வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 31, 2008

தொலைந்து போன தொழிற்கல்வி

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற ஒர பழமொழி உண்டு. இது எதுக்கு பொருந்துதோ இல்லையோ .... நம் நாட்டின் கல்விக்கு பொருந்தும்.

எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.

தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.

“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.

ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.

இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.

எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.

இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )

Wednesday, October 15, 2008

பங்குச்சந்தை ஆலோசனை

'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.

அதில்....

ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.

ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.

ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.

ஆனால்,

ஒரு வடும் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.

'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.

பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.


இப்போது முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வெடிக்கை பார்ப்பது தான் நல்லது. BSE 9500 புள்ளிகள் இறங்கலாம் என்று இன்னொரு கருத்து உள்ளது என்பது காதில் வாங்கிக் கொண்டு முதலீடு செய்யுங்கள்

Tuesday, October 7, 2008

இந்திரா நூயி – இந்தியர்களை நிமிர வைத்த பெண்

'இந்திரா நூயி' பெயரை கேட்டால் எதோ வெறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவர் 100% தமிழச்சி. இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 'B.Sc' படிப்பும், 'IIM'- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் 'Public & Private Management' முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் 'Beardsell' டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnson' என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.

LinkWithin

Related Posts with Thumbnails