வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 12, 2009

முதியோர் இல்லம்என்ன தான் சுந்திரமாக திறிந்தாலும், சிவகாமிக்கு இந்த இடம் திறந்த சிறைவாசமாக தான் இருந்தது. உறவுகள் இருந்தும் ஆனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாழ்வும் வயதில் கணவனை இழந்து, இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து கரை சேர்த்ததற்கு அவளுக்கு கிடைத்த பரிசு 'முதியோர் இல்லம்' என்ற சிறை தான்.

"என்ன சிவகாமி அம்மா... காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கீங்க...?" என்று காமாட்சி பரிவுடன் கேட்டாள். இந்த முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்ந்தவள். மகள் திருமணத்தை முடித்து யாருக்கும் தொல்லைக் கொடுக்க கூடாது என்று அவளே இங்கு வந்து சேர்ந்து விட்டாள். இந்த இல்லத்தில் வந்து சேர்ந்ததில் கவலைப்படாத ஒரே ஜீவன் இவளாக தான் இருக்க முடியும்.

காமாட்சி வந்து சேர்ந்த பிறகு தான், அங்கு தங்கி இருந்த மற்றவர்கள் மனதில் புது நம்பிக்கை பிறந்து. குறிப்பாக சிவகாமிக்கு. தன் பிள்ளைகள் தொல் கொடுக்க வேண்டிய வயதில் சிவகாமிக்கு கிடைத்த சக வயது தொழி தான் காமாட்சி.

" என்ன சிவகாமி அம்மா... எதுவுமே பேசமாட்டீங்றீங்க.." என்றாள்.

"இன்னையோட நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.." என்று கண்களில் நீர் தழும்ப சிவகாமி கூறினாள்.

" நாள் போற வேகத்துல இன்னுமா இந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கு.." என்றாள் காமாட்சி.

சிவகாமி எதுவும் பேசவில்லை. தன் வலி பற்றி அவளுக்கு தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக பாதிப்பு ஒன்று அவளுக்கு இருக்க போவதில்லை. சிவகாமியை போல பல கதைகள் காமாட்சிக்கு கேட்டு பழகிவிட்டது. ஆனால், சிவகாமி அப்படியில்லை. தன் கதையே பெரிய கதை என்று நினைத்து வருந்துக் கொண்டு இருந்தாள்.

சிவகாமி நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

தன் கணவன் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால், அவர் இறந்ததும் அந்த வேலை சிவகாமிக்கு கிடைத்தது. அந்த வேலை கிடைத்ததால் தன் இரண்டு மகன்களை நன்றாக வளர்த்தாள். முத்த மகன் பெயர் 'ராஜசேக'ர். இரண்டாவது மகனின் பெயர் 'ராஜமோகன்'. 'ராஜா' மாதிரி வளர்க்க வில்லை என்றாலும் பெயரிலாவது 'ராஜா' இருக்கட்டும் என்று வைத்துவிட்டாள்.

தன் முத்த மகன் ராஜசேகர், தன் மகன் சத்யா வெளிநாட்டு படிக்க கூட்டு குடும்பம் நடத்தும் வீட்டை விற்று பணம் தர சொன்னான். ஆனால், இளைய மகன் ராஜமோகன் முதலில் விற்க மறுத்தான். ஆனால், அவன் மனைவி தனி குடிதனம் போகுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்று அவனை சம்மதிக்க வைத்துவிட்டாள். தன் காலம் முடியும் வரை வீடு விற்க கூடாது என்று பிடிவாதமாக இருந்தவள் தன் பேரன் படிப்பு உதவியாக இருக்கும் என்று வீடு விற்க சம்மதித்தாள்.

வீடு விற்ற பிறகு பணத்தை பிரித்துக் கொண்டார்கள். ஆனால், சிவகாமியை.... ??

"அண்ண வீட்டில் இரும்மா" என்று தம்பியும், "தம்பி வீட்டில் இரும்மா" என்று அண்ணனும் கூறி, கடைசியில் அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

"சிவகாமி அம்மா... இந்த உலகத்துல தான் இருக்கீங்களா...." என்று காமாட்சி கூறியதும், தன் நினைவலைகளில் இருந்து விடுப்பட்டாள்.

