ஏற்கனவே மனதை பாதித்த சம்பவங்கள்
ஏற்கனவே சிந்தித்த சிந்தனைகள்
ஏற்கனவே சொல்ல நினைத்த வார்த்தைகள்
இப்படி பல 'ஏற்கனவே' கடந்து வந்தவர்களுக்கு
மீண்டும் அதே நினைவலைகள் !!"
இந்த புத்தகத்தை படித்ததும் 'கவிதை' என்ற பெயரில் நான் கிறுக்கியது.

'கானல் நதி' நாவலுக்கு பிறகு 'யுவன் சந்திரசேகர்' அவர்கள் எழுதிய புத்தகத்தை இப்போது தான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
யுவன் சந்திரசேகர் எப்படி நகைச்சுவையாக பேசுவார் என்று சமிபத்தில் நடந்த 'சிறுகதை பட்டறையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தெரியும். அப்படி கலந்துக் கொண்ட பதிவர்கள் யுவன்சந்திரசேகர் நூல்களை வாசிக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த நூலை படியுங்கள்.
இவருடைய எழுத்து நடையை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்பதால், நான் விரும்பி வாசித்த சில வசனங்கள், இடங்கள் மட்டும் மேற்கொள் காட்டுகிறேன். இந்த சிறுகதை தொகுப்பில் வரும் சில வசனங்கள் ஏதார்த்தத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.
'மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு' கதையில்
"ச்சே...! தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனமில்லையா ??"
"வீரனாய் இருந்து பதக்கமாய் வாங்க போறோம் ?"
'புகைவழிப் பாதை'
"கதைகள்லே துக்கம் கூடக் கூட வாசிக்கிறவனுக்கு சந்தோஷம் எப்படிப் பொங்கறது !"
நூற்றிச் சொச்சம் நண்பர்கள்
சிகரெட்டை எடுக்கிறோம். பற்ற வைக்கிறோம், மிச்சத்தை தரையில் வீசி நசுக்கித் தேய்க்கிறோம் என்பது பிரக்ஜை அறியாத அனிச்சைச் செயலாக மாறிவிட்டது. நண்பர்கள் இந்த விஷயத்தில் செய்த உதவியை சிகரெட் உள்ளவரையும், உயிர் உள்ளவரையும் மறக்க முடியாது.
சோம்பேறியின் நாட்குறிப்பு
உண்மையில் வாழ்க்கை என்பதாக ஒரு பொதுத்தளம் இருப்பது வெறும் தோற்றம் மட்டுமே. அவரவர் அனுபவத்தைப் பிறருடைய அனுபவத்துடன் கோர்த்த அனுபவத் தொடரை ஒற்றை அனுபவமாக எப்படி விரிக்க ??
சில இடங்களில் எழுத்தாளான தன் சொந்த அனுபவத்தை பதிவு செய்வது போன்ற வரிகள்.
"எழுத்தாளனாகும் என் கனவுகளின் அடிப்படையில் புதிய நண்பர்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், தொடர்ந்து எழுதுவதன் காரணமாக உண்டாகும் புதுப்புது விரோதிகளின் விரோதிகள் எனக்கு நண்பர்களாய்க் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், குளப்பரப்பில் கல்விழுந்து உண்டாகும் சிற்றலைகள் போல நண்பர் வட்டம் விரிவடைந்து கொண்டே போனதும். புதிய அலைகள் வர வரப் பழைய அலைகள் கரையேறிக் காணாமல் போனதும். என் தரப்புக் காரணங்களாக இப்போது தோன்றுகிறது.
அவமானம்
ஆதாரமான தளத்தில் ஒரு பெண்ணுக்கும் மற்றோரு பெண்ணுக்கும் உடலமைப்பின் விகிதாசாரத்தில் தவிர வேறு என்ன வித்தியாசம் ?
கரு திறமை
விந்துவிட்டவன் நொந்து கெட்டான்.
எழுத்தாளனை பற்றி வரும் வரிகளை படிக்கும் போது தன் சொந்த அனுபவம், சுயசரிதை எழுதியிருக்கிறாரோ என்ற எண்ணம் நம் மனதில் வராமல் இல்லை.
சிறுகதை என்ற பெயரில் குறுநாவல் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயுள்ளது.
பக்கங்கள். 192
விலை.100
No comments:
Post a Comment