வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Credit Card. Show all posts
Showing posts with label Credit Card. Show all posts

Wednesday, July 21, 2010

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை !!

ரமேஷ்க்கு XXX வங்கியில் இருந்து ஒரு ஈ - மெயில்...

உங்கள் வங்கியில் வாடிக்கையாளர் தகவல் தொழில்நுட்ப காரணமாக அழிந்துவிட்டது / பழுதடைந்துவிட்டது . கீழ் காணும் இணையதளத்தில் உங்கள் பயப்பெயர் (Username) மற்றும் கடவுச்சோல் (Password) கொடுக்கவும். நீங்கள் தகவல் கொடுத்தவுடன், உங்களை பற்றிய எல்லா தகவல்களும் எங்கள் தளத்தில் புதுப்பித்து பழைய நிலையில் திரும்பிவிடும்.

உதாரணத்திற்கு. http://www.xxxbank.co.in/yourdetails.html



இந்த தளத்தில் ரமேஷ் சென்றான். பார்ப்பதற்கு வங்கி தளம் போல் இருந்தது. ரமேஷ் தன் வங்கி பயண பெயர், கடவுசொல் போன்ற எல்லா தகவலையும் சரியாக கொடுத்தான். அடுத்த நாள் தன் வங்கி கணக்கை பார்க்கும் போது இருப்பு தொகை பூஜ்ஜியமாக இருந்தது.

ஆரம்ப காலம், இணைய வங்கி தொடங்கும் போது பலர் ரமேஷ் போல் தங்கள் தகவலை கொடுத்து வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் கணக்கு பணத்தை கதைகள் கேள்வி பட்டிருப்போம்.

நாம் கொடுக்கும் தகவலை வைத்து நம் வங்கியில் இருக்கும் சேமிப்பு பணத்தை யார் வங்கி கணக்கில் வேண்டுமானாலும் மாற்ற முடியும். தொழில் நுட்பம் வளர வளர நுட்பமான திருடர்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை தடுப்பது மிகவும் கடினம். அதனால், வங்கியில் இருந்து போன்ற மின்னஞ்சல் வந்தால் அதை நிராகரிப்பதே நல்லது.

இணையத்தில், நமது பயன பெயர் மற்று கடவுச்சொல் ரகசியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நம் வீட்டு சாவி சேர கூடாத நபரிடம் சேர்ந்தால் எப்படி நம் வீட்டு பொருளுக்கு உத்தரவாதம் இல்லையோ.... அது போல், நமது பயன பெயர், கடவுச்சொல், கிரடிட் கார்ட் எண், கிரடிட் கார்ட் CVC எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் தவறாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே குறிப்பிட்டது பல விதமான திருட்டுகளில் ஒரு வகை. அவ்வளவு தான்.

ஒரு பிரபல எழுத்தாளரின் மின்னஞ்சலை 'hack' செய்து, அவர் மின்னஞ்சலில் இருந்து அவருடன் தொடர்புள்ள எல்லா மின்னஞலுக்கு ஒரு செய்தி செல்கிறது.

"நான் இங்கிலாந்தில் இருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு அவர பணதேவை. என் கையில் 50 பவுன்ட் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு வர எனது நண்பரின் இந்த வங்கியில் பணம் செலுத்துங்கள்" என்று வருகிறது.

இதை படித்த அவருடைய வாசகர், என்ன எதும் விசாரிக்காமல் பணத்தை அனுப்பிவிட்டார்.

பிறகு தான் தெரிந்த்து, மின்னஞ்சல் அனுப்பியவர் எழுத்தாளர் இல்லை. அவருடைய மின்னஞ்சல் களவாடப்பட்டது என்று...!

இது போல் தெரிந்த நபர்களிடம் இருந்து பண உதவி வேண்டும் என்று கேட்டு, குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லி மின்னஞ்சல் வந்தால், அந்த நபரிடம் போன் போட்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இன்று தீவிரவாதிகளுக்கு பணம் அந்நிய நாட்டில் இருந்து மட்டும் வருவதில்லை, இது போல ஹாக்கிங் முறையிலும் தங்கள் இயக்கத்திற்கு பணம் திரட்டுகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்படி பல நுதன திருடர்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் கிரடிட் கார்ட் / டெபிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

***

என் பழைய கட்டுரை. ஒரு சிற்றிதழ்காக எழுதியது. புதிதாக எதுவும் எழுதாததால் இதை பதிவில் ஏற்றிவிட்டேன்.

Tuesday, June 15, 2010

ஹோட்டலில் ஜாக்கிரதையாக இருங்க !!

தப்பு செய்ய நா ஹோட்டல் போல.... சாப்பிட தான் போறேன். நல்ல ஹோட்டலா பார்த்து தான் சாப்பிட போறேன். எனக்கு பிடிச்ச சிக்கன் கறி, மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணுவேன். வயறு முழுக்க சாப்பிட்டு சந்தோஷமா வெளிய வர போறேன். இதுல என்னத்த ஜாக்கிரதையா இருக்க வேண்டி கிடக்கு ??

- தலைப்பை படித்ததும் இப்படி எல்லாம் உங்கள் மனதில் எண்ணம் வரலாம். என் பர்ஸ் யாரும் திரட முடியாது. அப்படியே திருடினாலும், பணத்தை அதிகமாக கார்ட் தான் நிறைய இருக்கும்.



இன்று பணத்தை விட கிரடிட் கார்ட்டை அதிகம் பாதுகாக்க வேண்டும் என்று முன்பைய அத்தியாயித்திலே சொல்லியிருக்கிறேன். பணம் தொலைந்தால், இவ்வளவு தான் தொலைந்தது என்று உங்களால் சொல்ல முடியும். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்தால் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று நாம் வாடிக்கையாளர் சேவை தொடர்பு கொள்ளும் வரை தெரியாது. நான் என்னவோ ஹோட்டலில் கிரடிட் கார்ட் திருடு போவதை பற்றி சொல்ல போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். 'டிப்ஸ்' என்ற பெயரில் உங்கள் திருடு போகாமல் பார்த்து கொள்ளுங்கள்.

ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு 'டிப்ஸ்' வைப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஐந்நூறு ரூபாய்க்கு நண்பர்களோடு சாப்பிட்டால், பத்து ரூபாய் நாமாக வைத்தால் எப்படி திருட்டாகும். அரை மணி நமக்காக பரிமாறியவற்கு பணம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமாக இருக்குமா ? எதிர் கேள்வி வரலாம். உங்கள் பில்லுக்கு நீங்கள் பணமாக கொடுக்கும் பட்சத்தில், தட்டில் 'டிப்ஸ்' வைப்பதில் பிரச்சனையே இல்லை. ஆனால், கிரடிட் கார்ட்டில் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தும் போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

மற்ற இடங்களில் வாங்கிய பொருளுக்கு கிரடிட் கார்ட்டில் பணம் செலுத்தினால் போதும். கடைக்காரன் கொடுக்கும் காகிதத்தில் நீங்கள் பொருள் வாங்கிய பணம் தான் இருக்கும். அதற்கு தான் நீங்களும் கையெழுத்து போடுவீர்கள். ஆனால், ஹோட்டலில் அப்படி இல்லை. நீங்கள் சாப்பிட்டதற்கு பணம் போக , 'டிப்ஸ்' என்ற Merchant Copy யில் காலியான இடம் இருக்கும். அதை நிரப்பாமல் கையெழுத்து போட்டு கொடுத்தால் அவ்வளவு தான். ஹோட்டல் நிர்வாகிகள் காலியாக இருக்கும் 'டிப்ஸ்' இடத்தை நிரப்பி விருவார்கள்.

உதாரணத்திற்கு, ராஜேஷ் தன் நண்பர்களோடு உணவருந்த உயர்தர உணவகத்திற்கு செல்கிறான். அங்கு பல வகையான உணவுகள், சிக்கன், மட்டன் என்று ஒரு பிடி பிடிதாகிவிட்டது. வெய்ட்டர் 1256 ரூபாய் என்று பில்லை நீட்டுகிறார். ராஜேஷ் ஸ்டைலாக தன் பர்ஸ்ஸில் இருக்கும் கிரடிட் கார்ட் பில் மீது வைக்க, வெய்ட்டர் 1256 ரூபாய்க்கு கார்ட் தெய்த்து கொண்டு வருகிறார். ராஜேஷ் 1256 ரூபாய் சரியாக இருப்பதை பார்த்து கையெழுத்துப் போட்டு கொடுத்துவிடுகிறான். மாத இறுதியில், கிரடிட் கார்ட் கணக்கு வரும் போது ராஜேஷ் சாப்பிட்ட ஹோட்டல் பெயருக்கு 1300 ரூபாய் கட்ட வேண்டும் என்று இருந்தது.

1256 ரூபாய் சாப்பிட்டதற்கு எப்படி 1300 ரூபாய் ??

ராஜேஷ் 'டிப்ஸ்' என்ற இடத்தை நிரப்பாமல் விட்டதால், ஹோட்டல் நிர்வாகம் தங்களுக்கு வேண்டிய தொகை நிரப்பிக் கொள்ள அனுமதி தந்துவிட்டான். அதனால், அவர்கள் 44 ரூபாய் என்று 'டிப்ஸ்' இடத்தில் நிரப்பி 1300 ரூபாய் என்று ராஜேஷ் கிரடிட் கார்ட் கணக்கில் காட்டுகிறது.

கிரடிட் கார்ட் மூலம் டிப்ஸ் தர விருப்பமில்லை என்றால், காலியான இடத்தை அடித்துவிட்டு, Total என்ற இடத்தில் உங்கள் பில் பணத்தை எழுத்தி கையெழுத்து போட்டு கொடுங்கள்.

துணி கடையில் துணி வாங்கும் போது 'டிப்ஸ்' என்று 'Transaction Slip ல் வருமா என்று கேட்டால், வராது. பொதுவாக , உணவக சம்பந்தப்பட்ட இடங்களில் 'டிப்ஸ்' 'Transaction Slip ல் வரும்.

ராஜேஷ் அனுபவத்தை படித்த பிறகு போல் ஹோட்டலில் 'டிப்ஸ்' இடத்தை நிரப்பாமல் யாரும் கிரடிட் கார்ட் ஸ்லிப்பை கையெழுத்து போடமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.ஹோட்டலில் ஜாக்கிரதையாக இருங்க !!

Wednesday, May 26, 2010

கிரடிட் கார்ட் - வங்கி பாதுகாப்பு வளையம்

கிரடிட் கார்ட் வந்த புதிதில் அதன் 16 இலக்கு நம்பர் மற்றும் காலவதியாகும் மாதம் / வருடம் போன்ற விபரங்களை சிதம்பர ரகசியம் போல் காக்க வேண்டும். அந்த நம்பர், மற்ற விபரங்கள் வேறுயாருக்காவது தெரிந்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் அதை வைத்துக் கொண்டு என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். இணையதளத்தில் யார் என்ன பொருள் தேவையோ வாங்கிவிடலாம். இப்படி கிரடிட் கார்ட் வாங்கி விட்டு தேவையில்லாமல் தொல்லையில் மாட்டியவர்கள் பலர். பணத்தை காப்பதை விட கிரடிட் கார்ட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியிருந்தது. கார்ட்டை தேய்க்க கடைக்காரனிடம் கொடுக்க கூட பயந்தனர். இதனாலே, பலர் கிரடிட் கார்ட் வாங்குவதற்கு அஞ்சினார்கள்.

இப்போது வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு கிரடிட் கார்ட்டுக்கும் 'CSC/CVV' என்ற மூன்று நம்பர் இருக்கிறது. இந்த எண்கள் கிரடிட் கார்ட் பின்புறத்திலேயே இருக்கும். பெரும்பாலும், இந்த எண்கள் தொலைப்பேசி மூலம் வங்கி சேவை நாடும் போதும், இணையதளத்தில் பொருள் வாங்கும் போதும் பயன்ப்படும்.



CSC / CVV என்றால் Card Verification Value / Card Security Code. இந்த மூன்று இலக்கு எண்கள் பெரும்பாலும் தொலைப்பேசி வங்கி சேவையிலும், இணையதளத்திலும் அதிகம் பயன்ப்படும். அதாவது, யார் கையில் கிரடிட் கார்ட் உள்ளதோ, அவர்கள் தான் தனக்கு சொந்தமாக பொருள் வாங்குகிறார் என்பதை சொல்லுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்துவார்கள்.

இந்த தகவலை எல்லாம் ஒரு பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டு நம் பெயரில் யாராவது இணையத்தில் வாங்க முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அதனால், கிரடிட் கார்ட் தேய்க்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வது நல்லது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் விபரத்தை திருடி இணையத்தில் வாங்க நினைத்தாலும், அதை தடுக்க பாதுகாப்பு வளையம் வைத்துள்ளது. உதாரணத்திற்கு, உங்கள் பெயர், கிரடிட் கார்ட் காலவதி மாதம், வருடம்,'CSC' எண் என்று எல்லா குறிப்புகள் எடுத்துக் கொண்டு இணையத்தில் வாங்க நினைத்தால், Secret Pin அல்லது 'Authorization Code' என்று கிரடிட் கார்ட் உரிமையாளிரின் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். இதனால் எல்லா தகவல் திருடினாலும் திருடனால் ஒன்றும் செய்யமுடியாது. இது போன்ற சேவையை எல்லா வங்கிகளும் எல்லா கிரடிட் கார்டுக்கும் தருவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளே இது போன்ற சேவைகளை வழங்குகிறது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் 5000 ரூபாய் மேல் பொருள் வாங்கினால், கிரடிட் கார்ட் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி விபரத்தை உறுதி செய்துக் கொள்வார்கள். சில சமயம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் உரிமையாளர் தான் பொருள் வாங்கினாரா என்று உறுதி படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலை நீங்கள் எந்த பொருள் வாங்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை தொடர்புக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.

அதே சமயம் வங்கியால் எல்லா வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது. அதனால் பெரிய அளவில் வாடிக்கையாளர் வாங்கும் போது இது போன்ற சேவையை வழங்குகிறது.

இப்படி வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் சேவை பல பாதுகாப்பு வளையம் வைத்திருந்தாலும், கிரடிட் கார்ட் பார்த்த மாத்திரத்தில் போலி கிரடிட் கார்ட் தயாரிக்கும் நுதன திருடர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

Tuesday, May 4, 2010

கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

Do’s and Don’ts என்ற புரிதல் இல்லாமல் வாழ்க்கையில் எதிலும் சிறப்பாக நம்மால் செய்ய முடியாது. அலுவலகம், போக்குவரத்து, விளையாட்டு என்று எதை எடுத்துக் கொண்டாலும் Do’s and Don’ts என்று சில விதி முறைகள் இருக்கும். இதில் கிரடிட் கார்ட் மட்டும் விதிவிளக்கல்ல.



கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

1. கிரடிட் கார்ட் வாங்கியதும் உங்கள் கையெழுத்தை கார்ட்டின் பின் பக்கம் குறிப்பிட்ட இடத்தில் போடுங்கள். போதுவாக வங்கி கிரடிட் கார்ட் கொடுக்கும் போதே கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்ல மறந்தாலும், கிரடிட் கார்ட் வாங்கிய கையோடு கையெழுத்து போட்டுவிடுவது நல்லது.

ஒரு வேளை, கையெழுத்து போடாமல் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், அந்த கிரடிட் கார்ட் யாராவது பொருள் வாங்கியிருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டிய பொருப்பு உங்களுடையது தான்.

2. பின் (PIN) நம்பரை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். கிரடிட் கார்ட் பின் நம்பரை கிரடிட் கார்ட் பின் பக்கம் எழுதி வைப்பதோ அல்லது மோபைல் போனில் வைத்திருப்பதோ நல்லதல்ல. நன்கு பரிச்சயமான அல்லது நினைவில் வைத்துக் கொள்ளுவது போல் எண்களை பின் நம்பராக வைத்துக் கொள்ளுங்கள்.

3. கிரடிட் கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பியை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். கிரடிட் கார்ட்டின் பின் பக்கம் 'CVV' (card verification value) எண் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு இணையதளத்தில் உங்கள் பெயரில் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

4. இணையதளத்தில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சில ஷாப்பிங் இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லுவார்கள். இப்படி பாதுகாப்பானவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எல்லா தளங்களும் பாதுகாப்பானதாக இருக்காது.

இந்த இணையதளம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வாங்கியிருந்தால் மட்டும் அந்த தளத்தில் பொருள் வாங்க உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 'VeriSign' - ஒரு தளத்தை பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டால் தாராளமாக பொருள் வாங்கலாம் என்று பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை. அப்போது அவர்கள் அந்த தளத்திற்கு பாதுகாப்பு சான்று கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்து, உங்கள் விபர்த்தை கொடுக்கவும்.

5. நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையத்தளத்திலும் உங்கள் கிரடிட் கார்ட் பற்றிய விபரத்தை கொடுக்க வேண்டாம். நல்ல பழக்கப்பட்ட, நம்பிக்கையான இணையத்தில் மட்டும் உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கேட்டால் கொடுங்கள்.

6. யாராவது போன்னில் தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை, குறிப்பாக பின் பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றி கேட்டால் எந்த விபரத்தை சொல்லாதீர்கள்.

வங்கியில் பணிபுரிபவர்கள் உங்களிடம் தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் விபரத்தை கேட்க மாட்டார்கள். அப்படி யார் கேட்டாலும், எந்த தகவல் கொடுக்காமல் தொடர்பை துண்டிப்பது நல்லது.

7. கடைக்காரணிடம் கிரடிட் கார்ட் கொடுத்து மிஷினில் தெய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்து கொள்வது நல்லது. உங்கள் கிரடிட் கார்ட்டை ஒரு முறை தெய்க்கிறானா அல்லது உங்கள் தகவல் பார்ப்பது போல் கிரடிட் கார்ட் மெஷின் வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நிங்கள் கையெழுத்து போட்டு கடைக்காரன் கொடுத்த பேப்பரில் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை அதில் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை கடைக்காரனிடமும், அதன் நகல் உங்களிடமும் கொடுக்கப்படும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விபரத்தோடு (Statement) நீங்கள் வாங்கிய பொருள்களின் விலையையுடன் ஒத்துப் போகின்றனவா பாருங்கள். மாத கணக்கு விபரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டு இருந்தால், வங்கியை தொடர்ப்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் வைத்திருக்கும் கிரடிட் கார்ட்டுக்கு இன்ஷூரன்ஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், தொலைத்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் (உதாரணத்திற்கு) கிரட்டி கார்ட்டை பயன்படுத்தி யார் எந்த பொருள் வாங்கியிருந்தாலும் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணலாம். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்து விட்டால் சும்மா இருந்து விட கூடாது. வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் 16 இலக்கு எண்களை சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதப்படி தடுக்க வேண்டும்.

இவை எல்லாம் கிரடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் அடிப்படையாய் தெரிந்துக் கொள்ள வேண்டிய விபரங்கள். கார்ட்டை பயன்படுத்த பயன்படுத்த உங்களுக்கு பல அனுபவங்கள் அதிகமாக சொல்லிக் கொடுக்கலாம்.

Thursday, March 25, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள்

'கேஷ் பேக்' (Cash back) கிரடிட் கார்ட் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் 5 ரூபாய் நமக்கு திருப்பி கொடுப்பார்கள். அதனால் பெரும்பாலும் 'கேஷ் பேக்' வாங்க விரும்புவார்கள். இன்னும் விழாக்காலங்களில் ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் கிரடிட் கார்ட் பயன்படுத்த பல சலுகைகள் எல்லாம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதில் எத்தனையோ நிபந்தனைகள் எல்லாம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் பொருளை வாங்குவார்கள். எந்த லாபமும் இல்லாமல் வங்கிகள் 30% cash back என்று விளம்பரம் செய்யாது. அந்த விளம்பரத்தை கவனித்தால் அதில் கூட Condition Apply என்று இருக்கும்.



இதிலும் கன்டிஷனா...? ஆமாம். அப்படி என்ன கன்டிஷன் ? அதை மிக சின்ன எழுத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பரும்பாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு அந்த விளம்பரத்தில் 30,000 ரூபாய் மேல் வாங்கினால் தான் 30% தள்ளுபடி கொடுப்போம் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்....?

'கேஷ் பேக்' கிரடிட் கார்ட் நடக்கும் நம் கண்ணுக்கு தெரியாத சில நிபந்தனைகள் இப்படி தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் வங்கிகள் அதிகபட்சம் தன் லாபத்தில் இருந்து 5% சதவீதம் 'கேஷ் பேக்'காக கொடுக்கலாம். 30%,50%.... இன்னும் சில கிரடிட் கார்ட் 100% (cash back) என்று சொன்னால் நிச்சயமாக சில நிபந்தனைகள் இருக்கும். கவனமாக பார்க்கவும்.

'கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஆயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஆயிலை ICICI அல்லது HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், டெக்கான் எர்வேஸ்யில் வாங்கினால் அந்த சலுகை கிடைக்காது. பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது 'கேஷ் பேக்' அல்லது 'தள்ளுபடி' தான். Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.


அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.

இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

Tuesday, March 23, 2010

வங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)

நான் கிரடிட் கார்ட் வங்கியின் அங்கமாக வைத்தே 'வங்கி ரகசியம்' பதிவை எழுத தொடங்கினேன். முழுக்க முழுக்க கிரடிட் கார்ட்டை பற்றி தொடர் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. என் முதல் பதிவு 'சேமிப்பு வட்டி கணக்கு' கிரடிட் கார்ட்டு சம்மந்தம் இல்லாத பதிவு. பலர், வங்கி ரகசியம் தொடரில் கிரடிட் கார்ட் எழுதியதும் பலர் ‘கிரடிட் கார்ட்’ சம்மந்தமாக பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

KATHIR = RAY என்ற நண்பர் தனது பின்னூட்டத்தில் பத்து கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான என்னுடைய பதில்...

1.Credit period epdi calculate pandrange. Porul Vanganathula irunda? or Card Active la irundu every 50 days count ah?

பொதுவாக வங்கிகள் மாதம் இரண்டு கட்டமாக தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பும்.

உதாரணத்திற்கு,
முதல் கட்டம்
1.1.2010 முதல் 31.1.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 20.2.10 குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 10.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

இரண்டாவது கட்டம்
12.1.10 முதல் 12.2.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 3.3.10 (50 நாள்) குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 22.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

முதல் கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது கட்டத்தில் பில் வராது. அதே போல், இரண்டாவது கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டத்தில் பில் வராது.

இந்த இரண்டு கட்டமும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஒரு சில வங்கிகள் ஒரே கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பலாம். ஆனால், நீங்கள் வாங்கும் எல்லா பொருளுக்கும் 50 நாள் கடன் வசதி கிடையாது.

31.1.10 ( முதல் கட்டம்) ஒரு பொருள் வாங்கிருந்தால் 20.2.10 தேதிக்குள் பணத்தை கட்டியாக வேண்டும். உங்களுக்கு எப்போது பில் வரும், எந்த தேதிக்குள் பில் தெரிந்துக் கொண்டு கிரடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும்.

2. What are the Hidden charges is there?

Hidden charges கிடையவே கிடையாது என்று சொல்லி தான் கிரடிட் கார்ட் எல்லோர் தலையில் கட்டுகிறார்கள். வாங்கிய பிறகு தான் ஒவ்வொரு வங்கியின் Hidden charges ' தெரிகிறது. Hidden charges ஒவ்வொரு வங்கியின் சதம்பர ரகசியம். முழுமையாக தெரிந்துக் கொள்வது கடினம்.

3. How the service charges differ from each credit card companies?

நீங்கள் Citibank Credit card' வைத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அந்த கார்ட்டை Citibank EDC machine யில் தேய்த்தால் உங்களுக்கு 'செர்விcஎ சர்கெச்' கிடையாது. ஆனால், Citibank Credit card' ஐ HDFC/Axis bank EDC Machine ' யில் தேய்த்தால் 2.5 % 'செர்விcஎ சர்கெச்' போடுவார்கள்.

ஒரு சில கடையில், 'service charges சேர்த்தே உங்களை பணம் கட்ட சொல்லுவார்கள்.

நீங்கள் பயன்படுத்தாத கார்டுக்கு 'service charges’ போட்டால் பணம் செலுத்த வேண்டாம். அந்த மாதிரியுடன் உறவு வைத்துக் கொள்ளுவது என்றும் ஆபத்தானது. கார்ட்டை திருப்பி கொடுத்துவிடவும்.


4. What are the solution for technical problem?
Like excess money transferred.
Like double time credit problem


இது போன்ற சமயத்தில், Customer Care ஐ தொடர்பு கொள்ள வேண்டும். double time/ Excess money யான 'Transaction' ஐ ப்ளாக் செய்ய வேண்டும். உங்களிடம் ஒரு PDF file அனுப்பி, அதை நிரப்பி பேக்ஸ் / ச்கேன் மூலம் அனுப்ப சொல்லுவார்கள். அதன் பின், வங்கி தவறு நடந்த காரணத்தை விசாரிக்கும். தங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதிகமான பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

5.What is the service charge for monthly or yearly?
மூன்றாவது கேள்விக்கு பதில் தான் இதற்கும்.

6.What are the risk factors?
7.Details of Terms and conditions of every credit card company?

இதை பற்றி தனி பதிவு எழுதுகிறேன்.

8.Which card is best?
இந்த வம்பே வேண்டாம். நான் யாரையும் 'Promote' செய்யும் நோக்கத்துடன் இந்த பதிவு எழுதவில்லை.

ஒரு சிலருக்கு, குறிப்பிட்ட வங்கியின் சேவை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. ‘Best or Worst’ என்பதை பெரும்பான்மையின் அனுபவம் தான் தீர்மானிக்கிறது.

9. Comparative statement of Every credit card companies Services and charges.
இந்திய அரசியல் கட்சிகளை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களின் சாதனைகளை சொன்னால் இதற்கு நான் பதில் சொல்கிறேன்.

10. Describe details statement of the good process using Credit card. Example Credit card Statement for Good Transaction and bad transaction.
முதல் கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுயிருக்கும் உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.

Tuesday, March 9, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் நன்மை



நம்மிடம் பணம் இருக்கும் போது கிரடிட் கார்ட் பயண்படுத்தி ஏன் வாங்க வேண்டும் ? நீங்கள் கேட்பது சரி தான். ஆனால், எல்லா சமயமும் நம்மிடம் பணம் உள்ளதா... நிச்சயமாக இருக்காது. எதோ கடையை வேடிக்கை பார்க்க செல்கிறோம், அங்கு ஒரு புத்தகம் படித்து நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது.... வாங்க வேண்டும் என்று நினைகிறீர்கள். ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வோம்.. வாங்காமல் வந்து விடுவோம். மீண்டும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், அதே கடையில் வாங்வோம் என்பதில் நிச்சயமில்லை. நீங்கள் ஆசைப்பட்ட பொருள் வான்க முடியாமல் போகிறது. அந்த கடைக்காரனுக்கு விற்க பட வேண்டிய பொருள் விற்கமுடியாமல் போகிறது. இரண்டு பேருமே பாதிக்க படுகிறார்கள்.

ஆனால், நம் கையில் கிரடிட் கார்ட் இருந்தால், கார்ட்டை தெய்த்து விட்டு அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்லலாம். அந்த கடைக்காரனுக்கு வியாபாரம் நடக்கிறது. இதில் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தான்.

சரி ! கிரடிட் கார்ட் பயன்படுத்தி புத்தகம் வாங்கி விட்டீர்கள். ஆனால், அந்த பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றால் கடைக்காரன் நம்மிடம் வந்து கேள்வி கேட்பானா..? இல்லை. நீங்கள் வந்து வங்கியின் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருள் வாங்கினீர்களோ... அந்த வங்கி கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் கடையில் பொருளை வாங்கி கிரடிட் கார்ட் தெய்து,கையெழுத்து போட்ட பிறகு உங்களுக்கு, அந்த கடைக்காரனுக்கும் சம்மந்தமில்லை. பொருளுக்கு தேவையான சர்வீஸ், வாராண்டி போன்றவைக்கு நீங்கள் கடைக்காரனிடம் கேட்கலாம். ஆனால், கடைக்காரன் அந்த பணத்தை பற்றி உங்களிடம் கேட்க மாட்டான். ஒரு மாதத்திற்குள் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை வங்கியில் செலுத்தி விட வேண்டும்.

உங்களுக்கு திடிர் என்று மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்கிறீர்கள். கையில் டிக்கெட் மற்றும் சிறிய அளவு தான் பணம் உள்ளது. விரும்புபவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டும். டெபிட் கார்ட்டில் கூட பணமில்லை. அப்பொது நமக்கு ஆபத்பாண்டவனாக இருப்பது கிரடிட் கார்ட் தான்.

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். விருந்து கொடுப்பதாக சொல்லி ஹோட்டலில் இஷ்டத்துக்கு சாப்பிட்டாச்சு. பணம். கையில் இல்லை...!! இருக்கவே இருக்கிறது கிரடிட் கார்ட்.

இன்று கிரடிட் கார்ட், செல்போன் இரண்டும் தான் வேலை செய்பவர்களின் ஸ்டேடஸ் ஸிம்பில். சமிபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தனக்கு வர போகும் வருங்கால கணவன் கிரடிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். அதுவும் 'Add-on' கிரடிட் கார்ட். அதாவது கணவன் - மனைவி இருவரும் இரண்டு கிரடிட் கார்ட் வைத்திருப்பார்கள். ஆனால், மாதம் வரும் பில் மட்டும் ஒருவர் பெயரில் வரும். அதாவது கணவன் பெயரில் வரும். அது தான்... 'Add-on' கிரடிட் கார்ட். இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அடிப்படையாக கிரடிட் கார்ட் இருக்கிறது.

கிரடிட் கார்ட் தெய்து பொருள் வாங்கி விட்டீர்கள் ? அது ஏமாற்று பொருள் வாங்கிய பிறகு தான் தெரிந்தது. அதனால், கிரடிட் கார்ட்டுக்கு பணம் கட்டாமல் இருக்க முடியுமா ? முடியாது. வங்கியிடம் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவும் முடியாது. வங்கி எப்படியும் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் வாங்கி கடையில் பேசி பொருளை கொடுத்து பணத்தை பெற்றால் தான் உண்டு. நீங்கள் ஏமாறியதற்கு எந்த வங்கியும் (கிரடிட் கார்ட் வங்கி) பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது.

கிரடிட் கார்ட்டில் செலவு செய்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் பண கஷ்டத்திற்கு உதவும் நண்பனாக இருக்கும். பணம் கட்ட தவறிவிட்டால் பண நெருக்கடி கொடுப்பதில் முதல் எதிரியாக இருக்கும்.

Sunday, March 7, 2010

வங்கி ரகசியம் : லாபம் சம்பாதிக்கும் வங்கி !



பெரும்பாலும் கிரடிட் கார்ட்டின் நன்மை என்று சொல்லும் போது பணம் இல்லாத சமயத்தில் பயன்படுத்தலாம் என்று தான் சொல்வார்கள். பணமில்லாத சூழ்நிலையை உருவாக்காமல் இருந்தால் கிரடிட் கார்ட் அவசியமில்லையே ! ஆனால் இன்றைய பொருளாதாரம் பெருகிவிட்ட சூழ்நிலையில் பணத்திற்காக பொருளை அடகு வைத்து ஒரு மாத தவனைக்குள் கட்டுவதை விட கிரடிட் கார்ட் எவ்வளவோ மேல்..!

முதல் தேதி அன்று வாங்கிய பொருளை முப்பதாம் தேதியன்று கட்டி விடுகிவதால், நம்மக்கு வங்கி வட்டியில்லாமல் ஒரு மாதம் பணம் தருவது போல் தெரியும். இதில் வங்கி எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகமும் உங்களுக்கு எழும். நியாயமான சந்தேகம் தான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கடையில் அழகான பொருளை ஒன்று பார்த்து வாங்க விரும்புகிறீர்கள். அந்த பொருளில் மதிப்பு 200 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கியாச்சு... பிறகு என்ன பணம் ஒரு மாதத்தில் கட்ட வேண்டியது தான். நீங்கள் பொருளை வாங்கும் போது கிரடிட் கார்ட் ஒரு மிஷினில் தெய்த்து கையெழுத்து கையெழுத்து பொட்ட காகிதத்தை வைத்து வங்கியில் இருந்து கடைக்காரன் பணம் வாங்கி கொள்வார். ஆனால், வங்கி அந்த கடைக்காரனுக்கு முழுசாக 200 ரூபாய் கொடுக்காது. 160,170 ரூபாய் என்று தான் வங்கி அந்த கடைக்காரனுக்கு கொடுக்கும். அப்போ மீதி பணம்.... அது தான் வங்கி லாபம் !!

இப்படி ஒவ்வொருவரும் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் வங்கிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...யோசித்து பாருங்கள்...!!

அது சரி ! கடைக்காரன் நமக்கு 200 ரூபாய்க்கு பொருளை கொடுத்து வங்கியிடம் இருந்து 170 ரூபாய் வாங்குகிறார் என்றால்... அந்த கடைக்காரனுக்கு லாபம் தான் என்ன ? நீங்கள் பணம் கொடுத்து வாங்குவதை விட கிரடிட் கார்ட் மூலம் வாங்கினால் அந்த கடைக்காரனுக்கு லாபம் குறைவும் தான். இருந்தாலும் தன் கடையில் இருக்கும் பொருளை விற்க கிரடிட் கார்ட் உதவுகிறதே !! அது தானே அவனுக்கு முக்கியம்.

இன்னும் தெளிவாகவே சொல்கிறேன். நீங்கள் விரும்பும் பொருள் அந்த கடையில் உள்ளது. கையில் பணமில்லை என்றால் வாங்காமல் வந்து விடுவீர்கள். ஆனால், கிரடிட் கார்ட் இருந்தால் வாங்குவீர்கள். அவ்வளவு தான். உங்கள் கையில் பணமில்லாத ஒரே காரணத்திற்காக கடைக்காரன் தன் வியாபாரத்தை இழக்க வேண்டியதில்லை. எப்படியோ அந்த கடைக்காரனுக்கு அவன் பொருள் விற்றுவிடுகிறது. கிடைத்த வரைக்கும் கடைக்காரனுக்கு லாபம்.

தீபாவளி, பொங்கள் பண்டிக்கையில் சிறப்பு சலுகை எல்லாம் கடையில் கொடுப்பார்கள். 30% தள்ளுபடி, 50% தள்ளுபடி என்று கொடுப்பார்கள். அந்த சமயத்தில் கிரடிட் கார்ட் கொடுத்து வாங்கி பாருங்கள். பெரும் பாலும் கடையில் கிரடிட் கார்ட் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி என்பார்கள். கிரடிட் கார்ட் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் அதே விலையில் வாங்க வேண்டும். இன்னும் சில கடையில் பணம் வாங்குபவர்கள் ஊக்கவிக்க... இன்னும் சில சலுகை எல்லாம் கொடுப்பார்கள். கிரடிட் கார்ட் மூலம் தங்கள் லாபத்தை வங்கிகளிடம் பகிர்ந்து கொள்வதை விட தன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுப்பது பரவாயில்லை என்பதால் கடைக்காரர்கள் இப்படி செய்வார்கள். வாடிக்கையாளர்களும் திருப்தி அடைந்து அந்த வாங்க வருவார்கள்.

தள்ளுபடி விளம்பரத்தை உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கே புரியும். அதில் '*' போட்டு கீழே Condition Apply என்று போட்டிருப்பார்கள். அதில் இந்த தள்ளுபடிகள் எல்லாம் கிரடிட் கார்ட் மூலம் வாங்குவதிற்கு பொருந்தாது என்று இருக்கும். கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குவதை தவிர்க்க கடைக்காரன் தள்ளுபடியை கையாள்கிறான். வங்கிகளும் தான் கொடுத்த கிரடிட் கார்ட் பயன்படுத்துவதற்காக வங்கிகளுக்கு சிறப்பு சலுகை எல்லாம் கொடுக்கும்.

ஆனால், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சலுகைகளும் நமக்கு கிடைக்காது. ஒன்று பணம் கொடுத்து கடையில் கிடைக்கும் தள்ளுபடி பயன்படுத்தி கொள்ள வேண்டும் அல்லது கடை கொடுக்கும் தள்ளுபடியை வாங்காமல் கிரடிட் கார்ட் வாங்கிய பிறகு வங்கிகள் கொடுக்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடரும்...)

Thursday, March 4, 2010

வங்கி ரகசியம் : தற்கொலை ஓர் தீர்வில்லை !!



ஒரு தனியார் தொலைக்காட்சியில் குடும்ப தலைவன் தற்கொலை செய்துக் கொண்டதை காட்டினர். அதில் தற்கொலை செய்துக் கொண்டவரின் மனைவி, குழந்தை கண்ணீர் தழுமப பெட்டி அளித்தனர். குடுமப தலைவன் தற்கொலை செய்துக் கொண்ட காரணம்...? வங்கியில் இருந்து ஐந்து பேர்கள் மிரட்டினார்கள். எதற்காக... கிரடிட் கார்ட் மூலம் செலவு செய்த பணத்தை கட்டவில்லை. அந்த சமயத்தில் அவர்களின் குடும்ப சூழ்நிலை பணம் கட்டமுடியவில்லை. வந்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்டியவுடன், பணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக வங்கியில் வாங்கிய பணம் செலுத்தவில்லை என்றால் கேட்டுப்பார்ப்பார்கள், அது நடக்காத போது வக்கில் நோட்டீஸ் விடுவார்கள். ஆனால், வங்கிகளே இப்படி அடி ஆட்கள் கொண்டு மிரட்டுகிறார்களே !! என்ன செய்வது....? என்று தோன்றலாம்.

போலீஸ்க்கு போனாலும் " பணம் செலவு பண்ண தெரியுதுல.... கட்டு " என்று தான் சொல்வார்கள். பணம் திரும்பி செலுத்த முடியாத சூழ்நிலை... கையில் பணம் கூட இல்லை... ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது... !! இந்த சமயத்தில் மிரட்டல் வந்தால்... தற்கொலை தான் தீர்வாக நினைக்கிறார்கள்.

தற்கொலை செய்த நபரை மிரட்டியவர்கள் கண்டிப்பாக அந்த வங்கியில் வேலை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி வங்கியில் வேலை செய்பவர் என்று சொல்லி மிரட்டினால் வங்கியின் அடையாள அட்டை கேளுங்கள். கட்டிப்பாக இருக்காது. ஏன் வங்கிகள் பணம் வாங்க அடியாட்கள் உதவியை நாட வேண்டும்....?

சட்டப்படி கொடுத்த பணத்திற்கு வங்கிகள் வட்டி கேட்கலாம்.ஒரு வருடத்திற்கு இவ்வளவு தான் வட்டி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்லும் போது அந்த வட்டியை கேட்பது தவறில்லை.ஆனால், மாதம் 3 சதவீதம்.... வருடத்திற்கு 36 சதவீதம் வட்டி வாங்கக்கூடாது. வங்கிகள் கிரடிட் கார்ட் பிரச்சனைகளை கோர்ட்க்கு கொண்டு போனாலும் வாடிக்கையாளருக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும். அதனால், வங்கிகள் வாடிக்கையாளருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்புவதில்லை. அதற்கு பதிலாக மிரட்ட ஆட்கள் அனுப்புகிறார்கள்.

சரி ! வீடு தேடி வந்து மிரட்டுகிறார்களே உடனே போலீஸ்யிடம் புகார் கொடுக்கலாமா...? எந்த பலனும் இருக்காது. வீடு தேடி வந்து மிரட்டியவர்கள் ரௌடிகளாக இருப்பார்கள். சில போலிஸ் நபர்களிடம் நட்பு உறவு வேறு இருக்கும். அது மட்டுமில்லாமல்... கொலை, கொள்ளை கேஸ்கள் பார்த்து கொண்டு இருக்கும் போலிஸ் நபர்களுக்கு கிரடிட் கார்ட் கேஸ் கதை புளித்து போன விஷயம். நாம் வாங்கிய பணத்தை கொடுப்பது தான் முறை என்பார்கள்.

நாம் வாங்கிய பணம் செலுத்தி தான் திர வேண்டும். வீட்டுக்கு வந்து மிரட்டுவது கொஞ்சம் ஓவர் தான். பிறகு எப்படி தான் சமாளிப்பது...? முதலில் பணம் செலுத்துவதாக சொல்லி மிரட்டும் ஆட்களை திருப்பி அனுங்கள். வங்கிக்கு சென்று உங்கள் குடும்ப சூழ்நிலையை சொல்லி பணம் கட்ட அவகாசம் கேளுங்கள். வட்டியை நீக்கி விட்டு... அசல் மட்டும் தான் கட்ட முடியும் என்றாலும் பரவில்லை. கேளுங்கள்.

பணம் செலவு செய்து நான்கு மாதம் தான் இருக்கும். யாரும் அதற்கு 12 சதவீத வட்டி கொடுக்க விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் வங்கி ஆட்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களும் அசல் வந்து சேர்ந்தால் போது என்ற நிலையில் தான் இருப்பார்கள். அப்படியும் அவர்கள் வட்டி செலுத்த தொல்லை கொடுத்தால்....கவலை வேண்டாம்.

நீங்கள் வங்கி மீது வக்கில் நோட்டீஸ் கொடுக்கலாம். அது வேண்டாம் என்று நினைத்தால் , ஆர்.பி.ஐ இணையத்தளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். வாடிக்கையாளர் எண், வங்கி, கிரடிட் கார்ட் விவகாரம் போன்ற எல்லா விபரங்களையும் கொடுங்கள். பிறகு என்ன... வங்கி இறங்கி வந்து உங்களிடம் பேசி பார்க்கும். அசல் கட்டுவதாக இருந்தாலே போதும் என்பார்கள். நாமும் வட்டி கட்டாமல் அசல் மட்டும் கட்டலாம்.

இப்படி உயிருக்கு ஆபத்து விலைவிக்கும் அளவிற்கு கிரடிட் கார்ட் இருக்கும் போது.... அதை எதற்கு வாங்குவான் ஏன்..? என்று பலரும் நினைப்பதுண்டு. அப்படி நினைத்தாலும் தவறில்லை தான். ஆனால், 'கிரடிட் கார்ட்'டால் வங்கிகளுக்கும் சரி, நமக்கும் சரி.... நன்மைகள் இருக்கின்றன. கிரடிட் கார்ட்டில் செலவு செய்யத பணத்தை கட்டாமல் தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அதே சமயம் மாதம் 3 சதவீதம் வட்டியும் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Tuesday, March 2, 2010

வங்கி ரகசியம் : கார்ட் வேண்டுமா ?



ஒரு காலத்தில் மாத சம்பளத்தை வேலை செய்யும் நிறுவனம் ஒரு கவரில் போட்டு கொடுப்பார்கள். அந்த கவரை பிரித்து சம்பளப்பணத்தை சரி செய்த பிறாகே அந்த இடத்தை விட்டு நகர்வோம். சம்பளக் கவரை அப்படியே வீட்டில் அம்மா, அப்பாவிடம் கொடுத்து அசிர்வாதம் பெற்று, அதன் பின் மாதம் செலவுக்கு பணம் வாங்கும் சில சென்டிமெட் சீன் எல்லாம் முதல் தேதில் நடக்கும்.

ஆனால் இப்பொது யாரும் சம்பத்தை கவரில் வாங்குவதில்லை. சம்பள பணத்தை உருவிக் கொண்டு வருகிறோம். ஆட ! ஆமாங்க...!! சம்பளப்பணத்த (ATM) உருவுறாங்கள...!! (ATM) கார்ட் வந்த பிறகு பலர் இன்று வங்கியில் நீண்ட வரிசையில் நின்று டோக்கனில் பணம் எடுக்கும் கூட்டம் குறைந்து விட்டது.

'பாஸ்புக் என்ட்ரி' கூட இன்டர்னெட் பாக்கிங் (Internet Banking) வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. கடைசி ஆறு மாத பண பட்டுவடா எல்லாமே இன்டர்னெட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

'விசிட்டிங் கார்ட்' சைஸ் அட்டை தான். பணத்தை கையில் இருந்து பொருட்களை வாங்குவதை விட நம் கார்ட்டை தெய்து பொருள் வாங்குவது பாதுக்காப்பானது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்து டி.வி வாங்க வேண்டும் என்றால் பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கையில் கொண்டு போகும் பணத்துக்கு எந்த ஆபத்து வேண்டுமானாலும் வரலாம். அந்த பணம் நம் கார்டில் இருப்பது ஒரு விதத்தில் பாதுக்காப்பானது.அதே போல் வெளியூர் பயணம் செய்யும் போது பணத்தை பெட்டியில் எடுத்து சொல்வதை விட நாம் கார்ட்யில் எடுத்து செல்வது இன்னும் பாதுக்காப்பானது.

இப்படி எல்லாம் கார்ட் மயமாகி விட்டது. இப்பொது எல்லோருமே வங்கியில் ஒரு அக்கோன்ட் ஓபன் பண்ணும் போதே டெபிட் கார்ட் வேண்டும் என்று விண்ணப்பத்தையும் சேர்த்து தான் விண்ணப்பிக்கிறார்கள். டெபிட் கார்ட் வழங்கிய பிறகு அதற்கு சேவை செய்ய வங்கிக்கு அதிகம் செல்வாகும். ஆனால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்ட் சேவை செய்ய தான் விரும்புகிறார்கள். அப்படியென்றால் டெபிட் கார்ட் சேவை செய்யும் வங்கிகளுக்கு அப்படி லாபம் கிடைக்கும்....?

டெபிட் கார்ட் ஒரு புறம் இருக்கட்டும். கிரடிட் கார்ட் வாருங்கள். இன்று குறைந்த பட்சம் மூவாயிரம் சம்பளம் வாங்கும் நபர் கூட கிரடிட் கார்ட் வைத்திருக்கிறார். கிரடிட் கார்ட்டில் பொருளை வாங்கி ஒரு மாதத்தில் கட்டிவிட்டால் எந்த வட்டியும் கிடையாது. வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி !! அப்படி என்றால்.... பணம் செலுத்தாமல் இருந்தால் தானே வங்கிக்கு லாபம். கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருளை வாங்கினாலே வங்கிக்கு லாபம் உண்டு அது எப்படி ?

இப்படி இந்த 'கார்ட்' விஷயத்தில் பல விபரங்களும், விவகாரங்களும் ஒளிந்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் 'ஐ.டி'யை விட வங்கி எல்லாம் பெரும் அளவில் வளரும் என்பது தொழிற்வல்லுநர்களின் கருத்து.பல ஐ.டி நிறுவனத்தின் பிராஜெக்ட் வங்கி சம்மந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஏன்...? இன்னும் ஐந்து ஆண்டுகளில் வங்கி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கூட கிடைக்கலாம்...!! வங்கியின் Back-office வேளை வாய்ப்புகள் அதகமாக காணப்படும்.... பல கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

(தொடரும்...)

LinkWithin

Related Posts with Thumbnails