22.11.09 அன்று, நம் உரத்தசிந்தனை மூன்று குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடந்தது. அந்த குறும்படங்கள் பற்றி என் பார்வையில்...
நண்பர்கள் கலைக்கூடம் வழங்கிய 'என்று முடியும் ?'
இழந்த விவசாய நிலத்தை பார்த்து எங்கும் ஊனமுற்ற விவசாயின் கண்ணீர் காட்சியில் படம் தொடங்குகிறது. தன் நிலத்தை இழந்த சோகத்தை சென்னை 'BPO'வில் வேலை செய்யும் தன் மகனிடம் சொல்ல வருகிறார். 'செல்லக்கண்ணு' என்று பெயர் வைத்த மகன்,'George Bush' என்ற பெயரில் வாழ்கிறான். அவனிடம் பேச கூட அந்த ஏழை விவசாயால் முடியவில்லை.
'அப்பா எப்படி இருக்க ?' என்று கேட்க முடியாத அளவுக்கு அந்த இளைஞன் வேலை பலுவில் இருக்கிறான். மகனிடம் எதையும் சொல்ல முடியாமல் திரும்பி ஊருக்கு செல்கிறார். அப்போது, அவன் மகனின் நண்பனிடம் விஷயத்தை சொல்கிறார். இறுதியாக, அந்த விவசாயி 'எப்ப தான் வாழ போறீங்க..?' என்று கேட்கும் கேள்வி 'சுருக்' என்று இருக்கிறது.
தந்தையிடம் பேச கூட நேரமில்லாத அவசர யுகத்தில் வாழும் இளைஞர்களை இந்த படம் உருக்கமாக காட்டியுள்ளது.
விவசாய நிலத்தை இழந்த சோகத்தை வார்த்தைகளில் சொல்லாமல் பின்னனி வயலின் இசையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கதை , இயக்கம் - சி.ஜே.முத்துகுமார்
கல்வெட்டு திரைக்குடில் வழங்கும் 'கொஞ்சம் கொஞ்சமாய்'
Saxophone, Drum, Piano பின்னனி இசையில் மணலி நகராட்சி காட்டுகிறார். படம் தொடங்கி மூன்று, நான்கு நிமிடங்கள் குளம், செடி, கொடியை காட்டி சலிப்பை ஏற்ப்படுத்துகிறார். ஆனால் இறுதியில், குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குடன் சமாதியை காட்டி, சாவு மேளத்தை பின்னை இசையில் முடித்திருக்கிறார்.
பெரிய தொழில்நுட்பம், வசனம், கதாபாத்திரம் என்று எதுவுமில்லை.
'இயக்கைக்கு நாம் கொடுத்த பிளாஸ்டிக் சமாதி' என்ற கவிதை படமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சொர்ணபாரதி.
ஒளிப்பதிவு, கதை, இயக்கம் - சொர்ணபாரதி
நண்பர்கள் திரைகுழுமம் வழங்கிய 'நடந்த கதை'
சமிபத்தில் சன் டி.வி யில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வந்து ஒரு மாதத்தில் பத்து இடங்களில் திரையிடப்பட்டதாக இயக்குநர் பொன். சுதா அவர்கள் கூறினார். திரையிடப்பட்ட படங்களில் என்னை அதிக கவர்ந்த படமும் இது தான்.
பேரனின் சேருப்பு சத்தத்தில் தன் வாழ்க்கையை புரட்டி பார்க்கிறார் ஒரு முதியவர்.
கதை பின்னோக்கி செல்கிறது. செருப்பு அணிவது அதிகாரத்தின் சின்னமாக வாழ்ந்த காலம்.
ஒரு குழந்தையின் பார்வையில் தன் இனம் கீழ் தெருவில் வெறுமையாக காலில் நடக்க, மேல் தெருவில் செருப்புடன் நடப்பதை பார்த்து ஏங்குகிறது. நாம் ஏன் செருப்பு போட கூடாது ?" என்ற கேள்வி தொடங்கி ஏக்கம் , ஆசை, கனவாக 'செருப்பு' அவன் மனதில் அழமாய் பதிகிறது.
அந்த குழந்தை வளர்ந்து, 'வீரபத்திரன்' என்னும் இளைஞனாக இராணுவத்தில் சேர்கிறான். அவன் முதன் முதலில் ஷூவை தன் காலில் அணியும் போது கண்ணீர் பல தலைமுறைகளின் ஏக்கத்தை காட்டுகிறது.
ஷூ அணிந்து மேல் தெருவில் ஓடும் போது, மேல் குடி மக்கள் அவனை தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மீண்டும் அந்த தெருவில் ஓடிக் காட்டுகிறான். அவன் ஓட ஓட கீழ் தெரு ஒவ்வொரு வீட்டில் வெளியே செருப்பு இருப்பது போல் படம் முடிகிறது.
முதியவர் உணர்வுகளுக்கு உருக்கமான குரல் கொடுத்தவர் 'கவிஞர்' அறிவுமதி அவர்கள்.
'எல்லா இடங்களிலும் வறுமைதான் சேர்ந்து வாழுது'
எங்கள் வலைந்த முதுகில் ஜாதி என்னும் அடிக்கல் இருக்குது'
இறுதியில்,
என் கால்ல தச்ச வலிய என் பேரன் மனசுக்கு உணர்த்தனும்' என்று சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது.
ஒரு நல்ல திரைப்படம் எடுக்கும் தகுதி பொன். சுதா அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது.
மூன்று படங்களை விமர்சித்த அழகப்பன் அவர்கள்,
" குறும்படம்
படுக்கை அறையல்ல..
தாயின் கருவறை"
என்று சொன்ன கவிதை பிரமாதம்.
மூன்று படம் இணையத்தில் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதன் சுட்டியை குறிப்பிடுகிறேன்.
1 comment:
அறிமுகத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி குகன்..
Post a Comment