ஒரு முறை கலைஞர் அவர்களின் வழுக்கைத் தலை பற்றிய பேச்சு வந்தது. கலைஞரின் வழுக்கை முதுமையைக் காட்டுவதாகச் சொன்னார்கள்.
கலைஞர் கவலைப்படவே இல்லை. சட்டென்று பதில் சொன்னார், " வழுக்கை என்பது முதுமையின் அடையாளமல்ல. இளமையின் அடையாளம். எப்படி தெரியுமா ?"
"தேங்காய் பறிக்கும் போது, இளசா நாலுகாய் பறிச்சுப் போடுப்பா என்பார்கள். அவர் நாலு வழுக்கையைப் போடுவார்.
ஆக, வழுக்கை என்பது இளமை. ஆகவே, நான் வழுக்கையாய் இருக்கிறேன் என்றால் இளமையாய் இருக்கிறேன் என்று அர்த்தம்"
குறையை நிறையாகக் காணும் திறத்தால், முதுமையையே இளமையாக ஆக்கிவிட்டார்.
**
அமைச்சர் தான் கிழித்தார்
ஒரு முறை கலைஞர், 'ஆற்காட்டு' வீரசாமி, 'கவிப்பேரசு' வைரமுத்து, டி.ஆர் பாலு ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டு இருந்தார். கலைஞர் அவர்கள் முன்புற இறுக்கையிலும், மற்ற மூவரும் பின்புறம் அமர்ந்துக் கொண்டனர்.
வண்டி சென்றுக் கொண்டு இருக்கும் போது, கவிஞர் அவர்கள் தன்னை இருக்கையில் சரிப்படுத்த முயற்சிக்கும் போது, தனது நீண்ட சட்டையின் கீழ்ப்பகுதியில் அமைச்சர் பாலு அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் தெரிவிக்காமலே, சட்டையைச் சரிசெய்ய, சட்டையைப் பிடித்து இழுக்கும் போது சட்டை கிழிந்துவிட்டது.
கலைஞர் இல்லம் வந்தும், கவிஞரின் கிழிந்த சட்டையை கவனித்த கலைஞர் அவர்கள் " என்ன கவிஞரே ! சட்டை கிழிந்திருக்கிறதே பார்க்கவில்லையா " எனக் கேட்டார்.
கவிஞர் நடந்தை விவரித்தார். இதைக் கேட்ட கலைஞர் அவர்கள், " சட்டை கிழிந்ததற்குப் பாலு தான் காரணம் என்றால் எனக்கு சந்தோஷமே !" என்றார். ஒரு நிமிடம் எல்லோரும் திகைத்தனர்.
அப்போது கலைஞர், " பின்னே ! இனிமே எதிர்க்கட்சியினர் யாரும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்ன கிழித்து விட்டார் ? எனக் கேட்கவே முடியாதல்லவா ?" என்றார்.
**
லவ் எஸ்டர்டே
சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கம் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆண்டையும் கலைஞரே நடத்த வேண்டும் என அதன் உரிமையாளர் சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தலைவர் ஒப்புதல் தந்திருந்தார். அப்போது, அங்கே விஜய் நடித்திருந்த "லவ் டுடே' என்ற படத்தின் நூறாவது நாளும் சேர்ந்தே கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றிய கலைஞர்.
"இது 'லவ் டுடே' படத்தின் வெற்றிவிழா. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது 'லவ் டுடே' தான். எனக்கோ, 'லவ் எஸ்டர்டே'" என்றதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
3 comments:
அருமையான சம்பவங்கள்.. அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.. மிகவும் சாதுரியமாய் பேசக்கூடியவர் கலைஞர்...
ஹ்ம்ம்.. பேச்சுல அவர தோற்கடிக்க முடியாது...
பேசியே இலங்கை தமிழர்களுக்கு கொடுத்தாரே அல்வா, வேறு யாரால முடியும்
Post a Comment