வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Thursday, April 2, 2015

வீடு நெடுந்தூரம் (1) - குறும்பட விமர்சனம்

Guhan sir,

Viewed your "veedu neendathuram" in youtube! 

விமர்சனம் செய்தால் படத்தின் சுவாரஸ்யம் சிதைந்து விடுமென்ற வகையான கதைக்கரு என்பதனால் இவ்வாறு என் அபிப்ராயங்களைக் கூறிவிடுகிறேன்! 

முதலில் வழக்கமான அரைத்த மாவு அரைக்கும் பாணியில் இல்லாமைக்கு வாழ்த்துக்கள்! So the "ingate" of the film gets 50% நவீன கதை சொல்லும் யுக்திக்கு 20% ஒரே கதாபாத்திரத்துடன் தயாரிப்புச் செலவைக் குறைத்த சிக்கனத்திற்கு 10% செல்போன் பேச்சு என்று நம்பியிருந்த பார்வையயாளர்களுக்கு போலீஸ்காரர் (அது இரண்டாவது கதாபாத்திரம் என்றாலுமே கணக்கில் வராராததாகத்தான் கொள்ள வேண்டும்!) மூலம் ஒரு Twist ஐ தந்த தந்திரத்துக்கு 5% நட்பின் ஆழத்தை வலியுறுத்திய தரமான கரு விற்கு 10% 

So total 95% கொடுக்கலாம்! 

ஆனால்,  மூடம்பிக்கை என்ற நீரில் நினைத்த அப்பளம் போல ஈஷிக்கொண்டு உள்ளேயும் முழுங்க முடியாமல் வெளியேயும் துப்ப முடியாமல் ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக Minus 50% போட வேண்டியதாகிறது! 

- ராஜூ பாரதி.

 "வீடு நெடுந்தூரம்" குறும்படத்தை பார்க்க....

Thursday, February 7, 2013

திற - குறும்படம் விமர்சனம்

"பொதிகை மின்னல்" மாத இதழில், Prince Ennares Periyar இயக்கிய "திற" குறும்படத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை.


Tuesday, July 3, 2012

பெல் அடிச்சாச்சு - குறும்படம்

‘பெல் அடிச்சாச்சு’ என்ற குறும்படம் பார்த்தேன். மூன்று நிமிடம்தான் ஓடுகிறது. திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் சிருவனை, திட்டி பள்ளிக்கு செல்ல சொல்கிறாள் அம்மா. தூக்க கலக்கத்தில் இன்று, ஞாயிறு பள்ளி இல்லை என்கிறான். ஆனால், அம்மா அவனை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் பள்ளிக்கூடம் செல்கிறான். பள்ளிக்கூடம் முன் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு மகிழ்ச்சியாக வகுப்புக்கு செல்கிறான்.

அப்போது, “பெல் அடிச்சாச்சு...” சீக்கிரம் கொடுடா” என்ற குரல் கேட்டு கற்பனையில் இருந்து மீள்கிறான். முதலில் இடம் பெற்றா காட்சிப் போல் அவன் அம்மா எழுப்ப, பள்ளியில் கடலை விற்க செல்கிறான். ஆம் ! அவன் பள்ளிக்கூடம் முன் கடலை வியாபாரம் செய்யும் தொழிலாளி முதலாளி. கல்வி கற்க ஆசைப்படும் சிறுவனின் கனவு தான் கதை. ஒரே காட்சியை இரண்டு முறை காட்டி வேறு வேறு பரிமாணத்தில் கொடுக்கிறார் இயக்குனர் அருண்குமார்.


குழந்தையை படிக்க வைக்க குழந்தை தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், குழந்தை முதலாளிகளை எப்படி படிக்க வைப்பது ? என்பதை இயக்குனர் புரிய வைக்க முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் கூடுதல் செலுத்தி சொல்லி இருக்கலாம்.


(நன்றி : பொதிகை மின்னல், ஜூன்,2012)
.

