இமய மலையில் வழிவந்து
ஆரியர் நா வழி புகுந்து
தெய்வ பாஷையாக திகழ்ந்து
வாழ்கிறது வடக்கில் ஒரு மொழி !
சொற்ப எழுத்துக்கள் கொண்டு
காலனியாதிக்க மொழியாய் இருந்து
உலகம் முழுக்க பரவி
சரியாக பேசப்படாமல்
உள்ளது இன்னொரு மொழி !
மொழிகளுக்கு எல்லாம் அன்னையாய்
பேச தெரிந்தவர்களுக்கு தந்தையாய்
உடன் பிறந்த சகோதரனாய்
நம்முடனே வளர்ந்தும்
வளர்த்துவிடுவது தமிழ் மொழி !
கம்பனின் எழுத்தானியை பிடித்து
கம்பனின் பாடலில் நடந்து
பாரதியின் வரியில் வாழ்ந்து
தமிழை ஒதுக்க நினைத்தவர்களை
ஓரம் கட்டியது எங்கள் மொழி !
தமிழே !
நீ பிறந்தது இங்கே
உன்னை ஆட்சி மொழியாய்
மாற்றியவர்கள் வெளிநாட்டில் !
இணையதளத்திலோ
நீ இருப்பது மூன்றவது இடத்தில் !
உலக முழுக்க ஆட்சி மொழியாய்
இணையத்தில் முதல் இடமுமாய்
தமிழே !
உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது !!
எங்கள் தமிழால் முடியும் !!
(நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டை வாழ்த்தி, சென்னையில் நடந்த ஒரு கவியரங்கில் சொன்ன கவிதை.)
1 comment:
இக்கவிதையை ஈர்ந்ததற்கு மிக்க நன்றி.
சிந்தனையை தூண்டியது.
எம்மொழிக்கும் எம்மொழி தாழ்வில்லை
ஏனெனில்
எம்மொழியும் எம்மொழிக்கு இணை இல்லை
Post a Comment