"சின்ன வயசுல என் இரண்டு பசங்க பொம்மைக்காக சண்ட போடுவாங்க. நான் போய் சமாதானம் பண்ணுவேன். பேர பேத்தி கல்யாணத்த பார்க்கலாம்னு இருக்குறப்போ... சொத்துக்காக அடிச்சிக்கிட்டவங்க. அம்மாவ பத்தி யோசிக்கவே இல்ல..." என்று சொல்லும் போது சிவகாமி கண்கள் கழங்கியது.

" விடுங்க சிவகாமி அம்மா... பந்தயத்துல ஓட முடியாத குதிரைய சுட்டு கொல்லுற உலகம். வயசான மனுஷங்களுக்கு வாழ இந்த மாதிரி இடமாவது இருக்கே ! சந்தோஷப்படுங்க..." என்று ஆறுதலாக காமாட்சி கூறி சிவகாமியை தேற்றினாள்.

இவ்வளவு பெரிய வார்த்தை. பந்தயத்தில் ஓடும் வரைக்கு தான் குதிரைக்கு பெருமை. மனிதனுக்கு அப்படி தான். ஓட்டம் அடங்கி விட்டால், இறந்து விடுவது நல்லது. இல்லை என்றால் இது போன்ற இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சிவகாமி மனதில் நினைத்துக் கொண்டாள்.

"சிவகாமி மேடம்... உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க..." என்றாள் காப்பாளர் சுதா.

இந்த நான்கு வருடங்களில் தன்னை யாரும் பார்க்க வராத போது இப்போது யார் வந்தது என்று சிவகாமி குழப்பமாக இருந்தது. சிவகாமி வெளியே வந்த பார்த்தும் தன்னை அறியாமல் வந்தவனை கட்டிபிடித்து முத்தமிட்டாள். வந்தன் அவள் பேரன் சத்யா.

சந்தோஷத்தில் சிவகாமியால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் பேரன் சத்யா நலம் விசாரித்தும் பதில் அளிக்காமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் காப்பாளர் சுதா அங்கு வந்தாள். "சிவகாமி மேடம். உங்க பேரன் உங்கள அழைச்சிட்டு போக தான் வந்திருக்காரு..." என்றாள்.

சிவகாமிக்கு என்ற சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆனால், சிவகாமி அந்த இடத்தை விட்டு வர அவளுக்கு மனமில்லை.

"பாட்டி..! எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு நான் பிராசித்தம் பண்ணுறேன். என் கூட வாங்க..." என்றான்.

"நான் வரல. இங்கையே என் கடைசி காலத்துல இருந்துடுறேன் " என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் கூறினாள். பல ஆறுதலான வார்த்தைகள் சத்யா கூறியும் சிவகாமி கேட்கவில்லை.

கடைசியில், " நீங்க இப்ப வரல... உங்களுக்கு கம்பேனியா எங்க அப்பா, அம்மாவையும் இங்க வந்து விட்டுவேன் " என்றான்.

" டேய் அப்படியெல்லாம் சொல்லாத. என் மகன் கேட்டா தாங்கமாட்டான் ! " என்று சிவகாமி கூறி, தன் மகனுக்கு இல்லாத அன்பும், பாசமும் தன் பேரனுக்கு இருப்பதை சந்தோஷப்பட்டாள்.

பிறகு, காப்பாளர் சுதா, காமாட்சி என்று பலர் சிவகாமியிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். சத்யா தன் பாட்டியை காரில் முன் பக்கம் அமர வைத்து ஓட்டி சென்றான்.

பிணங்களாக முதியோர் இல்லத்தை விட்டு செல்பவர்கள் மத்தியில், முதல் முறையாக உயிருடன் செல்லும் சிவகாமியை பார்த்து காப்பாளர் சுதா சந்தோஷப்பட்டாள்.

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails