங்கம் ஒவ்வொரு பகுதிக்கு ஒதிக்கிய நிதி பற்றிய விபரங்களை சொல்லுகிறார்.

முதல் பாதி மக்கள் புகாரும், இரண்டாவது பாதியில் மக்கள் புகாரின் எதிரோலியாகவும் ஒளிப்பரப்பாகிறது.

இது ஒரு நேரடி ஒளிப்பரப்பு. 044- 3919 4113 எண்ணுக்கு தொடர்பு கொண்டு சென்னை மக்கள் தங்கள் குறைகளை மேயரிடம் சொல்லலாம்.

****
கம்யூனிசம் நேற்று - இன்று - நாளை

வருடக்கணக்கில் படித்த ஒரே புத்தகம் இந்த புத்தகமாக தான் இருக்கும். 2007ல் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியது. இன்னும், படித்த முடித்த பாடில்லை. அதிக தகவல் கொண்ட புத்தகம். கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், பாட புத்தக நடையில் இருப்பதால், இரண்டு, மூன்று அத்தியாயம் படித்ததும் அலுப்பு தட்டுகிறது. அதிக தகவல் கொண்ட புத்தகம் என்பதால், புத்தகத்தை படிக்காமல் எடுத்து வைக்கவும் மனமில்லை. தினமும் இரண்டு அத்தியாயமாவது படித்து இந்த வருடத்திலாவது முடிக்க வேண்டும் நினைக்கிறேன்.

விலை.80, பக்கங்கள் : 450
நக்கீரன் வெளியீடு

***

என்ன பதிவு போடலாம் என்று இருந்த பலருக்கு பதிவர் சண்டை உதவியாக இருந்துள்ளது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரின் பதிவு படிப்பதற்குள் தாவு கிளிந்துவிட்டது. இரண்டு பேர் சண்டை எப்படி ஜாதி கலவரம், மத கலவரமாக மாறுமோ அந்த அளவுக்கு பதிவர்களுக்குள் கூட நடக்கும் என்று சமிபத்திய நிகழ்வு காட்டியுள்ளது.

யாரோ, ‘பொட்டிக்கடை’ என்று சொல்லு மாதிரி இருக்கு... அதுக்குள்ள அடுத்ததா... ஆள விடுங்கடா சாமி...!!

***

12.6.10 அன்று, எல்.எல்.ஏ நூலகத்தில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா நடைப்பெற்றது. ஆண்டு விழாவுக்காக பெரிய அளவு கூட்டமில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் தொய்வாக நகர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பே புத்தக ஸ்டால் போட அனுமதி வாங்கி, அதற்கான வேலை செய்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு புத்தகம் விற்பனை ஆகவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை. அதிக புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

வெளியூரிலும் 'நாகரத்னா புத்தக கண்காட்சி' நடத்த திட்டமிட்டுள்ளேன். வெளியூரில் நடக்கும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் அனுப்பினால் கமிஷன் அடிப்படையில் புத்தக கண்காட்சி நடத்தலாம். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Friday, June 11, 2010

கவிதை : வயதில்லா வளர் தமிழ்

மனித உடலின் வயதை சொன்னவர்கள்
உன் வயதை துள்ளியமாக
சொன்னவர் உண்டா ?

வங்க கடலின் ஆழம் கண்டவர்கள்
உன்னை பற்றின பாடலின்
கணக்கு எடுக்க முடியுமா ?

வரப் போகும் இயற்கை சீற்றத்தை
முன் கூட்டியே அறிவிப்பவர்கள்
வாழ்ந்துக் கொண்டு இருக்கும்
உன் சாதனையை எல்லாம் அறிவார்களா ?

வடக்கில் இருந்து எத்தனை மொழி
உன்னை ஆக்கிரமிப்பு செய்ய வந்தாலும்
முச்சங்க வரலாற்றில் முதிர்ந்த மொழியே
உன்னை வெல்ல யாரால் முடியும் !

ஆயுதம் தாங்கி பல படைகள் வந்தாலும்
அறம் பாடும் பாடலின் முன் எப்படி நிற்கும் ?
சிந்தனை வளமும் சீரிய மாண்பும்
செம்மொழியாம் தமிழ் மொழி நீகருக்கு எம்மொழி ?

வந்தவர்கள் ஆட்சி செய்தாலும்
வாழ வைக்க உதவுவது எங்கள் மொழியே !
வருடங்கள் பல சென்றாலும்
வயதில்லா மொழி தமிழ் மொழியே !

(நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டிக்காக தமிழை வாழ்த்தி எழுதிய கவிதை )

Thursday, June 10, 2010

ஓரின சேர்க்கை புரட்சி : ஸ்டோன் வால் சம்பவம்

நியூ யாக் நகரத்தின் அருகில் உள்ள கிரீன்விச் விலேஜ் இடத்தில் கிருஸ்டபர் தெருவில் உள்ளது ஸ்டோன்வால் ஹோட்டல்.

