வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label எதிர்வினை. Show all posts
Showing posts with label எதிர்வினை. Show all posts

Monday, November 3, 2014

தமிழ் சினிமா 100 - பூபால் சிங் எதிர்வினை

நம் உரத்தசிந்தனை மாத இதழில் ‘தமிழ் சினிமா 100’ பற்றிய வரலாறு தொடர் எழுதி வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் 1930-40 களில் அறிமுகமாகி 1950-60 குணச்சித்திர நடிகர்களாக (9வது தொடர்) மாறிய நடிகர்களை பற்றி எழுதியிருந்தேன். ( அந்த கட்டுரையை வாசிக்க... )

அதற்கு, ’பூபால் சிங்’ சென்ற வாசகர் எஸ்.வி.சுப்பையாவை எப்படி எழுதாமல் விடுப்பட்டது என்று எதிர்வினை புரிந்திருக்கிறார். 1950-70 பற்றிய குணச்சித்திர நடிகர்களைப் பற்றி குறிப்பிடும் போது எஸ்.வி.சுப்பையா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.வாசு (நகைச்சுவை + குணச்சித்திரம்) போன்ற நடிகர்களை குறிப்பிட வேண்டும் என்று வைத்திருந்தேன் என்கிற விளக்கத்தை தொலைப்பேசி மூலம் அவருக்கு தெரிவித்தேன்.


சென்ற ஆக்டோபர் மாத இதழில் சினிமாவைப் பற்றிய எனது கட்டுரைக்கு பதிலாக இவருடைய வாசகர் கடிதம் இடம் பெற்றுயிருக்கிறது.

உரத்த சிந்தனை போன்ற தன் நம்பிக்கையூட்டும் இதழில் சினிமாவுக்கும், இலக்கியத்திற்குமான பக்கங்கள் மிக அறிதாகவே கிடைக்கும். அதில் சினிமாவைப் பற்றிய தொடர் எழுத வாய்ப்பு கொடுத்து, வாசகர்களில் கவனத்தை பெறுகிறது என்றால் மிகப் பெரிய விஷயம். மாதம் 10-15 பேர் தொலைப்பேசியில் பாராட்டுகிறார்கள். இந்த தொடருக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பூபால் சிங் எதிர்வினையை விட, அதை பிரசுரம் செய்த உரத்த சிந்தனை இதழுக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

Tuesday, February 7, 2012

இரண்டு வாசகர் கடிதங்கள் !

தேதி : 28.1.12

பேரன்பின் நல்வீர் !

வணக்கம். தமிழினியன் வெளியிட்ட பொங்கல் மலரில் யோசனை மட்டுமல்ல, அறிவுக் கூர்மையான எண்ணங்களை கூறியதை அறிந்து மகிழ்ந்தேன். ”புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை” என்ற தலைப்பில் எழுதியவைப் பாராட்டிற்குறியது. சீர்காழி வட்ட நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் என்ற முறையில் தாங்கள் கூறிய கருத்துகளையே யான் வலியுறுத்திப் பேசுவேன்.

தொலைக்காட்சி ஊடகங்களால் புத்தகங்களைப் படிப்போர் குறைந்து வருகின்றனர். நல்ல எழுத்தாளர் படைப்புகளை வரவேற்று வணங்கிப் படிக்க வேண்டும். “உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்றத்திற்கும் நல்வழிக்கும் புத்தகமே அளிக்கும் என்பதும் கடவுள் தீர்த்து வைக்க முடியாதத் தீர்வுகளுக்குப் புத்தகங்கள் தீரு உண்டு என்பது உண்மையின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள் !!

நன்றி,

அன்புடன்,
ஜெ.சண்முகம்
தென்பாதி – 609111
சீர்காழி.

**

தேதி : 24.1.12

மதிப்பிற்குரிய கவிஞர் மற்றும் பதிப்பாளர் குகன் அவர்களுக்கு,

என் புத்தகம் ஒன்றினை அனுப்பி உங்களது கருத்துக்களை கேட்டு இருந்தேன். எவ்வித தயக்கமின்றி உண்மையான விமர்சனத்தை என் கவிதைக்கும், எனக்கும் தந்தீர்கள். அதற்காக ஓர் மிகப் பெரிய நன்றி ! நன்றி !!

அதன் பின்னர், கைப்பேசியில் உரையாடும் போது ஓர் எழுத்தாளன் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும். எவ்வாறு எழுத வேண்டும், எந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென கூறினீர்கள். அது மட்டுமின்றி, எனக்காக தனிப்பட்ட குறிப்புகளை தந்தீர்கள். ஒரு நல்ல கவிஞனாய், பதிப்பாளனாய் உங்களைப் போன்று ஒரு சிறந்த மனிதரை பார்ப்பது மிகவும் அரிது. எனினும், நீங்கள் கூறிய அறிவுரைகள், சில அனுபவங்கள் உங்களின் உண்மையான மனதை மிகவும் அழகாக வெளிகாட்டுகிறது.

இதுமட்டுமின்றி, எனது கவிதையில் ஒரு கவிதை மட்டும் பெண்ணை குறிப்பிடுவதாக கூறினீர்கள். அது என் தவறல்ல பதிப்பதித்தாரின் தவறு, ஒரேயொரு எழுத்து மட்டும் மாறிவிட்டது.

உங்களிடம் உங்களது பதிப்பக புத்தகம் இரண்டை கேட்டேன். கூடிய விரையில் M.O. அனுப்பி பெற்றுக் கொள்கிறேன்.

”நமது நட்பு எப்போதும் தொடரட்டும்
வாழையடி வாழையாய்”


தோழமையுடன்,
”தாய்” சுரேஷ்
கடத்தூர்.

****

எனக்கு வந்த இரண்டு வாசகர் கடிதங்களை இங்கு குறிப்பிட்டதற்கு இரண்டு காரணம் உள்ளது. கடைசி காரணம் சுய விளம்பரம். முதல் காரணம், மின்னஞ்சல், செல்பேசி வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் இன்னும் கடிதம் எழுதும் கலாச்சாரம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது என்பது தான்.

அதுவும்”தாய்” சுரேஷ்யின் கடிதம் சொல்லியாக வேண்டும். என் விமர்சன பதிவுக்கு பிறகு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு மூன்று முறை போனில் பேசியிருப்போம்.

ஏற்கனவே நன்றி சொல்லிய பிறகு எதற்கு கடிதத்தில் இன்னொரு நன்றி என்று கேட்ட போது, " நான் உங்களிடம் பேசிய எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு நினைவில் இருக்க போவதில்லை. ஆனால்,பல வருடம் கழித்து கடிதத்தை நீங்கள் பாதுகாத்து படித்தாலும் நான் உங்களிடம் புதிதாக பேசியது போல் இருக்கும்" என்றார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வாசகர் கடிதம் எழுத தொடங்கி எழுத்தாளனாக மாறியதை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எழுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியாக இருந்த வாசகர் கடிதம் நாற்பது வயது தாண்டியவர்கள் மட்டுமே பயன்ப்படுத்தி வருகிறார்கள். வலைப்பதிவுகளில் மட்டுமே "எதிர்வினை", ”பின்னூட்டம்” என்ற பெயரில் இளைய வாசகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

எழுத்தாளனுக்கு பின்னூட்டம், எதிர்வினை மின்னஞ்சலை விட ”வாசகர் கடிதம்” வாசகனை நேரில் சந்துக்கும் பிம்பத்தை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இரண்டு வாசகர் கடிதம் படித்த பிறகு, எனக்கு வந்த வாசகர் மின்னஞ்சலையும் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Wednesday, June 30, 2010

நடைபாதை - எதிர்வினை

அன்பரீர் ! வாழ்க !

தங்களின் 112 பக்கத்தில் அடங்கிய 24 தலைப்புக்கள் கொண்ட 'நடைபாதை' சிறுகதைத் தொகுப்பை, 11.10.08ல் பெற்றேன். படித்தேன்.

சிறுகதைகள் ஒவ்வொன்றும் தங்களின் சமூதாய உணர்வைக் காட்டிய வண்ணம், எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ரசித்தேன். குறிப்பாக 'வலி' என்ற சிறுகதையும், 'இன்னொரு கண்ணதாசன்', 'உனக்கு நீ செய்யும் உதவி' போன்றவை நன்று.

'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதை 'உரத்தசிந்தனையின் பரிசு பெற்றது என்று நினைக்கிறேன். அதில் படித்ததாக நினைவு. சரியா ?

சிறுகதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டவை மட்டுமல்ல; சில ச்மூதாயப் பழுது நீக்குபவையும் ஆகும். உங்கள் முயற்சி வெல்க !

கட்டுரையிலிருந்து கதை எழுத முயற்சி எடுத்திருக்கிறீர்கள். 'எனது கீதை'யிலிருந்து இது மாறுபட்டிருப்பதும், முன்னேற்றப்பாதையில் செல்வதும் நன்று. கூடுமானவரை ஆங்கில சொற்களைத் தவிர்த்த பேச்சு மொழியை இனி பயன்படுத்துக.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அரிமா மூரளீதரன்
15.10.2008



நான் சந்தித்த வாசகர்களில் மிகவும் வித்தியாசமானவர். எந்த புத்தகம் கொடுத்தாலும் இரண்டே நாட்களில் படித்து முடித்து அதன் விமர்சனத்தை தபாலில் அனுப்பி விடுவார்.

'எனது கீதை' நூல் வெளியீட்டு முன்பு நாள், இவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புத்தகத்தை பற்றி பாராட்டி பேசினார். நூல் வெளிவர முன்பே எப்படி புத்தகம் இவருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. புத்தகம் படித்து விட்டு கருத்துக்கள் சொல்பவர்கள் மிக சிலரே. அதில், முரளீதரன் போன்றவர் மிகவும் வியப்பு தக்க மனிதர். தொலைப்பேசியில் கருத்தை கூறினாலும், கடித்ததில் எழுதி அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று கடித்தம் எழுதி அனுப்புவார்.

இவ்வளவு ஆர்வமுள்ளவராக இருப்பவர் இளைஞராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இவரை நேரில் சந்திக்கும் போது ஏமாற்றம் தான். ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர். 63 வயது.

சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரை, கதை கொண்டு நினைவில் வைத்து பேசுவார். தீவிரமாக வாசித்தவர்களை பார்த்திருக்கிறேன். வாசித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு மனிதனை சந்தித்தேன் என்றால் அது இவர் தான். என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்லாமல் மற்றவர் எழுதிய கட்டுரை, கதைகளை அந்த எழுத்தாளரிடம் சொல்லி தன் கருத்தை கூறுவார். இவர் போன்ற வாசகரை பார்க்கும் போது தான் எழுத்துபவருக்கு தன் எழுத்து மீது நம்பிக்கை பிறக்கிறது.

சமீபத்தில் உடல் நல குறைவால் எந்த நிகழ்ச்சிக்கும் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஒய்வு பெறும் வரை குடும்பத்திற்காக உழைத்தவர். ஒய்வு பெற்ற பிறகு 'தமிழுக்காக உழைத்தேன்' என்று சொல்லுவார். ஆனால், அவர் உடல் ஒத்துழைக்கவில்லை.

இவருடைய விமர்சனத்தை படிக்கும் போதும், கேட்கும் போதும் உத்வேகமாய் இருந்தது. அதே சமயம் செய்ய நினைத்ததை காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும் பயமும் பற்றிக் கொண்டது.

நடைபாதை நூலை வாங்க...

Friday, May 14, 2010

மீண்டும் ஒரு காதல் கதை - எதிர்வினை

இணையத்தில் தொடராய் வந்து விரைவில் புத்தகமாய் வருவிருக்கு கேபிள் சங்கர் எழுதிய 'மீண்டும் ஒரு காதல் கதை' நெடுங்கதை பற்றிய என் பார்வை. புத்தகம் வரும் முன்பே முதல் விமர்சனம் என்னுடையதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.



தொடக்கத்தில் ஒரு பெண் சங்கரிடம் தொலைப்பேசியில் பேசுகிறாள். அந்த பெண்ணில் குரல் கேட்டதும் அவன் தன் பழைய காதலி 'ஷ்ரத்தா' என்று புரிந்துக் கொள்கிறான். அவனை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறாள். சங்கர் சம்மதம் சொல்லி போனை துண்டிக்க, அவனது நினைவலைகள் ஐந்து வருடம் பின்னோக்கி செல்கிறது. சங்கர், ஷ்ரத்தா ஐந்து வருடம் முன்பு எப்படி சந்தித்தார்கள், எந்த சூழ்நிலையில் காதலர்களானார்கள், ஏன் பிரிந்தார்கள் என்று கதை நகர்கிறது.

சங்கரின் பார்வையில் ஷ்ரத்தா கதாபாத்திரம் விளக்கப்படுவதால் அந்த பெண்ணின் கதாபாத்திரம் அதிகம் மனதில் நிற்கிறது. ஆரம்பத்தில் ஹோட்டலில் சாப்பிடும் போதும் சங்கருக்கும் சேர்த்து ஆர்டர் செய்வதில் தொடங்கி அவன் வாழ்க்கையில் அவள் எடுக்கும் முடிவு வரை நன்றாகவே கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் கேபிள். ஒன்பதாவது பகுதி வரை கர்வமானா ஷ்ரத்தாவை வாசகர்களே காதலிக்கும் அளிவிற்று உணர்வு புர்வமாகவே கட்டமைத்திருந்தார்.

கேபிள் சங்கரின் நாயகிகள் பெரும்பாலும் செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள். காதலனுடன் உறவு வைத்துக் கொண்டாலும் சரி, கணவனுக்கு துரோகம் செய்தவர்களானாலும் சரி அதை பற்றின குற்ற உணர்வு இல்லாதவர்கள். தங்கள் தவறுகளுக்கு நியாயமான காரணங்களை கொடுப்பவர்கள். இதில் வரும் 'ஷ்ரத்தா' பாத்திரப் படைப்பும் அப்படி தான். இப்படி கட்டமைத்த நாயகியை தமிழ் சினிமாப் போல் ஐந்து வருட காதலனை நினைத்துக் கொண்டு இருப்பது போல் சொல்வது சுத்த அபத்தமாக உள்ளது.

க்ளைமாக்ஸ் பகுதியில், கர்வமும், எள்ளி நகையாடும் குணமும் காட்டும் இடத்தில், ஷ்ரத்தா உடல் உறவு வைத்துக் கொள்ள நினைப்பது இதுவரை வடித்த பாத்திரத்துக்கு முரணாக காட்டுகிறார். மிக எளிமையாக சொல்லுவதென்றால், ஓப்பனிங்கில் பாலசந்தர் நாயகி போல் வந்து இறுதியில் பாரதிராஜா நாயகி போல் முடிக்கிறார்.

லட்சியமே கனவாய் கொண்ட ஒரு ஆணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வரும் போது, கர்வம், திமிர், செக்ஸ்யை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அலட்சியம் கொண்ட பெண்ணுக்கு ஐந்து வருடத்தில் இன்னொரு காதல் வராதா ?? இந்த கதையின் முடிவு - ஆண் ஆதிக்கம் தனம்.

இரண்டும், மூன்று நாட்களாக என்ன முடிவு வைத்திருக்கிறோ என்று அவர் பதிவை மோப்பமிட்ட என்னை ஒரு சினிமா தனமான முடிவை கொடுத்து கேபிள் என்னை ஏமாற்றிவிட்டார்.

கடைசி பகுதியையும், முதல் பகுதியில் பத்து வரிகளையும் நீக்கிவிட்டு படித்தால் நல்ல காதல் (திரை) கதை படித்த அனுபவம் தருகிறது.

ஏழாவது பகுதிக்காக மறுபடியும் வாசிக்கலாம்.

Wednesday, April 28, 2010

எனது கீதை - எதிர்வினை

நீச்சல் தெரியாதவன், கைக் கொடுத்து தூக்கி விட ஆள் இல்லாதவன் தைரியமாக கடலில் குதித்தால் என்னவாகும் ? அப்படி ஒரு வேலையை தான் "எனது கீதை" நூலை எழுதி வெளியிட்டேன். எந்த திட்டம் போடாமல், வாசிப்பு பழக்கம் உள்ள நண்பர்கள் இல்லாமல், யார் கருத்தும் கேட்காமல் நூல் போட வேண்டும் என்ற வேகத்தில் வெளியிட்டது. வெளியீட்டு விழா உட்பட 17,000 ரூபாய் செய்தேன். ஆனால், வெளியீட்டு விழாவில் 3000 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது.

அதன் பிறகு அடுத்த புத்தகம் ( நடைபாதை) போட எனக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது. பதிப்பகம் தொடங்கிய பிறகு விற்பனையாகும் நூல்களோடு இதையும் சேர்த்து தள்ளிவிடுகிறேன். இலவசமாக போனால் கூட பாரவாயில்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு "எனது கீதை" எனக்கு கசப்பான அனுபவத்தை தான் கொடுத்துள்ளது.

நேற்று ஒரு வாசகரிடம் இருந்து வந்த கடிதம் படித்த பிறகு, என்னை சந்தோஷப்பட செய்ததோடு இல்லாமல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், கடிதம் வந்திருந்த இடம் திருச்சி மத்திய சிறைசாலை.

அந்த கடிதம் கீழ்...

அன்புள்ள மேண்மைக்கு அய்யா உயர்திரு கு.கண்ணன், வெளியிட்டாளர் அவர்களுக்கு உங்கள் வெளியீடு மூலமாக நான் எனது கீதை புத்தகம் படித்தேன். மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

நான் தண்டனை சிறைவாசியாக 6 1/2 வருடங்களாக திருச்சி மத்திய சிறையில் இருந்து 'B.A' சமுகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஆகையால் அய்யா அவர்கள் 'உறங்காத உணர்வுகள்' (கவிதை) புத்தகம் ஒன்று எனக்கு அனுப்பி வைத்தால் நான் மற்றும் நண்பர்கள் படித்து இங்கு எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருப்போம்.

ஆகையால் அய்யா அவர்கள் எங்களுக்கு புத்தகம் அனுப்பி வைத்து உதவி செய்ய வேண்டும்.

- வி.செந்தில்குமார்.
மத்தியசிறை, திருச்சி
21.4.10


துரதிஷ்டவசமாக என்னிடம் 'உறங்காத உணர்வுகள்' பிரதிகள் இல்லை.

***

அடுத்து இன்னொரு கடிதம்.இந்த கடிதம் வந்து மூன்று ஆண்டுகள் மேலாகிறது. முகவரி போடாமல் பெயர் மட்டுமே குறிப்பிட்டு இந்த கடிதம் வந்தது.

தோழர் குகன் அவர்களுக்கு ரவிதாசனின் வணக்கம்.

என் திருமணம் 31.8.06 அன்று நடந்தது. என் திருமணத்தின் பரிசுப் பொருட்களாக வந்த புத்தகங்களில் தங்களின் "எனது கீதை"யும் உண்டு.

எட்டு மாதங்களுக்கு முன் தங்களின் புத்தகத்தை எடுத்து அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு, இது சீடம் பழக்கம் நிறைந்த ஆன்மீக புத்தகமாக இருக்கக் கூடும் என்று அலட்சியமாக வைத்துவிட்டேன்.

சென்ற வாரம், என்ன தான் எழுதியிருக்கிறது என்று எடுத்துப் படித்த போது, தங்களின் அரியத் தகவல் என் அகத்தைக் கவர்ந்தது. அற்புதமான நடை, எளிமை ஓட்டம். தலைப்பை நிரப்புவதற்கு நீங்கள் தேடித் தொகுத்த சான்றுகள். இவையாவும் உங்களை முதிர்ந்த எழுத்தாளராக காட்டுகிறது.

தங்களை தாழ்த்தி எடைப் போட்டத்திற்கு மன்னிக்கவும். தங்களின் நட்பு எனக்கு ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.

அன்புடன்,
ரவிதாசன்
14.8.07


செந்தில்குமாரின் கடிதம் படித்ததும், ரவிதாசன் கடிதம் நினைவுக்கு வந்தது. இவரை நேரில் சந்தித்த போது ஒரு விதவை பெண்ணை மணந்துள்ளார் என்பது தெரிந்தது.

இது போன்ற வாசகரின் பாராட்டு கிடைக்கும் போது எத்தனை தோல்வி பெற்றுயிருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்து விடுகிறது.

புத்தகத்தை வாங்க... இங்கே.

Tuesday, March 23, 2010

வங்கி ரகசியம் - ஓர் எதிர்வினை (KATHIR = RAY)

நான் கிரடிட் கார்ட் வங்கியின் அங்கமாக வைத்தே 'வங்கி ரகசியம்' பதிவை எழுத தொடங்கினேன். முழுக்க முழுக்க கிரடிட் கார்ட்டை பற்றி தொடர் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. என் முதல் பதிவு 'சேமிப்பு வட்டி கணக்கு' கிரடிட் கார்ட்டு சம்மந்தம் இல்லாத பதிவு. பலர், வங்கி ரகசியம் தொடரில் கிரடிட் கார்ட் எழுதியதும் பலர் ‘கிரடிட் கார்ட்’ சம்மந்தமாக பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

KATHIR = RAY என்ற நண்பர் தனது பின்னூட்டத்தில் பத்து கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கான என்னுடைய பதில்...

1.Credit period epdi calculate pandrange. Porul Vanganathula irunda? or Card Active la irundu every 50 days count ah?

பொதுவாக வங்கிகள் மாதம் இரண்டு கட்டமாக தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பும்.

உதாரணத்திற்கு,
முதல் கட்டம்
1.1.2010 முதல் 31.1.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 20.2.10 குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 10.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

இரண்டாவது கட்டம்
12.1.10 முதல் 12.2.10 வரை நீங்கள் பொருள் வாங்கிய பொருளுக்கு 3.3.10 (50 நாள்) குள் பில் பணம் செலுத்த வேண்டும் என்பது பொல் 22.2.10 தேதிக்குள் உங்கள் கையில் பில் வரும்.

முதல் கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது கட்டத்தில் பில் வராது. அதே போல், இரண்டாவது கட்டத்தில் பில் வரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டத்தில் பில் வராது.

இந்த இரண்டு கட்டமும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். ஒரு சில வங்கிகள் ஒரே கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பில் அனுப்பலாம். ஆனால், நீங்கள் வாங்கும் எல்லா பொருளுக்கும் 50 நாள் கடன் வசதி கிடையாது.

31.1.10 ( முதல் கட்டம்) ஒரு பொருள் வாங்கிருந்தால் 20.2.10 தேதிக்குள் பணத்தை கட்டியாக வேண்டும். உங்களுக்கு எப்போது பில் வரும், எந்த தேதிக்குள் பில் தெரிந்துக் கொண்டு கிரடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டும்.

2. What are the Hidden charges is there?

Hidden charges கிடையவே கிடையாது என்று சொல்லி தான் கிரடிட் கார்ட் எல்லோர் தலையில் கட்டுகிறார்கள். வாங்கிய பிறகு தான் ஒவ்வொரு வங்கியின் Hidden charges ' தெரிகிறது. Hidden charges ஒவ்வொரு வங்கியின் சதம்பர ரகசியம். முழுமையாக தெரிந்துக் கொள்வது கடினம்.

3. How the service charges differ from each credit card companies?

நீங்கள் Citibank Credit card' வைத்து ஒரு பொருளை வாங்குகிறீர்கள். அந்த கார்ட்டை Citibank EDC machine யில் தேய்த்தால் உங்களுக்கு 'செர்விcஎ சர்கெச்' கிடையாது. ஆனால், Citibank Credit card' ஐ HDFC/Axis bank EDC Machine ' யில் தேய்த்தால் 2.5 % 'செர்விcஎ சர்கெச்' போடுவார்கள்.

ஒரு சில கடையில், 'service charges சேர்த்தே உங்களை பணம் கட்ட சொல்லுவார்கள்.

நீங்கள் பயன்படுத்தாத கார்டுக்கு 'service charges’ போட்டால் பணம் செலுத்த வேண்டாம். அந்த மாதிரியுடன் உறவு வைத்துக் கொள்ளுவது என்றும் ஆபத்தானது. கார்ட்டை திருப்பி கொடுத்துவிடவும்.


4. What are the solution for technical problem?
Like excess money transferred.
Like double time credit problem


இது போன்ற சமயத்தில், Customer Care ஐ தொடர்பு கொள்ள வேண்டும். double time/ Excess money யான 'Transaction' ஐ ப்ளாக் செய்ய வேண்டும். உங்களிடம் ஒரு PDF file அனுப்பி, அதை நிரப்பி பேக்ஸ் / ச்கேன் மூலம் அனுப்ப சொல்லுவார்கள். அதன் பின், வங்கி தவறு நடந்த காரணத்தை விசாரிக்கும். தங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதிகமான பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

5.What is the service charge for monthly or yearly?
மூன்றாவது கேள்விக்கு பதில் தான் இதற்கும்.

6.What are the risk factors?
7.Details of Terms and conditions of every credit card company?

இதை பற்றி தனி பதிவு எழுதுகிறேன்.

8.Which card is best?
இந்த வம்பே வேண்டாம். நான் யாரையும் 'Promote' செய்யும் நோக்கத்துடன் இந்த பதிவு எழுதவில்லை.

ஒரு சிலருக்கு, குறிப்பிட்ட வங்கியின் சேவை பிடிக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காது. ‘Best or Worst’ என்பதை பெரும்பான்மையின் அனுபவம் தான் தீர்மானிக்கிறது.

9. Comparative statement of Every credit card companies Services and charges.
இந்திய அரசியல் கட்சிகளை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களின் சாதனைகளை சொன்னால் இதற்கு நான் பதில் சொல்கிறேன்.

10. Describe details statement of the good process using Credit card. Example Credit card Statement for Good Transaction and bad transaction.
முதல் கேள்விக்கான பதிலில் குறிப்பிட்டுயிருக்கும் உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன்.

Tuesday, October 6, 2009

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினை

கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது. அதுமட்டமில்லை... எம்.ஆர்.பியை விட 3 ரூபாய் அதிகமாக கொடுப்பது தான் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. கேபிள் சங்கர் இவ்வளவு சுயநலமானவர் என்று நான் நினைக்கவில்லை.



டாஸ்மாக் கடையில் ஒரு ப்ளாஸ்டிக் க்லாஸ்யின் (அசல் விலை 1 ரூ.) விலை 2.5 ரூபாய். ஒரு வாட்டர் பாக்கெட்டின் (அசல் விலை 1 ரூ) விலை 2.5 ரூபாய். ஆக, ஒரு க்வாட்டர் குடிப்பவன் கண்டிப்பாக ப்ளாஸ்டிக் க்லாஸ், தண்ணீர் இல்லாமல் குடிக்க முடியாது என்பதால் அவன் வாங்கி தான் திற வேண்டும். இதில் 3 ரூபாய் டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறான். ஒரு நாளைக்கு 200 பேர் குடிக்கிறார்கள் என்றால், 600 ரூபாய். மாதத்திற்கு 18,000 ரூபாய்.

டாஸ்மாக்கில் கடை போட்டு முட்டை, சிக்கன் விற்பவன் தனக்கு ஆகும் விற்பனையில் இருந்து 2 சதவீதம் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆதாவது நீங்கள் வாங்கும் சிக்கன், மட்டன், பீப், கடலை, ஆம்லேட் எல்லாவிற்றில் இருந்து இரண்டு சதவீதம் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் வாங்கி குடிப்பவர்கள் யாரும் பில் வாங்குவதில்லை. ஒரு நாளுக்கு இவ்வளவு தான் சேல்ஸ் என்று சொன்னாலும் நம்பி தான் ஆக வேண்டும். அதில், டாஸ்மாக் அநியாய லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது எல்லாம் போக் நீங்கள் குடித்து விட்டு பாட்டில் அங்கேயே வைத்து விட்டு வந்தால், பழைய கடையில் ஒரு பாட்டில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 200 பாட்டில் என்றால் 200 ரூபாய். ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய். வருடத்திற்கு 72,000 ரூபாய்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக... இரவு 10 மணிக்கு கடையை மூட வேண்டும். ஆனால், 9:45 மணிக்கு 'Closed' என்பான். நீங்கள் கேட்டால், அக்கௌண்ட்ஸ் பார்த்து மூட வேண்டும் என்பான். கொஞ்சம் குரலை உயர்த்தி செட்டு சேர்ந்து கத்தினால் கொடுப்பான். சில சமயம் செட்டு சேரவில்லை என்றால்... அவ்வளவு தான். தர மாட்டான். 10 மணிக்கு மேல், 60 ரூபாய் க்வாட்டரை அங்கு சிக்கன் கடை போட்டவன் 100 ரூபாய்க்கு விற்பான். அந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் சொல்லும் விலையில் வாங்கி தான் ஆக வேண்டும். இதில் டாஸ்மாக் அநியாய அநியாயத்திற்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களிடம் பங்கு வாங்குவதற்கு போலீஸ் காத்திருப்பு தனி கதை...!!

டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

LinkWithin

Related Posts with Thumbnails