ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.
மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.
காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.
‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.
அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.
தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.
மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.
வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.
காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.
“He is not Mahatma. He is an moderm politican"
" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"
காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."
இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.
காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.
தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.
தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.
புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.
இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.
இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.
இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..
இந்த படத்தை முழுமையாக பார்க்க...
4 comments:
முன்பே கேள்விபட்ட படம்..பார்க்க வேண்டும் என்று இருந்தேன்..
தங்கள் எழுத்துக்களே படத்தை பார்க்க ஆவலை தூண்டுகிறது..
நன்றிகள் பல..
இப்படத்தின் டிவிடி கூட கிடைப்பதில்லை.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
//தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார்.// நம்மில் பலரும் செய்யும் தவறுதான். உதவப் போய், ஊறு விழைவிப்பதுபோல - நாமே நம்மை தாழ்த்திக் கொள்ளக்கூடாது இல்லையா?
”தீண்ட தகாதவர்கள் என்று கருதப்படுபவர்கள், அல்லது சமூகம் தீண்ட தகாதவர்கள் என்று ஒதுக்கியவர்கள்” என்று சுற்றி வளைத்தாலும் அதுவே பொருத்தமாகும் என்று நினைக்கிறேன்.
இராம.கி போன்ற யாரும், நறுக்கான மாற்று சொல் கண்டு சொன்னால் இந்த தவறிலிருந்து விடுபட உதவியாய் இருக்கும்.
Post a Comment