Wednesday, May 30, 2012

நண்பா - குறும்படம்



வாழ்க்கையில் வளர்ந்து பல வெற்றிகள், சாதனைகள் குவித்தாலும், நாம் திரும்பி சென்று வாழ நினைக்கும் பருவம் குழந்தை பருவம். பள்ளி வாழ்க்கையில் நண்பர்களுடன் விளையாட்டுக்காக சண்டைப்போட்டு , உருண்டு பிரண்டு மகிழ்ந்த பருவம்.... பல முறை நினைத்தாலும் பசுமையான மின்னும். இரண்டு சிறுவர்களுக்குள் நடக்கும் போட்டி தான் கதை களன்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (ராஜ் மோகன்), சந்தீப் (கௌரவ்) தேர்வில் இருவரும் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள். அதற்கு பரிசாக ஆசிரியர் சாக்லெட் ஒன்றை சந்தோஷிடம் கொடுத்து இருவரையும் பங்கு போட்டுக் கொள்ள சொல்கிறார். ஆசிரியர் சந்தோஷிடம் சாக்லெட் கொடுத்தது சந்தீப்புக்கு பிடிக்கவில்லை. சந்தோஷ் சந்தீப்பை அழைத்து மீதி சாக்லெட் கொடுக்க வர, அவன் மறுக்கிறான். அடுத்த தேர்வில் அவனை விட அதிக மதிப்பெண் எடுத்து முழு சாக்லெட் தான் சாப்பிடுவேன் என்கிறான் சந்தீப். சந்தோஷ்  சந்தீப்பின் சவாலை ஏற்றுக் கொள்கிறான். இருவரில் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பது தான் கதை.


சிறுவர்களின் பள்ளி உலகத்தை காட்டியிருக்கும் இந்த குறும்படம் பல விருதுகளை குவித்துள்ளது. பல வெளிநாட்டு குறும்பட போட்டிகளிலும் இந்தியா சார்பாக இக்குறும்படம் தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள்.




Thursday, February 17, 2011

நகைச்சுவை குறும்படங்கள்

Youtubeயை துழாவிய போது கிடைத்த சில நகைச்சுவை காலேஜ் குறும்படங்கள்.logic, Camera angle என்று எதுவும் பார்க்காதீர்கள். ஜாலியாக ரசியுங்கள்.

உங்கள் கல்லூரியில் படித்த நண்பர்கள், நினைவுகள் கண்டிப்பாக ஞாபகத்தில் வருவார்கள்.

சின்னக்களவாணி



2 இட்லி 2 வடை



முத்தம்

Monday, October 4, 2010

வெற்றிப் பயணம்

'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் ஜாலியான குறும்படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் படம் எடுக்க முயற்சிப்பது போல் சில இடங்களில் நாமும் சிரிக்க முயற்சிக்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டு முயற்சியில் நண்பர்களில் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை ஒரளவு ரசிக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Wednesday, August 18, 2010

மொக்கை குறும்படங்கள் – கண்டிப்பா பார்க்காதீங்க...!!

திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் பார்க்கலாம், பார்க்க வேண்டாம் என்று கருத்து சொல்லுபவர்கள், குறும்படத்தை பற்றி சொல்லுவதில்லை. இது நல்ல படம் பாருங்கள் என்கிறார்களே தவிர, மொக்கை படங்களை பற்றி பேசுவதில்லை.

ஒரு குறும்படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லுவதற்கு அதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், “நான் பட்ட துன்பம் பெறுக வையகம்” என்ற நல்ல எண்ணத்தில் இந்த மொக்கை குறும்படங்களை உங்களோடு பகிந்து கொள்ளுகிறேன்.


மண்ணு குதிர



அற்புதம்



5 சகோதரர்கள்



சேம் பிலட்...

Thursday, July 29, 2010

சிரிப்புக்கு நான் Guaranty !

ஐ.டி. துறையை இந்த கலாய்பது என்றால் ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கே சந்தோஷம் தான். அதுவும் PM,TL வைத்து காமெடி பண்ணினால், அவர்கள் ஜூனியர்ஸ் விழு விழுந்து சிரிப்பார்கள்.

'Jagguboys' குறும்படம் ஐ.டி துறையில் இல்லாதவர்களுக்கு கூட புரியும் படி நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.சமிபத்தில் வரும் சினிமா படங்களில் நகைச்சுவை காட்சிகளை விட நன்றாகவுள்ளது.குறிப்பாக, ஆணி புடுங்கும் இடம் Ultimate நகைச்சுவை.