விடுமுறை நாட்களில் மூன்று டாலர் அனுமதி கட்டனமாக வசூலிக்கப்படும். இரண்டு டிக்கெட் கொடுப்பார்கள் மற்றும் இரண்டு கிலாஸ் டிரின்க்ஸ். வேண்டியதை குடிக்கலாம். இத்தனைக்கும் அந்த ஹோட்டலுக்கு மது விற்க லைசன்ஸ் வழங்ப்படவில்லை. முறையான எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியும் கிடையாது. எந்த வழியில் வந்தோமோ அந்த வழியில் தான் செல்ல வேண்டும். இருந்தும், அந்த ஹோட்டலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டு இருக்கும். பாட்டும், கும்மாளமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

காரணம், அந்த ஹோட்டல் ஓரின சேர்க்கையர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஹோட்டல். அங்கு வருபவர்கள் எல்லோரும் கே, லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள். ஆனால், அங்கு உறவில் ஈடுபட அனுமதியில்லை. குடிக்கலாம். பாடலாம். ஆடலாம். மற்ற படி போதை மருந்து, விபச்சாரம், பணம் கைமாற்றுவது போன்ற எந்த வித சட்ட விரோதமாக செய்ய அனுமதியில்லை. இருந்தும், போலீஸ் மாதம் ஒரு முறையாவது ரைட் வருவார்கள்.

போலீஸ் வந்ததும் கலர் விளக்கு அனைத்து வெள்ளை விளக்கு போடப்படும். ஆடியவர்கள், அடையடித்தவர்கள் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். போலீஸ் விற்க அனுமதியில்லாத மதுபானங்களை பரிமுதல் செய்வார்கள். யாராவது அரை நிர்வாணமாக, ஆபாசமாக உடையணிந்தால் அவர்களையும் கைது செய்வார்கள்.

ஸ்டோன் வால் ஹோட்டலில் 'ட்ரேக்' (Drag) நடனம் மிகவும் பிரபலம். ஆண் ராணி போல் வேடமிட்டு ஆடுவதும், பெண் ராஜா போல் வேடமிட்டு ஆடுவதும் பலர் ரசித்து பார்ப்பார்கள். இப்படி நடனமாடுபவர்கள் கூட முறையான உடையணிய வேண்டும். இல்லையென்றால் ரைட் வந்த போலீஸ் இவர்களையும் கைது செய்யும்.
சில சமயம் ஹோட்டலில் வேலை செய்பவர்களை கூட கைது செய்திருக்கிறது.

இப்படி எல்லாம் பார்த்து பழகிபோனவர்களுக்கு அன்று இரவு நடந்த சம்பவம் ஒரு பெரும் புரட்சி ஏற்ப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.ஜூன் 28, 1969

காலை 1:20 மணி இருக்கும். இரண்டு காவல் அதிகாரிகள் காஸ்ட்ரோ தெருவில் நுழைந்தனர். அங்கு கையில் மது கோப்பையுடன் பலர் ஜோடி ஜோடியாக நடந்த வண்ணம் இருந்ததை கவனித்தனர். பொது இடம் என்று பார்க்காமல் சில ஜோடிகள் அங்கையே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தனர். ரௌவுன்ட்ஸ் வந்த அதிகாரிகளுக்கு இதை பார்க்க அருவருப்பாக இருந்தது. ஆனால், எந்த ஜோடியும் இதை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் அவர்களாகவே இருப்பது இது போன்ற இடத்தில் தான். அரசாங்க பார்வையில் இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஆம் ! அன்றைய தேதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை அப்படி தான் அமெரிக்கா கருதிவந்தது.

இந்த தெருவில் போலீஸ் வருவதும், ரைட் நடத்தி வெளியே துரத்துவதும் அவர்களுக்கு பழகிப் போன ஒன்று. பொழுது போகவில்லை என்றால் போலீஸ் அடிப்பதும், காவலில் இரண்டு மூன்று நாள் வைப்பதும் ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கு இந்த விபரம் தெரியாது. போலீஸ் ரைட்டுக்கு ஹோட்டல் உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல் வெள்ளை விளக்கு எரிந்தது. பாட்டு, ஆட்டம், அரட்டை நின்று நிசப்த்தம் நிழவியது. புதியவர்களுக்கு பயம். தங்களை கைது செய்து விடுவார்களோ, நாளை நமது முகம் பேப்பரில் வந்தால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற கவலை வேறு.

பெண் ஓரின சேர்க்கையாளர்களை பெண் போலீஸ் வைத்து சோதனை செய்தனர். ஆண் ஓரின சேர்யாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டினர். மதுபானங்களை ஹோட்டலில் இருந்து பரிமுதல் செய்தனர். வழக்கத்துக்கு மாறாக 200 பேர்க்கு மேல் இருந்ததால் சோதனை செய்து ஒவ்வொருவராக வெளியே அனுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு சிலரை மட்டும் கைது செய்தனர்.

வெளியே வந்தவர்கள் உள்ளே தங்கள் நண்பர்களுக்காக காத்திருந்தனர். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று உள்ளூர பலர் பயந்து கொண்டு இருந்தனர். எப்படியாவது காவலர் பிடியிலிருந்து தப்பிக்க ஒருவர் நினைத்தார். ஆனால், காவலர் அவரை விடவில்லை. பிடித்துக் கொண்டனர். பத்திரிகையில் தன் பெயர், படம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் காவலரை தள்ளினார். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் காவலரை தாக்கியது இது முதல் தான் முறை.

சோதனைக்கு வந்த காவலர்களில் ஒருவர் ஸ்தம்பித்தார். இரண்டு காவலர் அடித்தவனை பிடித்த போது, யாரோ ஒருவர் " We shall Overcome" என்ற பாடலை பாடினார். அந்த பாடல் அமெரிக்க மக்கள் சிவில் உரிமைக்காக பாடப்படும் கீதம். இந்த பாடலை பாடியதும், வெளியே இருந்த ஓரின சேர்க்கையாளர் உத்வேகம் பிறந்தது. உள்ளிருக்கும் தங்கள் நண்பர்களை காவலர் பிடியில் இருந்து கொண்டு வர முயன்றனர். அவர்களை தடுக்க காவலர்கள் தாக்கினர். அடிப்பட்டவர்களும் திரும்பி தாக்க தொடங்கினர். சோதனைக்கு வந்த காவலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவரை அடிவாங்கியவர்கள் திருப்பி அடித்தது சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிஸ்டோபர் தெருவே விடியற்காலை வரை கபளிகரமாக இருந்தது.

அடுத்த நாள் செய்திதாலில் இது தலைப்பு செய்தியாக இருந்தது.

"கே பவர் !!! " (Gay Power)

Wednesday, June 9, 2010

கற்பனை கதையல்ல...! - 3

"எவ்வளவு தைரியம் இருந்தா சுட்டுவேன் சொல்லியிருப்பான்" என்று ராமு மேல் கோபமாக இருந்தார் ராதாகிருஷ்ணன். அவன் என்ன தான் முயற்சி பண்ணினாலும் காங்கிரஸ் தான் இந்த தேர்தலில் ஜெய்க்கும். தி.மு.க வால் ஒண்ணும் பண்ண முடியாது என்ற நம்பிக்கையில் ராதா இருந்தான்.

இருந்தாலும், தான் ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவருக்கு ராமுவால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளூர இருக்க தான் செய்தது. ராமு உயிருடன் இருக்கும் வரை தான் ஆதரிக்கும் தலைவனுக்கு ஆபத்து தான். அவனை கொல்ல வேண்டும். அது தான் சரியான முடிவு.

தனக்கும், ராமுவுக்கும் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் நெருங்கி பழகியவர்கள். போன் போட்டு தனியாக பேச வேண்டும் என்று சொல்லி கொன்று விடலாம். இந்த சமயத்தில் தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னால் சந்தேகம் வந்தாலும் வரலாம். தொழில் சம்மந்தமாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி தான் அவனை சந்திக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் கூட யோசிக்காமல் ‘வாசு’ பெயர் தான் நினைவுக்கு வந்தது. வாசுவுக்கு சந்தேகம் வராதப்படி பேசினார் ராதா.

" ஒரு கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கு. மாசம் 750 ரூ சம்பளம். லாபத்துல ரூபாய்க்கு நாலணா தர்றேங்கறாங்க. ராமு வச்சு படம் பண்ணனும் சொல்லுறாங்க..." என்றார்.

வாசு சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதித்தார். ராமு வைத்து எடுத்த முந்தைய படம் பெரிய ஹிட். மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க நல்ல பைனான்ஸியர் வேறு கிடைத்துவிட்டார். கதையாவது.... வசனமாவது. பிறகு பார்த்து கொள்ளலாம். ராமு அண்ணன் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் ஹிட் தான். இப்படி பல எண்ண குதிரைகள் வாசு மனதில் ஓடியது.

பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங்கை தொடங்கி விட வேண்டும். அப்போது தான் பைனான்ஸ் பண்ணுறவங்களுக்கு நம்பிக்கை வரும் என்று ராதா ஆலோசனை வழங்கினார்.

வாசு ஷூட்டிங்கில் இருந்த ராமுவிடம் கோயம்பத்தூர் பார்ட்டி பற்றி சொன்னார். ராமுவும் படம் பண்ண சம்மதித்தார்.

கொஞ்ச நாட்கள் கலித்து, ராதா வாசுவிடம், "கோயம்பத்தூர் பார்ட்டிங்க அசோகா ஹோட்டல்ல தங்கியிருக்காங்க. நாளைக்கு நல்ல நாளு. ராமுவ பார்த்து அட்வான்ஸ் கொடுக்கனும்னு சொல்லுறாங்க..."

இவ்வளவு சீக்கிரம் படம் தொடங்க முடியும் என்று வாசு நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ராதாவின் சதி வேலை தெரியாமல் போனை நோக்கி நடந்தான் வாசு.

ராமுவுக்கு போன் போட்டு தொடர்பு கொள்ள நினைத்தான் வாசு. அவர் மனைவி தான் எடுத்தார். தேர்தல் பிரசாரத்துக்கு சென்று இருப்பதாக சொன்னார். நடிப்பு, அரசியல் என்று கொடி கட்டி பறப்பவர். நாம் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க நினைத்தால் எப்படி ? ராதா அவர்கள் சொன்ன வாய்ப்பை நழுவ வாசுவுக்கு மனமில்லை.

ராதா வாசுவிடம், "இன்னாப்பா இது... கோயமுத்தூர் பார்ட்டி வெயிட் பண்ணிட்டிருக்காங்க " என்று சலிப்புடன் முணுமுணுத்தார்.

மணி நான்கானது.

" மறுபடியும் ராமு தோட்டத்துக்கு போன் பண்ணி வந்துட்டாரா பாரு" என்றார் ராதா. தன்னை விட ராதாவுக்கு ராமுவுடன் படம் பண்ண ஏன் இவ்வளவு ஆரவம் என்று தோன்றியது. எத்தனையோ பேரை வளர்த்து விட்டவர். அவரின் அக்கரை மீது சந்தேகம் பட கூடாது என்ற எண்ணத்தை அப்போதே அழித்தான்.

மீண்டும் போன் போட்டார். இந்த முறை ராமுவே போனை எடுத்தார்.

"இப்பதான் பிரசாரம் முடிச்சிட்டு உள்ள நுழைஞ்சேன். நீங்க போன் பண்ணதா அம்மா சொன்னாங்க. என்ன விஷயம் ?" என்றார்.

வாசு கோயம்பத்தூர் பார்ட்டி வந்த விபரத்தை சொன்னார்.

"நாள் முழுக்கப் பிரசாரம் பண்ணிட்டு இப்பதான் வர்றேன். இன்னும் சாப்பிடக்கூட இல்லை. இன்னைக்கு வேண்டாம், நாளைக்கு ஸ்டுடியோவில பார்ப்போம்" என்று சொல்லி போனை துண்டிக்க பார்த்தார் ராமு.

"உங்கள பாத்தாச்சுன்னாக்க உடனே வேலைகளை ஆரம்பிச்சுடலாம். ஒரு பத்து நிமிஷம் உங்களை பார்த்துட்டு போயிடறோம்" என்று பணிவோடு கேட்டார் வாசு.

வேறு வழியில்லாமல் ராமுவும் "சரி... சீக்கிரம் வாங்க " என்றார்.

ராதாவும், வாசும் ராமு தோட்டத்திற்கு சென்றனர். இரவரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தனர். சாப்பிட்டு முடித்து ராமு வந்தார்.

இருவரையும் நலம் விசாரித்து வந்த விஷயத்தை எப்போது தொடங்குவார் என்று ராமு இருந்தார்.

வாசு, "அண்ணே, விஷயத்தைச் சொல்லுங்க" என்று ராதாவை பேச சொன்னான்.

ராதா, " நீ தானே புரோடியூசர். நீ தான் கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கிறது, அவங்க எவ்வளவு பணம் கொடுக்குறாங்கனு விபரத்த சொல்லனும்" என்றார்.

வாசு ராதா அவர்கள் சொன்ன விபரத்தையும், கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கும் விபரத்தையும் சொன்னார்.

"மாசத்துக்கு பத்து கால் ஷீட்னு ஆறு மாசத்துக்குக் கொடுத்தீங்கன்னா படத்த முடிச்சுடலாம்” வாசு ராமு சம்மதிப்பார் என்ற ஆர்வத்தில் இருந்தார்.

ராமு," 60 கால்ஷீட் தேவையிருக்காதண்ணே. அப்படியே தேவைன்னா ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் ஆறுமாசத்துக்கு, மாசத்துக்குப் பத்து கால்ஷீட் கொடுக்கறேன். அப்படியும் படம் முடியலேன்னா முடியற வரைக்கும் டேட் தரேன்" என்று சொல்லிவிட்டு ராமு ராதாவிடம், "என்னண்ணே, வாசு எல்லா கால்ஷீட்டையும் கேட்கிறாரே! " என்று சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியை நகர்த்தினார்.

அப்போது, தன் காதுக்கு கீழே இடிபோல சதையை பிய்த்துக் கொண்டு ஒரு தோட்டா செல்வதை ராமு உணர்ந்தார். ராதாவின் கையில் தூப்பாக்கி இருந்தது.

"என்னண்ணே, இப்படிச் செய்துட்டீங்களே " என்று ராமு என்கிற எம்.ஜி.ஆர் அவர்கள் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே தன்னையும் இரண்டு முறை ராதா என்கிற எம்.ஆர்.ராதா சுட்டுக் கொண்டார்.

Monday, June 7, 2010

படித்ததும் பார்த்ததும் - 7.6.10

விஜய் டி.வி 6ல் இருந்து 26வது இடம்

ஜூனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் ஜோடி நெ.1 என்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறமையை விட அவர்களின் கண்ணீரை காட்டுவதில் நெ.1 ஆக விஜய் டி.வி இருக்கிறது. ரியால்டி ஷோ என்ற பெயரில் சினிமா படம் போல் நடத்தும் இது போன்ற நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. இதுவரை, வீட்டில் உள்ளவர்கள் பார்த்த நிகழ்ச்சியை குழந்தையை 'Pre-K.G' சேர்த்த பிறகு விஜய் டி.வி 6 ல் 26 வது இடத்திற்கு மாற்றிவிட்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் குழந்தைகளின் மனதை பாதிக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை.

வன்முறை, காமம் மட்டும் குழந்தைகளை பாதிப்பதில்லை... அவர்களின் தன்னம்பிக்கை அழிக்க நினைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் கூட அவர்களை பாதிக்குமாம்.

****

சில்வியா
விலை.70, பக்கங்கள் : 110

சில்வியா பிளாத் என்னும் கவிஞர் சிறுவயதில் தற்கொலை செய்து கொண்டு போவதற்கு முன் பிரமிப்பூட்டும் சில கவிதைகள் எழுதினார். அவருக்கு 'Bipolar disorder' என்ற மன நோய்யும் இருந்தது.

சில்வியா ப்ளாதின் வாழ்க்கைக் குறிப்பு வாசித்த அனுபவத்தை வைத்து தன் கணேஷ், வசந்த் கதாபாத்திரங்கள் கொண்டு சுஜாதா அவர்கள் குறு நாவால் உருவாக்கியிருக்கிறார். சுஜாதாவின் எழுத்து நடையை பற்றி விமர்சனம் செய்ய இன்னும் நான் வளரவில்லை.

'சில்வியா' குறுநாவலோடு ஏழு சிறுகதைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சுஜாதா அவர்கள் இறுதி நாட்களில் வெளிவந்த நூல்களில் இந்த நூலும் ஒன்று. (டிசம்பர்,2006).

வயதானாலும் சிங்கத்தின் எழுத்தில் குறையில்லை.

***
இந்தியா முழுக்க இருக்கும் காவல்கள் பற்றி புள்ளி விவரத்தை ஹிந்து நாளேடு வெளியிட்டுள்ளது. மார்ச் 31,2010 வரை ஒரு லட்ச இந்திய மக்களுக்கு 160 காவலர்கள் பணிபுரிகிறார்களாம். அதிக பட்சமாக நக்சலைட் நிரம்பி இருக்கும் ஜார்கண்ட், சட்டிஸ்கார்ஹ் போன்ற பகுதியில் ஒரு லட்ச மக்களுக்கு 205 காவலர்கள் இருக்கிறார்களாம்.

இதில் வேதனையான விஷயம், இன்னும் 3,35,000 இடங்கள் காவல்த்துறையில் நிரப்ப படாமல் உள்ளதாம்.

***

ஜூன். 3 உலக தமிழ் புத்தக தினமாக அறிவித்த பிறகு கூடிய விரைவில் ஜூன் மாதம் புத்தகக் கண்காட்சி நடத்த படலாம் என்று தோன்றுகிறது. இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் நடைப்பெறலாம்.

வருடம் இரண்டு முறை புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டும் என்று பலரது விருப்பம் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரலாம். பொருத்திருந்து பார்ப்போம்.

Friday, June 4, 2010

தமிழால் முடியும் !

இமய மலையில் வழிவந்து
ஆரியர் நா வழி புகுந்து
தெய்வ பாஷையாக திகழ்ந்து
வாழ்கிறது வடக்கில் ஒரு மொழி !

சொற்ப எழுத்துக்கள் கொண்டு
காலனியாதிக்க மொழியாய் இருந்து
உலகம் முழுக்க பரவி
சரியாக பேசப்படாமல்
உள்ளது இன்னொரு மொழி !

மொழிகளுக்கு எல்லாம் அன்னையாய்
பேச தெரிந்தவர்களுக்கு தந்தையாய்
உடன் பிறந்த சகோதரனாய்
நம்முடனே வளர்ந்தும்
வளர்த்துவிடுவது தமிழ் மொழி !

கம்பனின் எழுத்தானியை பிடித்து
கம்பனின் பாடலில் நடந்து
பாரதியின் வரியில் வாழ்ந்து
தமிழை ஒதுக்க நினைத்தவர்களை
ஓரம் கட்டியது எங்கள் மொழி !

தமிழே !
நீ பிறந்தது இங்கே
உன்னை ஆட்சி மொழியாய்
மாற்றியவர்கள் வெளிநாட்டில் !
இணையதளத்திலோ
நீ இருப்பது மூன்றவது இடத்தில் !

உலக முழுக்க ஆட்சி மொழியாய்
இணையத்தில் முதல் இடமுமாய்
தமிழே !
உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது !!

எங்கள் தமிழால் முடியும் !!

(நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை வாழ்த்தி, சென்னையில் நடந்த ஒரு கவியரங்கில் சொன்ன கவிதை.)

Thursday, June 3, 2010

நட்பில் ஒரு காதல் !! - 2

முதல் பகுதி - 1" பொளாரிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.

" நான் டி.சி.எஸ்" என்றேன்.

" எனக்கு என்னவோ பொளாரிஸ் சேறலாம் தோனுது. டி.சி.எஸ் விட பெரிய கம்பேனி இல்லனாலும், சிட்டிக் குள்ள ஒரு ஆபிஸ் வெச்சிருக்கான். சீக்கிறம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் "

அவள் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அவள் முடிவு எடுத்துவிட்டு என் கருத்தை கேட்பது எனக்கு பிடிக்காது. அந்த முடிவை எந்த பதில் சொல்லியும் மாற்ற முடியாது. ரேகா எப்போதும் இப்படி தான். யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பாள். நான் பேசாமல் அமைதியாக வந்தேன்.

நாங்கள் வீட்டுக்கு திரும்பும் போது நல்ல மழை. முன்பே பஸ்ஸில் ஏறிவிட்டதால் நனையவில்லை. ஆனால், நனையாமல் இருந்தது ரேகாவுக்கு வருத்தம் தான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மழை நீரை பிடித்து என் மீது தெளித்தாள். முதல் முறையாக அவள் கண்ணில் காதலை கண்டேன்.

" கை ரொம்ப ஜில்லுனு இருக்கு.... பாரேன்" என்று என் அனுமது கேட்காமலே கை பற்றினாள். அந்த ஸ்பரிஸ்த்தில் அவள் காதலை இன்னும் உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது. மழை விடாமல் பெய்தது. ரேகாவிடம் குடையிருந்ததால், மழையில் நனையாமல் இருவரும் குடைக்குள் நடந்தோம். பஸ்ஸில் அமர்ந்து வந்த நெருக்கத்தை விட குடைக்குள் எங்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.

அவள் தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குடையில் இருந்து வெளியே வர நினைத்த போது, " ரொம்ப வெட்கப்படாத.. குடைக்குள்ள வாடா" என்றாள்.

இருவரும் அவள் வீட்டு தெரு முனை வரை பேசிக் கொண்டு நடந்தோம்.

" எனக்கு வர போற புருஷன் கூட இப்படி கொட புடிக்க மாட்டான்" என்று வெட்கத்தோடு சிரித்தாள்.

ரேகா சொன்னது போல் நான் ட்யூப் லைட் தான். அவளின் காதலை இப்போது கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னை விட முட்டாள் யாருமில்லை.

மாடியில் தம் அடித்துக் கொண்டே யோசித்தேன்.

ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் அம்மா எனக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்த தேதி குறித்துவிட்டாள். "உனக்கு புடிச்ச பொண்ண சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முன்பு சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தெரிந்தது. அம்மாவிடம் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதை விட முதலில் ரேகாவிடம் காதலை சொல்ல வேண்டும்.


தம் முடித்து கீழே வந்தேன். நான் ரேகாவுக்கு போன் பேசலாம் என்று நினைக்கும் போதே, என் செல்போன் மணி ஒலித்தது. ரேகா தான்.

செல்போனை எடுத்து, " சொல்லு ரேகா ! " என்றேன்.

"உன்ன அவசரமா பார்க்கனும். என் வீட்டுக்கு வா " என்றாள்.

என்னது என்று கேட்க தோன்றவில்லை. அவள் அழைக்கவில்லை என்றாலும் நானே அவளை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தேன். பத்து நிமிடத்தில் உடைகளை மாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றேன்.

முகம் கடு கடுவென கோபத்தோடு இருந்தாள். கணவனுக்காக காத்திருக்கும் மனைவி கோபம் போல் எனக்கு தெரிந்தது.

" ஹாய் ரேகா... என்ன அவசரமா கூப்பிட்ட...." என்றேன்.

அவள் முகம் மாறவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது.

" ராஜா ! ஏன்டா என்கிட்ட உண்மைய மறைச்ச...." என்று கண்ணீருடன் கேட்டாள்.

அவளிடம் காதலை சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. அவள் என் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சொல்லாமல் இருந்ததற்கு கண்ணீர் சிந்துவாள்.

" ரேகா ! இதுக்கு போய்யா அழுவுற. நாம மூனு வருஷமா பிரண்ட்ஸா இருக்கோம். நம்ப லவ்வ சொல்லி தான் புரிஞ்சிக்கனுமா..." என்றேன்.

" நான் லவ்வ பத்தி கேட்கல. உன் நிச்சய தார்த்தம் பத்தி கேட்டேன் " என்றாள்.

இவளுக்கு எப்படி தெரியும். காதலனின் நிச்சய தார்த்தம் என்றால் கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், என் காதலுக்கு அது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அவள் காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், என் நிச்சயதார்த்ததை நிருத்திவிட போகிறேன். அம்மாவிடம் காதலை பற்றி சொன்னால், கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்.

நான் மாடியில் தம் அடிக்கும், என் செல்போனுக்கு ரேகா தொடர்பு கொள்ள அம்மா போனில் என் கல்யாண விபரத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

" ரேகா ! இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நீ மட்டும் சரி சொல்லு. அம்மா கிட்ட நம்ப லவ்வ சொல்லி ஓ.கே வாங்கலாம்."

"அது எல்லாம் வேண்டாம். நீ உங்க அம்மா சொல்லுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ..!! " என்றாள்.

பெரிய சுத்தியல் தலையில் விழுந்தது போல் இருந்தது. என் மேல் இருக்கும் காதலை பல சமயத்தில் உணர்த்தியவள் அவள் தான். அவளை என்னை காதலிப்பது நூறு சதவீத உண்மை. ஏன் இப்படி ஏற்க மறுக்கிறாள்.

" என்ன ஆச்சு உனக்கு ? நம்ப லவ் பண்ணுறதுக்கு முன்னாடி அம்மா பொண்ணு பார்த்தது. இப்ப நினச்சா கூட நிறுத்தலாம்."

" இல்ல வேண்டாம் ராஜா. எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல்ல..."

வழக்கம் போல் முடிவு எடுத்து விட்டு என்னிடம் பேசுகிறாள் என்று புரிந்தது. அவள் முடிவை எப்படியாவது மாற்றிவிட்டுவேன். அந்த அளவிற்கு எங்கள் காதல் மீது நம்பிக்கை இருந்தது.

" நீ என்ன லவ் பண்ணா போதுமா. நா உன்ன லவ் பண்ணவே இல்ல. " என்றாள்.

அவள் சொன்னதை நான் மட்டுமல்ல படிக்கும் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அவளிடம் அதற்கு மேல் பேச எனக்கு விருப்பமில்லை. காதல் இல்லை என்று பொய் சொல்லுபவளிடம் என்ன பேசினாலும் வீண் தான். இவளாகவே முடிவு எடுத்து விட்ட பிறகு, என் பேச்சை மதித்ததில்லை. இப்போது மட்டும் என்னால் எப்படி எதிர்பார்க்கமுடியும்.

என் நிச்சயதார்தம் நன்றாக நடந்து முடிந்தது. இரண்டு மாதத்தில் திருமணமும் நடந்தது. சிரித்த முகத்துடன் ரேகா என்னை வாழ்த்தினாள். கொஞ்ச தூரம் சென்றதும் அவள் கண்ணில் நீர் துடைப்பதை பார்த்தேன். எந்த பதிலும் பேச முடியாமல் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

இன்று முதலிரவு.

பல கனவுகள் சுமந்து ராதா அறைக்கு வந்தாள். அவளிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று தோன்றியது. காதல் இல்லை என்று சொன்ன காதலை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னை உறுத்தியது. அமைதியாக அவள் கொடுக்கும் பாலை வாங்கி கொடுத்து, மீதி பாதிக் கொடுத்தேன்.

கொஞ்சம் நேரம் பேசினோம். மாற்று புடவை அணிய வேண்டும் என்றாள். என் கண்ணை முட சொன்னாள். புது வெட்கம் தெரிந்து திரும்பினேன்.

இருந்தாலும், பல ஆண்டுகள் சீடியில் பார்த்த ஆன்டிகளும், பியூட்டிகளும் கண்ணில் வளம் வர தொடங்கினர். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என் மனைவியை கட்டிபிடித்து கட்டிலில் தள்ளினேன்.

"வலிக்குதுங்க...."

" ஸாரி.... ரேகா......!!"

Wednesday, June 2, 2010

நட்பில் ஒரு காதல் !!

எல்லாம் முடிந்த பிறகு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க கூடாது. நிலைமை கை மீறி போய்விட்டது. இரண்டு மாதத்தில் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் ரேகாவுக்கு என் மீது இருந்த காதல் தெரிந்திருக்க கூடாது. மூன்று வருடமாய் தோழியாய் இருந்து, அவள் காதலை இப்போது புரிந்துக் கொண்ட என் முட்டாள் தனத்தை என்ன சொல்லுவது.

இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம். நான் ரேகாவிடம் பழகிய இரண்டாவது வருடத்தில் இருந்தே காதலிக்க தொடங்கிவிட்டேன். அடிக்கடி ' நட்பை பற்றி பெருமையாக பேசி, நட்பை பற்றின எஸ்.எம்.எஸ் அனுப்பி என் மீது இருக்கும் நட்பை மட்டுமே உணர்த்தினாள். நட்பை தக்க வைத்து கொள்ள, காதலை தொலைக்கும் ஒரு கோடி ஆண்களிள் நானும் ஒருவனாக இருக்க மூடி மறைத்துவிட்டேன்.கல்லூரி முடித்த கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.10,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், ரேகா வேலை தேடி அலைந்தாள்.

ஒரு நாள்... "டேய் ! சென்னை ட்ரேட் சென்டர்ல ஜாப் பேர் நடக்குது.ரொம்ப தூரம். என்ன வண்டியில கூட்டிட்டு போறியா" என்றாள்.

அவளிடம் எனக்கு பிடித்ததே என் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வது தான். என் செல்போன், பர்ஸ், புத்தகம் என்று என் அனுமதி கேட்காமலே எடுத்து பார்ப்பாள். 'தொடாதே' என்று சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.

அவள் அழைத்தது ஞாயிற்றுகிழமை என்பதால், அவள் அம்மாவின் அனுமதியுடன் ரேகாவை என் வண்டியில் அழைத்து சென்றேன். உட்காரும் போது, "அடிக்கடி பிரேக் போடாம வண்டி ஒட்டுடா..."

" எதிர்க்க வண்டி வந்தா.... பிரேக் போடாம என்ன பண்ணுறது "

" போடா டியூப் லைட்..." என்று அவள் சொல்ல, அவள் எதற்காக அப்படி சொன்னால் என்று நினைத்தப்படி வண்டி ஓட்டினேன். வேலைக்காக பலர் பெரிய க்யூவில் ட்ரேட் சென்டரில் நின்றுக் கொண்டு இருந்தனர்.

" இது வேலைக்காவாது வா போலாம்" என்றேன்.

" உன் பிரண்டுக்காக வெயிட் பண்ணமாட்டியா...!" என்று தன் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினாள். காதலிக்கும் பெண்ணிடம் கூட பொய் சொல்லி வந்துவிடலாம். ஆனால், தோழியாக இருக்கும் பெண்ணிடம் பொய்யும் சொல்லமுடியாமல், உண்மையும் சொல்ல முடியாமல் தவித்தேன். வேறு வழியில்லாமல், அவளுக்காக ட்ரேட் சென்டரில் காத்திருந்தேன். அவள் "உன் பிரண்டுக்காக..." என்று சொன்னது, என் காதைல் " உன் காதலுக்காக" என்றே ஒலித்தது.

அவள் வரும் போதும் மதியம் 1:30 மணியிருக்கும்.

"எப்படி இருந்தது ஜாப் பேர்" என்று கேட்டேன்.

" இப்படி எனக்காக வெயிட் பண்ண ஆளு இருந்தா.... இந்த மாதிரி எத்தன ஜாப் பேர் வேணுமானாலும் வருவேன் " என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

கொஞ்ச நேரத்தில், "போலாரிஸ்ல வேலை கிடைக்கும்னு தோணுது " என்றாள். அவள் பேசும் போது என் தோள் மீது கை வைத்ததால், அதன் பின் அவள் சொன்னது என் காதில் எதுவும் விழவில்லை. என் உடல் கொஞ்சம் நெளிய தொடங்கியது. அவள் வெட்க படுவதை வண்டு கண்ணாடியில் பார்த்தேன்.

அவளை வீட்டில் விட்ட பிறகு, " சரிடா...! நாளைக்கு பார்ப்போம் " என்றாள்.

" என்னது நாளைக்கா ! ஒரு வாரம் ஆபிஸ் வோர்க் ரொம்ப டைட்டா இருக்கும். நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுவோம்" என்று சொல்லி வண்டி எடுத்தேன்.

"என்னடா உடனே போற...பேசுறதுக்கு ஒண்ணுமில்லையா" மெல்லிய குரலில் கேட்டாள்.

" இப்பவே டைம்மாச்சு. வீட்டுல போய் தூங்கனும் " என்றேன்.

" என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற" என்றாள்.

" என்ன சொன்ன... ?"

" ம்ம்....ஒண்ணுமில்ல.... பை சொன்னேன்" என்று சொல்லி செல்லமாக கோபத்துடன் சென்றாள். 'ஒரு வேலை அதுவா இருக்குமோ ' என்று மறை முகமாகவோ கேட்டுபார்த்தால், " பிரண்ட்ஸ் கிட்ட இப்படி பேச கூடாதா...." என்று ஒரு குண்டை போடுவாள். எங்கள் மூன்று வருட நட்பில் என்னை இப்படி குழப்புவாள்.

