நேற்று (12.1.12) புத்தகக் கண்காட்சியில் வேறும் வின்டோ ஷாப்பிங் தான். என் கல்லூரி நண்பனும், சிவாஜி இணைய டி.வி உரிமையாளருமான அருண் சிதம்பரம் வந்திருந்ததால், அவனுக்கு புத்தகங்களை சிபாரிசு செய்யவே சரியாக இருந்தது. தன் இணையத்திற்காக, குழந்தைகளுக்கு டி.வி.டி வெளியீடும் மல்டிமீடியா நிறுவனங்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டு இருந்தான். அருண் வாங்கி புத்தகங்களில், நான் எழுதிய "நடைபாதை" சிறுகதை (புதுபுனல் ஸ்டால்.442) நூலும் ஒன்று. அவனை வழியனுப்பிய பிறகு டிஸ்கவரி புக் பேலஸ்க்கு (ஸ்டால்.334) சென்றேன்.
வாசகர்களுக்கு கையெழுத்து போட்டு களைப்புடன் கேபிள் சங்கர் அமர்ந்திருந்தார். முந்தைய இரண்டு நாட்களை விட, இன்று கூட்டம் குறைவென்று வேடியப்பன் கூறினார். தண்டோரா, பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர் அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, 'ஆண்மை தவறேல்' இயக்குனர் குழந்தைவேல் டிஸ்கவரி புக் பேலஸ்க்கு வந்தார்கள். பாஸ்கர் சக்தியின் 'கனக துர்கா', கேபிள் சங்கரின் "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" நூல்களை மீண்டும் வெளியீடுவது போல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றதுக்கு, புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். புத்தகம் எதுவும் வாங்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
**
பதிவுலகில் 'தல' என்று அழைக்கப்படும் யெஸ்.பாலபாரதி சத்தமே இல்லாமல் 'சாமியாட்டம்' என்ற சிறுகதை தொகுப்பை வெளியீட்டு இருக்கிறார். அந்த நூலை பதிப்பித்திருப்பவர் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். அதன் உரிமையாளர் உதயகண்ணன் என் நெருங்கிய நண்பர். 'சாமியாட்டம்' சிறுகதை தொகுப்பு டிஸ்கவரி புக் பேலஸ் (334) கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
2 comments:
i liked your blog
we all love good books
Post a Comment