வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, January 12, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 7 !!

நேற்று (11.1.12) 6 மணிக்கு ஆபிஸில் இருந்து புத்தகக் கண்காட்சிக்கு கிளம்பிய நான், சரியாக 7:30 மணிக்கு அடைந்தேன். மழைக்கும், சென்னை போக்குவரத்துக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

புத்தக கண்காட்சிக்கு அரங்குக்கு நுழைந்ததும் நேராக டிஸ்கவரி புக் பேலஸ்க்கு (334) சென்றேன். வெற்றிமாறன் நூல் வெளியீட்டு சென்றுவிட்டார். லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், டைரி குறிப்பும் காதல் மறுப்பும், நீங்க தான் சாவி சீக்கிரமாகவே தீர்ந்து விடுகிறது. ஐம்பது காபி கொடுங்கள் என்று வேடியப்பன் கேட்டார். அவரசரத்துக்கு என் கையில் பத்து பிரதிகள் மட்டுமே இருப்பதாக கூறினேன். வேடியப்பனிடம் புத்தகம் கொடுத்த சில நிமிடங்களிலே லெமன் ட்ரீயும், டைரி குறிப்பு புத்தகமும் மூன்று பிரதிகள் விற்றுவிட்டது.

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்கிய ராஜராஜேந்திரன் என்ற வாசகர் என்னிடம் வந்து கை குழுக்கினார். என்னுடைய "உலக சினிமா" கட்டுரைகளை வெகுவாக வாசிப்பதாகவும் சொல்லி பாராட்டினார். என்னுடைய "என்னை எழுதிய தேவதைக்கு" (காதல் சிறுகதை) நூலை வாங்கியதோடு இல்லாமல் கையெழுத்தும் பெற்றுக் கொண்டார். என் பதிவையும் படித்து ஒருவர் புத்தகம் வாங்குகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகத்தில் சில சமயம் இதுப் போன்ற அதிசயங்கள் நடக்கும் என்று கேபிள் சங்கர் கூறினார்.

கொஞ்ச நேரம் மார்க்கெட்டிங்காக நேரம் ஒதுக்கலாம் என்று "கருப்பு பிரதிகள்" ஸ்டாலுக்கு (எண். 119) சென்றேன். கொள்கை அடிப்படையில் புத்தகம் வாங்குவதால், கருவை சண்முகசுந்தரத்தின் "பிணம் தின்னும் தேசம்" கவிதை தொகுப்பை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.

பிறகு விழிகள் பதிப்பகம் (எண்.78) ல், கருவை சண்முகசுந்தரத்தின் "பிணம் தின்னும் தேசம்" மற்றும் உமா சௌந்தர்யாவின் "விழிப்பறிக் கொள்ளை" வாங்கிக் கொண்டார்கள். நான் தொகுத்த "கலைஞரின் நினைவலைகள் 100" நூலை நாளை அவசியம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புத்தகக் கண்காட்சி முடியும் தருவாயில், நேசமித்ரன் கையில் "லையன் கம் பேக்" காமிக்ஸ் புத்தகத்தை பார்த்தேன். அடடா ... ! காமிக்ஸ் புத்தகம் வாங்க நினைத்து இன்னும் வாங்க வில்லை என்பது ஞாபகம் வந்தது. உடனே தென்னிந்திய பதிப்பகத்துக்கு (ஸ்டால்.372) விரைந்தேன். அங்கு, விஷ்வா சிரித்த முகத்தோடு வரவேற்றார். புத்தகம் வாங்கிய அன்பிற்காக சர்வே காகிதத்தை நிரப்ப சொன்னார்.

கேபிள், தண்டோரா நட்பு படையுடன் வெளியே வந்தோம்.

நேற்று வாங்கிய புத்தகங்கள்

லையன் கம் பேக் - காமிக்ஸ் புத்தகம்
காமிக்ஸ் பெக் - 5 புத்தகங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails