வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, January 9, 2012

காதல் திருமண அழைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

நான் எழுதிய "என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் !!!

பாலவசந்தா பதிப்பகம் : ஸ்டால் எண் - 416 - 417
டிஸ்கவரி புக் பேலஸ் : ஸ்டால் எண் - 334
புதுப்புனல் : ஸ்டால் எண் - 442

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails