நாள் – 9
நேற்று(13.1.12) , மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சி செல்ல நினைத்த நான், அலுவலக பணியால் என்னால் செல்ல முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. எவ்வளவு நேரமானாலும், இன்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும். முக்கியமான ஒரு மனிதரை சந்திக்க வேண்டும். இப்போது தவறவிட்டால், அவரை மீண்டும் இந்தியா வரும் போது தான் பார்க்க முடியும். கேபிள் சங்கருக்கு போன் போட்டு அவர் வருகிறாரா என்று உறுதி செய்துக் கொண்டேன். கேபிள் தன்னுடன் வருவதாக கூறினார்.
எப்படியோ வேலையை முடித்து, அடித்து பிடித்து 7:30 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நேராக டிஸ்கவரி புக் பேலஸ் அரங்குக்கு(334) சென்ற நான், அங்கு கேபிளுடன் முதுகு காட்டியப்படி அந்த உயரமான மனிதர் பேசிக் கொண்டு இருந்தார். அவர் தான் ‘உ’ பதிப்பக உரிமையாளர் உலகநாதன். மலேஷியாவில் இருந்து ஒரு அபிஷியல் விசிட்காக வந்திருப்பதாக கூறினார். அவருடன் பேசிக் கொண்டு இருக்கும் போது, இயக்குனர் கரு.பழனியப்பன் நின்று இருப்பதை கவனித்தேன்.
அவரிடம் கை குலுக்கி, “ஸார் ! உங்க படத்துல வர வசனம் எல்லாம் சூப்பர்” என்று ஆட்டோகிராப் கேட்டேன். “என்ன தல ! கலாய்க்கிறிங்களா !!” என்றார். அவர் தான், ”சாமியாட்டம்” சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி. உண்மையிலேயே, அவர் ஒரு சைட்டில் பார்க்கும் போது, “இயக்குனர் கரு.பழனியப்பன்” மாதிரி இருந்தார். கிட்ட தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு பாலபாரதியை சந்திக்கிறேன். இடையில், என் நான் எழுதும் “ஓரின சேர்க்கை” பற்றிய கட்டுரைக்காக தொலைப்பேசியில் பேசியதோடு சரி. மீசை, தாடியில்லாமல் பார்த்த நான், இப்போது பார்க்கும் போது ஒரு முதிர்ந்த எழுத்தாளர் போல் காணப்பட்டார். “சாமியாட்டம்” சிறுகதை தொகுப்பு முதிர்ந்த எழுத்தாளர் அந்தஸ்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.
உலகநாதன் புத்தகம் வாங்க வேண்டும் என்பதால், நான் அவருடன் “விகடன்” ஸ்டாலுக்கு சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணன் “தேசாந்தி”, ”சிறிது வெளிச்சம்” புத்தகத்தை வாங்க ஸ்பாரிசு செய்தேன். பிறகு, சுகா எழுதிய கட்டுரை தொகுப்பை வாங்கிறார். நான், விகடனின் “கால பேட்டகம்” மற்றும் “பொக்கிஷம்” புத்தகங்களை வாங்கினேன். விகடனின் புத்தகங்களை வாங்கியதும், “கிழக்கு” ஸ்டாலுக்கு சென்றோம். அங்கு. உலகநாதன் சுஜாதா புத்தகங்களை ஒரு அள்ளு அள்ளிவிட்டார். கேபிள் சொல்ல வண்ணநிலவன், அசோகமித்ரன் புத்தகத்தையும், நான் சொல்லி சாருவின் “எக்ஸைல்” நாவலையும் வாங்கினார். அடுத்து, உயிர்மை பதிப்பகத்தில் சுஜாதாவின் “பதவிக்காக” மற்றும் வாமு.கோமு நாவலை வாங்கினார்.
பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகக் கண்காட்சி முடிந்தும், உலகநாதன், கேபிள், கே.ஆர்.பி. அப்துல்லா, லக்கி எல்லோரும் பேசிக்கொண்டு வெளியே வந்தோம்.
வாங்கிய புத்தகங்கள்
கால பெட்டகம் 1926 முதல் 2000 வரை – ஆனந்த விகடன் குழு
பொக்கிஷம் - ஆனந்த விகடன் குழு
***
நாள் 10
இன்று புத்தக்க் கண்காட்சி சென்றதும் வண்டியை பார்க்கிங் செய்து நேராக பச்சயப்பன் கல்லூரி அருகில் இருக்கும் ப்ளாட்பாரம் கடையில் இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டேன். கொஞ்சம் நேரம் செல்விட்டால் சில நல்ல பொக்கிஷமான நூல்கள் கிடைக்கும். நால் மேலோட்டமாக பார்த்த நூல்களில் கொஞ்சம் விரும்பி வாங்கினேன். கேபிள்ஜியை சந்திக்க நேரமாகியதால், அவரை பார்க்க அரங்குக்கு விரைந்தேன்.
கேபிள்ஜியை சந்தித்து விட்டு, ”லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்”, “டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்” நூல்களை வேடியப்பன் கடையில் ஒரு இருபது பிரதிகள் கொடுத்தேன். நாளை ஞாயிறுக்கிழமை என்பதால், இரண்டும் சக்கை போடு போடும் என்று நம்புகிறேன். பிறகு, அரை மணி நேரம் புத்தகக் கடைகளை நோட்டம் விட்டேன். எதிர் வெளியீடு ஸ்டாலில் ”ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்” மற்றும் கணேசன் ஐயர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” நூல்களை வாங்கினேன். நாளை வெளியூர் செல்ல வேண்டியது இருப்பதால் அடுத்த இரண்டு நாள் புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாது. இறுதி நாள் (17.1.12) கண்டிப்பாக புத்தக்க் கண்காட்சிக்கு வருவேன்.
வாங்கிய புத்தகங்கள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – தமிழில் உஷாதரன்
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்)
ப்ளாட்பாரத்தில் வாங்கிய நூல்கள்
பலி பீடம் – கிரீஷ் கார்னாட்
ஒரு நிடிகையின் கதை – மு.பரமசிவம்
க.நா.சு 90 – தொகுப்பு : சா.கந்தசாமி
காவேரி பிரச்சனை அன்று முதல் இன்று வரை – எல். கணேசன்
ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் – க.பஞ்சாங்கம்
லங்கா ராணி – அருளர்
அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன்
No comments:
Post a Comment