அது ஒரு சிற்றிதழில் ஆண்டு விழா நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக 'நாகரத்னா பதிப்பக' சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி அமைப்பாளரின் அனுமதிப் பெற்று தான் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகனாக இருந்த எனக்கு புத்தக விற்பனையாளனாக முதல் அனுபவமும் அது தான்.
நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மேடையில் பேசிய பேச்சாளர் பார்வையாளர்களை வறுத்தெடுக்க்க் கூட்டத்தில் சிலர் புத்தகத்தைச் சூழத்தொடங்கினர்.
நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டவர்களில் பலர் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு பேச்சு சுவாரஸ்யமாக இல்லை என்பதால் வெளியே வந்திருக்கலாம், அங்கே இருந்த எமது பதிப்பக நூல்களைப் பார்வையிட்டார்கள். அதைக் கண்ட நிகழ்ச்சி அமைப்பாளர், " வர கூட்ட எல்லாம் கண்காட்சிக்கு வந்திருச்சுனா... ஹால்ல யாரு இருக்குறது. இதுக்கு தான் யாருக்கு ஸ்டால் போட அனுமதி தரதில்ல...." என்று எல்லோர் முன்பும் என்னை வசைபாடினார்.
இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்திகின்ற பலர் அரங்கின் வெளியே புத்தக்க் கடை வைப்பதால், அரங்கினுள்ளே கூட்டம் குறைகிறது என்று அஞ்சுகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியின் கூட்டத்தை புத்தகம் குறைக்க முடியும் என்றால் (எதிர்மறை சிந்தனை) நிகழ்ச்சிக்கு கூட்டத்தை புத்தகத்தால் சேர்க்கவும் முடியும் என்பதை உணர வேண்டும் (நேர்மறை சிந்தனை).
ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் உறுப்பினர் புத்தகங்கள் தங்கள் சங்க நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கலாம். நிகழ்ச்சி கலந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், தன் புத்தகத்தை பார்வைக்கு வைப்பதற்காக கண்டிப்பாக கலந்து கொள்வார்கள்.
அதைப்போல, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ’நூல் விமர்சன’ என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது, நூலுக்கும், எழுத்தாளருக்கும் விளம்பரம் கிடைக்கும்
இன்று எத்தனையோ இலக்கிய அமைப்புகள், சங்கங்கள் பல எழுத்தாளரையும், பேச்சாளரையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் அவர்களை வாசகனிடத்திலோ, பார்வையாளனிடத்திலோ சரியாக கொண்டு சென்றதில்லை.
ஐம்பது புத்தகம் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர்க் கூட தீவிரமாக புத்தகம் வாசிக்கும் வாசகனுக்கு பரிச்சயமாவதில்லை. காரணம், அப்படிப்பட்டவர்கள் நூலக ஆணையை நம்பியே புத்தகம் வெளியிடுகிறார்கள். நூலக ஆணை என்பது எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பலம் மறுப்பதற்கில்லை.
நூலக ஆணை மூலம் பெறப்படும் நூலகங்களில் தேங்கிக் கிடக்கும், நூலகத்திற்கு அனுப்பியது போக மீதமுள்ள நூல்கள் அவரவர் வீட்டின் அலமாரியிலோ பரணையிலோ தேங்கிக்கிடக்கும்.
உண்மையான எழுத்து என்பது உறங்கி கொண்டு இருக்கும் மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்புவது உண்மையான எழுத்து. பலரின் புத்தகங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எப்படி அவர்கள் எழுத்து மனசாட்சியை எழுப்ப போகிறது. இதில் இருந்து நாம் மாறுப்பட வேண்டும்.
காலத்திற்கேற்றாற்போல் நம்மையும் நாம் மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித் தனம்.
நவீனமயமாகிவிட்ட உலகில், ஒர் வாசகன் புத்தகத்தைத் தேடி நூலகத்திற்கோ அல்லது புத்தகக் கடைக்கோ செல்வான் என்று எண்ணாமல், வாசகனைத் தேடி எழுத்தாளர்கள் பயணம் செய்ய வேண்டும். இலக்கிய நிகழ்ச்சிகள் மூலமாகவோ, நூல் விமர்சனம் மூலமாகவோ, நண்பர்களிட்த்திலோ, ஏன்…. ‘இணைய புத்தக அங்காடி தளங்கள்’ உதவியுடனும் புத்தகங்களை விற்பனை செய்யலாம்.
ஒரு பதிப்பகம் போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும் என்ற முயற்சியிலும் இறங்கியுள்ளது. இன்று அந்த பதிப்பகம் முன்னனியில் அடைந்திருப்பதற்கு காரணம் அவர்களின் மாறுப்பட்ட புத்தக விற்பனை சிந்தனை தான்.
வீடு தோறும் பூஜை அறை இருப்பது போல், வீடு தோறும் நூலகம் இருக்க வேண்டும். வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் கொடுக்கும். எந்த கடவுளாலும் தீர்த்து வைக்க முடியாத தீர்வுகளுக்கு புத்தகங்களில் தீர்வு உண்டு. நண்பர்களுக்கு பரிசு பொருள் அளிப்பதற்கு பதிலாக புத்தகங்களை அளிக்கலாம். குறைந்த பட்சம் புத்தக ஆர்வமுள்ளவர்களுக்காவது புத்தகங்களை பரிசளிக்கலாம்.
இப்படி, இலக்கிய அமைப்பு, புத்தக விற்பனையாளர்கள், வாசகன் என்று புத்தகங்களை பற்றி தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டால் தான் நல்ல புத்தகங்கள் அடுத்த அச்சுக்கு மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்.
( ’இலக்கியச் சோலை - பொங்கல் மலர் 2012’ ல் வெளியான நான் எழுதிய கட்டுரை)
No comments:
Post a Comment