இதே போல், டி.சி.எஸ்யில் இண்டர்வியூ என்றாள். என் வண்டி சரியில்லாததால், அவளை பஸ்ஸில் அழைத்து சென்றேன். வார வாரம் அவளை இண்டர்வியூ அழைத்து செல்லும் பாடிகார்ட் வேலை செய்கிறோமோ என்று கூட தோன்றியது.

இண்டர்வியூ முடித்து வந்ததும் இந்த வேலையும் கிடைக்கும் என்று கூறினாள்.

" பொளாரிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.

" நான் டி.சி.எஸ்" என்றேன்.

" எனக்கு என்னவோ பொளாரிஸ் சேறலாம் தோனுது" " என்றாள்

( காதல் அடுத்த பதிவில் முடியும் )

Tuesday, June 1, 2010

'ஓரின சேர்க்கை' பற்றிய புதிய தொடர்

கோவா படத்தை பார்த்து வெளியே வந்து நண்பர் ஒருவர் என்னிடம், " அரவிந்த் - சம்பத் 'கே' உறவு முறை பல பேருக்கு புரியவில்லை. அதனாலேயே காமெடி தெரியல" என்றார். ( 'கோவா' படத்தில் காமெடியே இல்லை என்ற வாதத்திற்கு நான் வரவில்லை).

'கேர்ல் பிரண்ட்' ( ஹிந்தி) படத்தில் இஷா கோபிகர் தன் தோழி அம்ருதாவை தன்னுடன் வைத்து கொள்ள அவள் காதலனை கொலை செய்யக் கூட துணிகிறாள். படம் வெளிவந்ததும் பெரிய சர்ச்சையானது. அது மட்டுமில்லாமல், 'கேர்ல் பிரண்ட்' வார்த்தையே கெட்ட வார்த்தையாக நினைத்தார்கள்.

‘ஃபையர்‘ (ஆங்கிலம் & ஹிந்தி) படம் வெளியான போது பல இடங்களில் படத்தின் போஸ்டர் பற்றி எரிந்தது.இப்படி ஓரின சேர்க்கையை பற்றி படம் வந்தால், ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது சர்ச்சைக்குளாகிறது. நம் நாட்டில் திருநங்கைக்காக மீது காட்டும் அன்பும், அனுதாபம் கூட இவர்கள் மீது காட்டுவதில்லை என்பது தான் நிதர்சனம். திருநங்கைக்காக போராடுபவர்கள் கே, லெஸ்பியன் போராடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பலர் இதை வெளிப்படையாக பேச பயப்படுகிறார்கள். காரணம், நம்மை ஓரின சேர்க்கை பட்டியலில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சம். இதை மன நிலை நோய் என்று கருதும் சமூகத்தில் நாமும் ஒதுக்கப்படுவமோ என்று தயக்கம் இன்னொரு புரம். திருநங்கை பற்றி தெரிந்த அளவுக்கு கூட ஓரின சேர்க்கையை பலருக்கு தெரியவில்லை.

உலகம் தோன்றி பல ஆயிர வருடங்களானதில் இருந்து ஆண்-பெண் உறவு போல் ஆண்-ஆண், பெண் - பெண் உறவுகள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. சாக்ரடீஸ், மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், மைக்கேல் ஏஞ்சலோ, பைரன், ஆஸ்கர் ஒயில்ட் என்று தொடங்கி இன்றைய பாடகர் எல்டன் ஜான் வரை நீளுகிறது. இப்படி பல ஆயிர வருடங்களாக இருக்கும் உறவை ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனம், ஒரு பால் உறவை மனநலக் கோளாறாகத் தன் பட்டியலில் வைத்திருந்ததை 1993ல் நீக்கியது.

அமெரிக்க மன நல சிகிச்சையாளர் சங்கத்தில் இருந்து 1973வில் ஹோமோசெக்ஷூவாலிட்டியை மன கோளாறுகள் பட்டியலிருந்து எடுத்துவிட்டது.

ஒரு சில நாடுகளொரின சேர்க்கைக்கு அங்கிகரிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதை பெரிய குற்றமாக கருதி மரண தண்டனை, ஆயுள் தண்டனை கூட வழங்குகிறது.

இப்படி ஓரின சேர்க்கையினரின் உரிமைக்காகவும், அங்கிகாரத்திர்காகவும் போராடும் அமைப்பாக ‘LGBT’ ( Lesbian, Gay, Bi-sexual, Transgender) அமைப்பு செயல் பட்டுவருகிறது.

எத்தனையோ வருடங்களாக இருக்கும் கே, லெஸ்பியன் உறவுகளை பற்றி முப்பது, நாற்பது வருடங்களாக தான் தைரியமாக பேசுகிறோம். பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் நடுவில் ஓரின சேர்க்கை, தன் பால் உறவு, கே, லெஸ்பியன் என்று எப்போது இருந்து தைரியமாக பேச தொடங்கினோம் ? இதில் 'LGBT' அமைப்பின் பங்கு என்ன செய்கிறது ? இதனால் என்ன பயன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த தொடர் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் தொடராக இருக்காது. அதே சமயம் எதிர்க்கும் தொடராகவும் இருக்காது.

'ஓரின சேர்க்கை' பற்றிய புரிதலும், அதன் போராட்டம் தொடங்கிய விதம், ஒரு சில ஓரின சேர்க்கையாளர் பற்றின வாழ்க்கை குறிப்பு போன்ற விபரங்கள் தொடரில் காணலாம்.

தொடரை படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த தகவலை மின்னசல் மூலமாகவோ அல்லது பின்னூட்டம் மூலமாகவோ பகிர்ந்துக் கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி !

LinkWithin

Related Posts with Thumbnails