வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, January 10, 2012

நூறடி ரோடு !!

கடவுளுக்கு மிக அருகில் இருந்து ஒரு குரல் கேட்டது. சரக்கடித்து கொண்டு, நூறடி ரோட்டில் நீண்ட நேரம் வண்டி ஓட்டிய கலைப்பில் தன் அறையில் இருக்கும் விநாயகர் படத்தை பார்த்தான் அரவிந்த். பாதி தூக்க கலக்கத்தில் கண்களை பாதி விழித்தவாரு பார்த்தான்.

“ஏய் ! எந்திரிடா...!”

தன்னை தவிற யாரும் இல்லாத அறையில் விநாயகர் படத்தில் இருந்து எப்படி சத்தம் வந்திருக்கும் என்ற அச்சம். போதையில் தள்ளாடிக் கொண்டு பாத்ரூம் கதவை திறந்து லைட் போட்டான். யாருமில்லை.

ஒரு வேளை, வண்டி ஓட்டிய கலைப்பு, போதை மயக்கத்தில் பிரம்மையாக இருக்குமோ என்று உள்ளுக்குள் நினைத்தான்.

“ஏன்டா செஞ்சே ?” என்ற அசூரக் குரல் ஒலித்தது.

“ஆ..!!!” பயத்தில் விரிட்டான். அரவிந்த் மூன்று மடங்காக மூச்சை உள்ளும், வெளியிலும் இழுத்தான். பிரம்மையல்ல.... யாரோ தன் அறையில் தான் இருக்கிறார். தான் தங்கும் அறை, பாத்ரூம் தவிற வேறு எந்த அறையும் இல்லாத சாதான பேட்சுலர் அறை. கதவும் சரியாக பூட்டியிருக்கிறது. யாரும் உடைத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. யார் தன்னை மறைந்திருந்து மிரட்டுவது என்று நினைத்து முடிப்பதற்குள் ஒரு உருவம் கட்டில் கீழ் இருந்து வெளியே வந்தது.

”வேஏ... !“ மீண்டும் அலறல்.

வந்தது பெண் உருவம். ரோஸ் சுடிதார். பகலில் வந்து இருந்தால் அந்த பெண்ணிடம் கடலை போட்டுயிருப்பான் அரவிந்த். நடு இரவில், பயமுறுத்திக் கொண்டு, தனக்கு தெரியாமல் தன் அறையில் இருப்பதை பார்த்ததும் நடுக்கம் தான் மிஞ்சியது.

”யாரும்மா நீ...? எப்படி என் ரூம்க்குள்ள வந்த ? “

அந்த உருவம் எதுவும் பேசவில்லை. கண்களில் குரோதம் இருந்தது. கொலைவெறி தெரிந்தது. அரவிந்த் தைரியம் வரவழைத்துக் கொண்டு, “ ஏன் முறைக்குற ! இப்ப பதில் சொல்லுறியா போலீஸ்க்கு போன் போடட்டா ?” என்று சொல்லி தன் செல்போன் எடுக்க சென்றான்.

தன் செல்போன் சுக்குநூறாக உடைந்திருந்தது. அந்த பெண் உருவத்தின் வேளையாக இருக்கும். உள்ளுக்குள் பயம் பெருகியது. தொண்டைக்குழிக்குள் எதோ உருத்தியது. வெளியே சென்று கீழ் வீட்டுக்கார்ர்களை உதவிக்கு அழைக்கலாம். ராத்திரி நேரம் ஒரு பெண் வீட்டுக்கு வந்த்தை தப்பாக நினைப்பார்கள். பயத்தில் என்ன என்னவோ சிந்தித்துக் கொண்டு இருந்தான் அரவிந்த்.



”ஏன்டா ! செஞ்சே ? “ என்றது உருவம்.

“என்ன சொல்லுற...?”

“வண்டிய ஏன்டா வேகமா ஓட்டுன...”

“ச்சே...! “ சற்று பெருமூச்சு வாங்கிக் கொண்டு, “இத கேக்குறத்துக்கா நடு ராத்திரியில் வந்த. காலையில கேட்கக்கூடாது” சற்று பயம் குறைந்து தனது நக்கல் பாணியில் பதிலளித்தான்.

”திமிரு..! நீ கொழுப்பெடுத்து போய் நூறடி ரோட்டுல புகுந்து புகுந்து போவ... சடன் ஓவர்டேக் பண்ணும் போது எத்தன பேர் பயப்படுவாங்க தெரியுமா ??”

“ரோடுனா நாலு பேரு அப்படி தான் வண்டி ஓட்டுவாங்க...அதுக்கு என்ன இப்போ ?”

அந்த உருவத்துக்கு கோபம் அதிகரித்தது.

“எதுவாக இருந்தாலும் காலையில பேசலாம். இப்ப வெளியே போ...!!” என்றான் அரவிந்த்.

“நீ தைரியமா கட் அடிச்சு ஓவர்டேக் பண்ணுவ. பயத்துல மத்தவங்க கண்ரோல் விட்டு கீழ விழுவாங்கனு யோசிக்க மாட்ட... அப்படி விழுந்தவங்க பின்னாடி வேகமா வர வண்டியில அடிப்பட்டு சாகமாட்டாங்க....”

“யாரோ செத்த மாதிரி பேசுற....”

“அமான்டா...!! செத்துட்டாங்க....!” என்று அரவிந்தை அந்த உருவம் ஓங்கி அறைந்தது.

மறுநாள், அரவிந்தின் இறங்கல் செய்தி செய்திதாளில் வந்தது. பக்கத்து தாளில், இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தடுமாறி கீழே விழுந்ததால் பின்னாடி வந்த லாரியில் அடிப்பட்டு தன் நான்கு வயது மகளோடு இறந்த செய்தி அச்சடிக்கப்படிருந்தது. இறக்கும் போது அந்த பெண் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails