சென்ற வருடம் வாசித்த மிக சிறந்த நாவல். ஒரு வேளை சென்ற வருடம் வெளியான எல்லா நாவல்களை படித்திருந்தால் ‘சிறந்த நாவல்’ என்று பரிசளிக்க எனக்கு தகுதி இருந்திருக்கும்.
ரோஷமன், அந்த நாள், விருமாண்டி போன்ற படங்களில் வருவது போல் ஒரே சம்பவத்தை இரண்டு பேர் பார்வையில் சொல்லுகிறார். கணவன் - மனைவி இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதும், அவர்கள் பிரிவதும் தான் கதை. முதல் பாதி பெண் பார்வையில் சொல்லப்படும் சம்பவங்களும், நியாயங்களும்.... ஆண்ணின் பார்வையில் படிக்கும் போது வேறு பார்வைக் கொடுக்கிறது.
ஒரு மனிதர் இறந்து பதிநான்கு ஆண்டு முடிந்து தனக்கென்று ஒரு ஓட்டு வங்கி வைத்திருக்கிறார் என்றால் அது ‘எம்.ஜி.ஆர்’ அவர்கள் தான். இன்றும், எம்.ஜி.ஆருக்காக அ.தி.மு.கவுக்கு ஓட்டு போடும் கூட்டம் இருக்கிறது. பல கிழவன், கிழவிகளுக்கு எம்.ஜி.ஆர் நாயகனாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். அப்படி, கதாநாயகனான எம்.ஜி.ஆரை இந்த நாவல் மூலம் வில்லனாக்கியிருக்கிறார் தமிழ்மகன்.
வெண்குஷ்டத்தால் ஏற்ப்படும் தாழ்வுபன்மையில் நாயகி பிரியா மனசிதைவு ஏற்ப்படுகிறது. ‘எம்.ஜி.ஆர்’ ஆவி தன் உடலில் இருப்பதாக சொல்கிறாள். சிறு வயதில், தான் படித்த எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களை கணவர் அருணின் நண்பர் ரகுவுடன் விவாதிக்கிறாள். எம்.ஜி.ஆர் மீதான அதீதக ஈடுபாட்டால் நாயகிக்கு ‘பைத்தியம்’ பிடித்தது என்று இருக்க, இறுதி அத்தியாயம் கதையின் கத்திமுனை நாயகனை பார்க்கிறது.
நாவலில் வரும் குறைவான விசனங்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது. குறிப்பாக, முதலிரவில் பேசும் வசனங்களும், இரட்டை அர்த்த வசனங்களும்.
ஒரு நாவலுக்கு அதிக பக்கம் எழுதப்பட்ட விளக்கவுரை இந்த நூலாக தான் இருக்கும். நல்ல வேளை, பதிப்பாளருரை, அணிந்துரை என்று பக்கள் நிரப்படவில்லை. எம்.ஜி.ஆர் இந்த நாவலில் ஒரு அங்கமாக வந்தாலும், இதே கதையை எம்.ஜி.ஆர் சொல்லாமல் கூட சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் மீது இருக்கும் கோபத்த்தை தீர்த்துக் கொண்டாரோ என்னவோ ?
நாவலை படிக்கும் போது, எண்பதுகளில் சிவகுமார், சரிதா நடித்த 'அக்னிசாட்சி' படம் தான் ஞாபகம் வந்தது. மனநல பாதிக்கப்பட்ட மனைவியால் தன் குடும்பத்தில் ஏற்ப்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் பாத்திரமாக சிவகுமார் நடித்திருப்பார். நாவலின் முடிவில் எல்லா பிம்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஆசிரியர்.
புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் வாங்க வேண்டிய நாவல்.
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
No comments:
Post a Comment