காடுகள் அழித்து
வீடுகள் கட்டினோம்
மனிதர்கள் வந்தார்கள்
மழை வரவில்லை !
வேலை வாய்ப்பை பெருக்க
தொழிற்சாலை கட்டினோம்
வேலைகள் பெருகியது
குடிநீர் சாக்கடையானது !
மின்சாரத்தின் உற்பத்தியை பெருக்க
அணு மின் நிலையம் தொடங்கினோம்
மின்சாரம் கிடைத்தது
உடம்பில் நோய் பெருகியது !!
மொத்தத்தில்
நம் அடிப்படை வசதிக்காக
நம்மை நாமே அழித்துக் கொண்டோம்
மக்கள் தொகை குறைந்தது !!
**
நான் பாரதியானால்...
நெய்வேலி மின்சாரம்போல்
கடனாய் கொடுத்த வீரத்தை
மீண்டும் உடம்பில் பாய்ச்சிடுவேன்
ஆடைக் குறைப்புப் போட்டிகள் நிறுத்தி
அறிவை வளர்க்கும் போட்டிகள் நடத்துவேன்
பொருட்காட்சியில் வீற்றிருக்கும்ம் தமிழை
அரியணையில் ஏற்றி ஆராதிப்பேன்.
"நம் உரத்தசிந்தனை, ஜனவரி 2012" இதழில் வெளியான என் கவிதை
No comments:
Post a Comment