வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, November 13, 2009

பெரம்பூர் பாலம்

இரண்டு தினம் முன்பு பெரம்பூர் பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது. வியாம்பார சங்க தலைவர் வெள்ளையனை வெட்டிவிட்டதால், பொது மக்கள் மிகவும் கவலையில் இருந்தனர். ( பின்ன எல்லா கடையும் முடிட்டாங்கனா... காய்கறி வாங்க எங்க போறது). நல்ல வேலை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட்டை மட்டும் முடி இருந்தனர். பக்கத்தில் 'ஈ' ஓட்டிய ரவி மார்க்கெட் ஜக ஜோதியாய் கூட்டம் அலை மோதியது. வாங்க வந்தவர்களுக்கு நிற்க கூட இடமில்லை. வணிகர் தினத்தில் மட்டும் பாரதி ரோடை காலியாக பார்த்திருக்கிறேன். (பாதி ரோட்டில் வெள்ளையன் மார்க்கெட் வண்டி, ஆட்டோ நிற்கும்) பக்கத்தில் மூன்று பள்ளிகூடங்கள் வேறு. அதை கடக்க முடியாமல் சுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

இப்போது எல்லாம் பெரம்பூரை தாண்டி செல்வது பாகிஸ்தான் பார்டரை தாண்டி செல்வது போல் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியில் வீட்டில் இருந்து அலுவகத்திற்கு செல்ல பிடிப்பதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வீட்டுக்கு செல்ல பிடிப்பதில்லை.எதோ பாரதி ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி கம்மியாக இருக்கிறதே சந்தோஷப்பட்ட அடுத்த நிமிடத்தில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் தாண்டும் அடுத்த கொடுமை வந்தது.

பஸ் செல்வதற்கு தனியாக வழி அமைத்திருக்கிறார்கள். மற்ற வண்டி செல்ல இருக்கும் வழி ஷேர் ஆட்டோ வழி மறித்து நின்று கொண்டு இருக்கும். எவ்வளவு தான் ஹாரன் அடித்தாலும், அவர்களுக்கு சவாரி வரும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். காலையில் இவர்களை திட்டாமல் செல்வதுதில்லை. பாதி பேர் ஷேர் ஆட்டோ ஆட்களை திட்டி விட்டு தான் பெரம்பூர் ஸ்டேஷனை கடக்கிறார்கள். இப்படியே போனால், காலையில் ஷேர் ஆட்டோக்காரர்களை திட்டி விட்டு சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்றாவது ,பெரம்பூர் பாலம். பெரம்பூரில் இருந்து தி.நகர் செல்வதற்கு நாற்பத்தியைந்து நிமிடங்கள் தான் ஆகும். பெரம்பூர் பாலம் கட்டிட வேலைக்காக பாதை சுருங்கி கொண்டே பொகிறது. இப்போது சுரங்கப்பாதையில் தான் எல்லா வண்டியும் செல்ல வேண்டிய நிலைமை. ஒருவர் அதிக நம்பிக்கையுடன் அந்த குறுகிய பாதையில் டாடா சுமோவை இறக்கி செல்ல முடியாமல், ரிவர்ஸ் எடுத்து வேறு பாதை செலும் வரை இன்னும் போக்கு வரத்து நெருக்கடி அதிகமாக தான் ஆனது.

இப்படி, பெரம்பூர் டூ தி.நகர் பயணத்தை பற்றி என் அலுவலக நண்பரிடம் சொல்லி கொண்டு இருந்த போது, "பெரம்பூர் பாலம் வந்துட்டா இந்த பிரச்சனை எல்லாம் இருக்காதுல்ல..." என்றார்.

"நாங்களும் பத்து வருஷமா இதையே தான் சொல்லி எங்க மனசுக்கு ஆறுதல் சொல்லுறோம்" என்றேன்.

ஸ்டாலின் மேயராக இருந்த போது தொடங்கிய பாலம், அவர் துணை முதல்வர் ஆன பிறகு திறக்க வேண்டும் என்று இருக்கிறது.

எதோ வந்தா சரி.

4 comments:

சங்கர் said...

//எதோ வந்தா சரி.//

வந்திருச்சா?

Cable Sankar said...

வரும்.. வரும்..வ்ரும்.. வரு..வ..ம்ம்ம்ம்ம்ம்

வால்பையன் said...

வெள்ளையனை வெட்டிட்டாங்களா? ஏன்!?

suryanila said...

சரியான தி.மு.க ஜால்ரா போலிருக்கு

LinkWithin

Related Posts with Thumbnails