22 நிமிட முழு நீள நகைச்சுவை குறும்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன்.

ஒவ்வொரு Successful Employee பின்னாடி ஒரு Satisfied Manager இருக்கான் என்ற தத்துவத்தை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

Part -1



Part -2




Part -3

Friday, May 28, 2010

குறும்படம் : ஊன்றுகோல், தடுமாறும் நூலகம்

குறும்படம் என்றால் வலியை உணர்த்தும் சோகம் இருக்க வேண்டும் இல்லை என்றால் கருத்து சொல்ல வேண்டும் என்ற விதியை யார் நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த இரண்டு விதி பின்பற்றி வந்திருக்கும் குறும்படங்கள் தான் - ஊன்றுகோல் மற்றும் தடுமாறும் நூலகம்.

ஊன்றுகோல்

தெருவில் குப்பை பொறுக்கும் சிறுவர்களுக்கு உடைந்த செல்போனும், கடிகாரமும் குப்பை தொட்டியில் கிடைக்கிறது. யாருக்கும் உதவாத பொருளாக இருந்ததை இரண்டு சிறுவர்கள் பயனுள்ளதாக மாற்றுகிறார்கள். இருந்தாலும், அவர்கள் திறமை மதிக்கப்பட்டாமல் மிதிக்கப்படுகிறது. அவர்கள் திறமையை யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது வயதான ஒருவர் அவர்களை ஊக்கப்படுத்தி தன் நண்பர் மூலம் நாளிதழில் இரண்டு சிறுவர் புகைப்படத்தை பிரசுரம் செய்கிறார்.

திறமை இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் புகழ் உச்சத்தை தொடலாம் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கும் குறும்படம். வழக்கமான கருத்து சொல்லும் குறும்படம் என்றாலும் இரண்டு சிறுவர்களில் திறமையை காட்டியதில் செய்கை தனம் தெரிகிறது.

சிறுவர், இளைஞர்களின் திறமை மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நம் கல்வி முறைகள் மாற வேண்டும். தொழிற்கல்வி, பயிற்சி முறை கல்வி போன்ற முயற்சிகள் வந்தால் தான் திறமையானவர்களை மதிக்கும் குணம் வரும். அதுவரை, யார் என்ன கண்டுபித்தாலும், சாதித்தாலும் கல்வி பின்னனி பார்த்து பாராட்டும், வாழ்த்தும் கிடைக்கும்.

இந்த குறும்படத்தை இயக்கியவர் தனுஷ்ராஜா.

தடுமாறும் நூலகம்

இன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ விஷயங்களை தொலைந்தை தெரியாமல் வாழ்கிறோம். அப்படி தொலைந்த ஒரு தொழிலை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

ஒரு காலத்தில், ஒருவர் வீடு தேடி வந்து வார இதழ்கள், நாவல்கள் கொடுப்பார். இரண்டு, மூன்று நாட்கள் கலித்து படித்ததற்கு பணத்தையும், இதழையும் வாங்கி செல்வார். வீட்டில் இருக்கும் பல பெண்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் எல்லா வார இதழ்களையும் குறைந்த விலையில் படித்தனர். இன்று படிக்கும் பழக்கமே அறிதாக போய்விட்ட காலத்தில் வீடு தேடி புத்தகம் கொடுத்து, வாங்கி செல்பவர்கள் தொலைந்துவிட்டார்கள்.

இப்படி காலத்தால் மறக்கடிக்கப்பட்ட நடமாடும் நூலகமாக இருந்தவரின் மன வேதனையை சொல்லும் குறும்படம். ஒரு நிமிடத்தில் காட்ட வேண்டிய நடமாடும் நூலகத்தின் வாழ்க்கையை ஐந்து நிமிடங்களாக காட்டியிருப்பது கொஞ்சம் இழுவையாக தான் இருக்கிறது. இறுதியில், தன் மகன் வாங்க வேண்டிய பாட புத்தகத்தின் பட்டியலையும், தொழிலுக்காக வாங்க வேண்டிய புத்தகத்தின் பட்டியலும் வைத்து எது வாங்க வேண்டும் தெரியாமல் தவிக்கிறார். நடமாடும் நூலகமாக இருந்தவர் தடுமாறும் நூலகமாகிறார்.

காலத்தால் மறந்த தொழிலை நினைவு படுத்தியதற்காக இந்த குறும்படத்தை பாராட்டலாம். இந்த குறும்படத்தை இயக்கியவர் நாஞ்சில் தமிழ்வாணன்.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படங்களை கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

கலைமலர் கலைக்கூடம்
50/1ஏ, ராஜசுபம் காம்ளேக்ஸ்,
இந்து கல்லூரி தெற்கு,
நாகர்கோவில் – 629002

Wednesday, April 14, 2010

குறும்படம் : இப்படிக்கு பேராண்டி, பூங்கா

இப்படிக்கு பேராண்டி

அடுத்த தலைமுறைக்கு அம்மா, அப்பா தவிர மற்ற உறவு முறைகளின் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு கூட்டு குடும்பம் மறைந்து தனி குடித்தனம் வளர்ந்து விட்டது. அப்படி, தனி குடித்தனம் நடத்து தம்பதியர்களின் பிள்ளைகள் தாத்தா, பாட்டி பாசத்திற்காக ஏங்கும் கதை தான் 'இப்படிக்கு பேராண்டி'.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக, குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அதனாலே, குழந்தைகளின் உலகிற்கு சென்று வாழ்ந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். வகுப்பில் மற்ற பிள்ளைகள் தாத்தா பாட்டி சொன்னதை கேட்பதாகட்டும், தாத்தா பாட்டி வேண்டும் என்று போராட்டம் நடத்துவது போல் கற்பனை செய்வதாகட்டும், பெற்றோர்களுக்கு தெரியாமல் அறையில் செய்யும் குறும்பு வேலையாகட்டும். எல்லாம் குழந்தைகளின் மனம்.

குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தினிக்கும் கனவுகளுக்கும் நல்ல அறிவுரை கூறியுள்ளார். குழந்தைகளுக்கான குறும்படம் என்பதால் கதையில் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்க வேண்டும். இதில் நகைச்சுவைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

'இப்படிக்கு பேராண்டி' - பெற்றோர்கள் படிக்க வேண்டிய கடிதம்.

***

பூங்கா

'இப்படிக்கு பேராண்டி' நடித்த அதே சிறுவன், சிறுமி. பூங்காவில் விளையாட வேண்டும் என்ற கனவில் வாழும் சிறுவனுக்கு, பக்கத்து வீட்டில் வரும் அக்கா மூலம் அவன் வீட்டு அருகில் ‘பூங்கா’ வருகிறது. ஆனால், அதுவே அவன் தங்கி இருக்கும் வீட்டுக்கு ஏமனாகவும் மாறுகிறது.

குழந்தைகளுக்கான குறும்படம் என்று சொல்லி பெரியவர்களில் ஆதிக்கம் தான் தெரிகிறது. தனக்கு மனது கவலைப்படும் போது கோயிலுக்கு வந்து, கடவுள் முன் வேண்டி தரையில் எழுதுவதாகவும் கூறி அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சியை காட்டுகிறார். அதே சமயம் மனலில் பூங்கா வைத்து விளையாடும் போது மனதையும் காட்டியிருக்கிறார். இரண்டும் முரன்பாடாக உள்ளது.

ஏழை சிறுவன் 'பூங்கா' என்று சொல்லுவதில் பெரிதாக தெரியவில்லை. ஆனால், பணக்கார சிறுமி அதுவும் கான்வேன்ட்டில் படிப்பவள், 'பார்க்' என்று சொல்லாமல் 'பூங்கா' என்று சொல்லுவது செயற்கை தனம்.

தினமும் சிறுவனுக்கு படமும், சாக்லேட்டும் கொடுக்கும் அக்காவுக்கு, தான் ஆசையாக வளர்த்த நாய் கொடுத்து விட்டு செல்லும் காட்சி மனதை உறுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், பெரிதாக அப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. சில வசனங்களுக்கு வேலை வைக்காமல் காட்சிகளிலே புரிய வைத்திருக்கிறார். குறிப்பாக, சிறுவன் வீட்டு விலை பேசும் போது சிறுவர்களின் சேஸ் விளையாட்டை காட்டி புரிய வைத்திருப்பதை சொல்லலாம்.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படத்தை இயக்கியவர் தாண்டவக்கோன்.

குறும்படத்தை வாங்க விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

தாண்டவக்கோன்
பூங்கா திரை தடம்,
6, திருவள்ளுவர் நகர்,
திருப்பூர் - 641 603
பேசி : 9360254206

Wednesday, January 27, 2010

திருநங்கையை பற்றிய 'கோத்தி' குறும்படம்

கோத்தி

உள்ளத்தால் பெண்ணாக, உருவத்தால் ஆண்ணாக வாழும் திருநங்கையை பற்றிய குறும்படம்.

அன்பு ஆண்ணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன் மகனை பற்றி தெரிந்த தந்தை மகள் வாழ்க்கையை நினைத்து அவனை வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார். இரு பாலிலும் தன்னை காட்டிக் கொள்ள முடியாத அன்பு வளர்மதியாக மாறி இந்த சமூதாயத்தில் எப்படி வாழ்கிறான் என்பது தான் மீதி கதை.

பெண்ணாக மாற துடிக்கும் போதும், தெருவில் பிச்சை எடுத்து அடிவாங்கும் போதும் வெண்ணிலாவின் நடிப்பு பிரமாதம்.கதைக்கு பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம்.பல திருநங்கயர்களில் கேள்விகளை வளர்மதி அவர்களின் பிரதிநிதியாக கேட்கும் காட்சி அருமை.

இந்த குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சி.ஜே.முத்துகுமார். ஒரு திரைப்படத்தில் சொல்ல வேண்டிய கதை குறும்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் எடுத்திருப்பதால், பார்வையாளருக்கு உண்டாக்க வேண்டிய பாதிப்பு மனதில் உருவாக்கவில்லை.

படத்தை பார்க்க....

Part - 1


Part - 2



Part - 3



எரிபொருள்

சொல்ல வந்த தகவலுக்கும், கதை களத்திற்கும் சம்மந்தமில்லையோ என்று தோன்றுகிறது.

எரிபொருள் விலை உயர்வால் சாதான நடுத்தர குடும்பத்தினர் எவ்வளவு அவதை படுகிறார்கள் என்பதை தான் சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், இதில் வெளிநாட்டில் இருக்கும் மகன் வெள்ளைக்காரியுடன் நீச்சல் அடிக்கும் காட்சி, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் நகர வாழ்க்கை, மனைவியின் மரணத்திற்கு அழக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதி போன்ற காட்சிகள் தேவை தானா என்று தோன்றுகிறது.

காய்கறி வாங்கும் காட்சியும், மருந்து வாங்கும் காடியும் தவிர மற்ற காட்சிகள் 'எரிபொருள்' தலைப்புக்கு பொருத்தமாக இருக்கிறது. 'எரிபொருள்' தலைப்பு வைக்காவிட்டால் பார்வையாளருக்கு சொல்ல வந்ததை புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

வசனங்களால் புரிய வைக்க வேண்டிய விஷயத்தை காட்சிகளால் புரிய வைத்தால் இயக்குநர் சி.ஜே.முத்துகுமாருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

படம் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

Sunday, January 17, 2010

'....த்தூ' என்ற குறும்படம்

பிச்சை எடுப்பதை விட '...த்தூ' என்று காரி உமிழும் அளவிற்கு சில மனிதர்களின் ஒழுக்கத்தை காட்டியுள்ளது இந்த குறும்படம்.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒருவன் மட்டும் ஒரு பெண்ணின் வரவை எதிர்ப்பார்த்து கொண்டுயிருக்கிறான். காதலிக்கும் பெண்ணாக இருக்குமோ என்று எதிர்ப்பார்க்கும் போது... ஒரு பெண் கை குழந்தையுடன் பிச்சை கேட்கிறாள். அவளுக்காகவே தன் பர்ஸ்யில் இருக்கும் பத்து ரூபாயை முன் பாக்கெட்டில் வைக்கிறான். ஆனால், அவள் தன் நண்பனிடம் மட்டும் பிச்சை கேட்டு விட்டு அவனிடம் கேட்காமல் செல்கிறாள்.

அதே போல், அவன் அண்ணனுடன் பேசும் போதும் அவனிடம் கேட்காமல் அண்ணனிடம் மட்டும் பிச்சை கேட்கிறாள். தன்னிடம் ஏன் பிச்சை வாங்கவில்லை என்று அவனுக்கு புரியவில்லை. தன் இரக்க பார்வையை அவள் தப்பாக புரிந்துக் கொண்டாளோ என்று அவளிடம் சென்று பணம் கொடுக்க போகிறான். அவள் வாங்க மறுத்து, இரவு 8 மணிக்கு தன் வீட்டுக்கு வர சொல்கிறாள்.

அங்கு, அவள் அவனிடம் பிச்சை வாங்காத காரணத்தை சொல்லும் போது அவளுக்கு பிச்சை கொடுத்தவர்களை மனதில் '..த்தூ!' என்று காரி உமிழ்ந்தப்படி படம் முடிகிறது.

பிச்சைக்காரியாக வரும் பெண் தவறான தேர்வு என்று நினைக்கும் போது, அவள் யார் என்று தெரிந்தவுடன் சரியான தேர்வு என்று காட்டுகிறது. அதே போல் கதாநாயகனாக வரும் இளைஞன் 'கவிஞன்' என்று காட்ட முயற்சித்திருக்கிறார். தன்னிடம் பிச்சை கேட்காமல் செல்லும் பிச்சைக்காரி பார்க்கும் போது அவள் மனதில் கேட்கும் கேள்விக்கு முகத்தில் நடிப்பை காட்டவில்லை.

தன்னை சுற்றி எங்கும் 'வேசிதனம்' என்று வரிகளில் இருக்கும் அழுத்தம் நடிப்பில் இல்லை.

குறும்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம் போன்றது.

"பக்தி என்பது தனி சொத்து
ஒழுக்கம் என்பது பொது சொத்து"

சினிமாவில் வருவது போல் டைட்டிலில் 'ஒழுக்க'த்தை பற்றி அறிவுரை கூறும் பாடலை தவிற்த்திருக்கலாம். யாரும் அறிவுரை கேட்கும் எண்ணத்தில் படம் பார்ப்பதில்லை. இருந்தாலும், பாடல் வரிகள் மிகவும் அருமை.

இந்த குறும்படத்தை இயக்கியவர் மணிமேகலை நாகலிங்கம். அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால், சில கவிஞர்களுக்குரிய பாணி தெரிகிறது.

கதாநாயகனிடம் அண்ணன் கேள்வி கேட்கும் போது, வாதம் செய்யாமல் அவன் அறையில் இருக்கும் 'பெர்ணார்ட் ஷா'வின் பொன்மொழியை காட்டி வசனத்தை குறைத்திருப்பது நல்ல முயற்சி.

குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்ல தான் என்று விதியில் இருந்த இந்த படமும் தப்பிக்கவில்லை.


படம் வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்க...
மணிமேகலை நாகலிங்கம் - 94444 86055
விலை. ரூ. 60/-

Thursday, December 3, 2009

குறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி

பதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.

கதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்திருக்கிறார்.

'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

பாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.

தன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே ! )

குறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.

Part - 1



Part - 2



இவர்கள் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Monday, November 23, 2009

எப்படி தான் இப்படி படம் எடுக்குறாங்களோ ??

22.11.09 அன்று, நம் உரத்தசிந்தனை மூன்று குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடந்தது. அந்த குறும்படங்கள் பற்றி என் பார்வையில்...

நண்பர்கள் கலைக்கூடம் வழங்கிய 'என்று முடியும் ?'

இழந்த விவசாய நிலத்தை பார்த்து எங்கும் ஊனமுற்ற விவசாயின் கண்ணீர் காட்சியில் படம் தொடங்குகிறது. தன் நிலத்தை இழந்த சோகத்தை சென்னை 'BPO'வில் வேலை செய்யும் தன் மகனிடம் சொல்ல வருகிறார். 'செல்லக்கண்ணு' என்று பெயர் வைத்த மகன்,'George Bush' என்ற பெயரில் வாழ்கிறான். அவனிடம் பேச கூட அந்த ஏழை விவசாயால் முடியவில்லை.

'அப்பா எப்படி இருக்க ?' என்று கேட்க முடியாத அளவுக்கு அந்த இளைஞன் வேலை பலுவில் இருக்கிறான். மகனிடம் எதையும் சொல்ல முடியாமல் திரும்பி ஊருக்கு செல்கிறார். அப்போது, அவன் மகனின் நண்பனிடம் விஷயத்தை சொல்கிறார். இறுதியாக, அந்த விவசாயி 'எப்ப தான் வாழ போறீங்க..?' என்று கேட்கும் கேள்வி 'சுருக்' என்று இருக்கிறது.

தந்தையிடம் பேச கூட நேரமில்லாத அவசர யுகத்தில் வாழும் இளைஞர்களை இந்த படம் உருக்கமாக காட்டியுள்ளது.

விவசாய நிலத்தை இழந்த சோகத்தை வார்த்தைகளில் சொல்லாமல் பின்னனி வயலின் இசையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.


கதை , இயக்கம் - சி.ஜே.முத்துகுமார்


கல்வெட்டு திரைக்குடில் வழங்கும் 'கொஞ்சம் கொஞ்சமாய்'

Saxophone, Drum, Piano பின்னனி இசையில் மணலி நகராட்சி காட்டுகிறார். படம் தொடங்கி மூன்று, நான்கு நிமிடங்கள் குளம், செடி, கொடியை காட்டி சலிப்பை ஏற்ப்படுத்துகிறார். ஆனால் இறுதியில், குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குடன் சமாதியை காட்டி, சாவு மேளத்தை பின்னை இசையில் முடித்திருக்கிறார்.

பெரிய தொழில்நுட்பம், வசனம், கதாபாத்திரம் என்று எதுவுமில்லை.

'இயக்கைக்கு நாம் கொடுத்த பிளாஸ்டிக் சமாதி' என்ற கவிதை படமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சொர்ணபாரதி.

ஒளிப்பதிவு, கதை, இயக்கம் - சொர்ணபாரதி


நண்பர்கள் திரைகுழுமம் வழங்கிய 'நடந்த கதை'

சமிபத்தில் சன் டி.வி யில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வந்து ஒரு மாதத்தில் பத்து இடங்களில் திரையிடப்பட்டதாக இயக்குநர் பொன். சுதா அவர்கள் கூறினார். திரையிடப்பட்ட படங்களில் என்னை அதிக கவர்ந்த படமும் இது தான்.

பேரனின் சேருப்பு சத்தத்தில் தன் வாழ்க்கையை புரட்டி பார்க்கிறார் ஒரு முதியவர்.

கதை பின்னோக்கி செல்கிறது. செருப்பு அணிவது அதிகாரத்தின் சின்னமாக வாழ்ந்த காலம்.

ஒரு குழந்தையின் பார்வையில் தன் இனம் கீழ் தெருவில் வெறுமையாக காலில் நடக்க, மேல் தெருவில் செருப்புடன் நடப்பதை பார்த்து ஏங்குகிறது. நாம் ஏன் செருப்பு போட கூடாது ?" என்ற கேள்வி தொடங்கி ஏக்கம் , ஆசை, கனவாக 'செருப்பு' அவன் மனதில் அழமாய் பதிகிறது.

அந்த குழந்தை வளர்ந்து, 'வீரபத்திரன்' என்னும் இளைஞனாக இராணுவத்தில் சேர்கிறான். அவன் முதன் முதலில் ஷூவை தன் காலில் அணியும் போது கண்ணீர் பல தலைமுறைகளின் ஏக்கத்தை காட்டுகிறது.

ஷூ அணிந்து மேல் தெருவில் ஓடும் போது, மேல் குடி மக்கள் அவனை தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மீண்டும் அந்த தெருவில் ஓடிக் காட்டுகிறான். அவன் ஓட ஓட கீழ் தெரு ஒவ்வொரு வீட்டில் வெளியே செருப்பு இருப்பது போல் படம் முடிகிறது.

முதியவர் உணர்வுகளுக்கு உருக்கமான குரல் கொடுத்தவர் 'கவிஞர்' அறிவுமதி அவர்கள்.

'எல்லா இடங்களிலும் வறுமைதான் சேர்ந்து வாழுது'

எங்கள் வலைந்த முதுகில் ஜாதி என்னும் அடிக்கல் இருக்குது'

இறுதியில்,

என் கால்ல தச்ச வலிய என் பேரன் மனசுக்கு உணர்த்தனும்
' என்று சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் எடுக்கும் தகுதி பொன். சுதா அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது.

மூன்று படங்களை விமர்சித்த அழகப்பன் அவர்கள்,

" குறும்படம்
படுக்கை அறையல்ல..
தாயின் கருவறை"

என்று சொன்ன கவிதை பிரமாதம்.

மூன்று படம் இணையத்தில் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதன் சுட்டியை குறிப்பிடுகிறேன்.

Wednesday, November 18, 2009

நான் ரசித்த தமிழ் குறும்படங்கள்

குப்பை

இனிமையான பெண்ணில் குரலில் தொடங்கிறது. எதை பற்றி இந்த குறும்படம் என்று குறும்படம் முடியும் வரை யுகிக்க முடியாது. இறுதியாக காட்டப்படும் செய்திதாள் தான் உணர்த்துகிறது. கண்டிப்பாக இதை இரண்டாவது முறை பார்க்காமல் இருக்க முடியாது.

பின்னனியில் வரும் அந்த பெண்ணின் குரலும், இசையும் இந்த குறுப்படத்தின் மிக பெரிய பலமே ! 'குப்பை' என்று தொடங்கப்பட்ட குறும்ப்படம் 'குப்பை ?' என்று முடித்திருப்பது கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.

மேலும் இங்கே பார்க்கவும்.

Voice : Rajeshwari Veeran
Art Direction : Ilayaraja
Editing : Saleem HAdi
Music : Saleem HAdi, Vikeshwaran veeran
Story : GAnesh Kasi, Saleem HAdi

**

நிஜங்கள் - ஒரு இளைஞனின் கனவு

நல்ல நகைச்சுவையான குறுப்படம். ஒப்பனிங்கே பெரிய ஹீரோக்கான பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த ஜே.கே.ரித்தீஷ் என்று பயப்படும் சமயத்தில் குறுப்படத்திற்கான உண்மையான நோக்கத்தை காட்டியுள்ளனர்.

இந்த படம் மட்டும் அப்துல் காலம் பார்த்தால், தன் கருத்தை மாற்றிக் கொள்வது உறுதி.

மேலும் இங்கே பார்க்கவும்.

படம் பார்த்து முடித்த பிறகு, விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தால் நான் நிர்வாகம் பொறுப்பல்ல....

Story & direction - A.Kumaran
Camera, Screenplay & Editing - R.Vasantharajan

**
சிகப்பு - விபச்சாரியுடன் ஒரு நாள்

டி.வி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அப்பா, அம்மா வீட்டில் இல்லாத சமயம் மனதில் தட்டும் சபல புத்தி கொண்ட இளைஞன் தன் நண்பன் மூலம் ஒரு விபச்சாரியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அவளிடம் முதலில் தயங்கியப்படி பேச்ச தொடங்குகிறான். தன் அறையை தயார் செய்து விட்டு, வெளியே வர அந்த பெண் அங்கு இல்லை. புட்டிய கதவு புட்டியப்படி தான் இருக்கிறது. தன் வீட்டுக்குள் எங்கோ தான் இருக்கிறாள். திடீர் என்று அந்த பெண்ணின் சத்தம் கேட்கிறது.அடுத்து...

மேலும் இங்கே பார்க்கவும்.

**

எதோ பொழுது போகவில்லை என்று இணையதளத்தை மெய்ந்த போது பார்த்த படம். இனி வாரம் ஒரு முறை இப்படி ஒரு குறுப்படத்தை பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல குறும்படத்தை வாசகர்கள் பரிந்துரை செய்யுங்கள்.

***

வரும் ஞாயிறு ( 22.11.2009) காலை 10.30, மூன்று குறும்படம் திரையீட இருக்கிறார்கள்.

இடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம்,
( லஸ் கார்னர், அமிர்தாஞ்சன் அருகில்)
மயிலாப்பூர், சென்னை - 4

குறும்படத்தை மதிப்பீடு செய்பவர் : "வண்ணத்துபூச்சி" புகழ் அழகப்பன் சி.

பார்க்க விரும்பும் நண்பர்கள் வரலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails