பிச்சை எடுப்பதை விட '...த்தூ' என்று காரி உமிழும் அளவிற்கு சில மனிதர்களின் ஒழுக்கத்தை காட்டியுள்ளது இந்த குறும்படம்.
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒருவன் மட்டும் ஒரு பெண்ணின் வரவை எதிர்ப்பார்த்து கொண்டுயிருக்கிறான். காதலிக்கும் பெண்ணாக இருக்குமோ என்று எதிர்ப்பார்க்கும் போது... ஒரு பெண் கை குழந்தையுடன் பிச்சை கேட்கிறாள். அவளுக்காகவே தன் பர்ஸ்யில் இருக்கும் பத்து ரூபாயை முன் பாக்கெட்டில் வைக்கிறான். ஆனால், அவள் தன் நண்பனிடம் மட்டும் பிச்சை கேட்டு விட்டு அவனிடம் கேட்காமல் செல்கிறாள்.
அதே போல், அவன் அண்ணனுடன் பேசும் போதும் அவனிடம் கேட்காமல் அண்ணனிடம் மட்டும் பிச்சை கேட்கிறாள். தன்னிடம் ஏன் பிச்சை வாங்கவில்லை என்று அவனுக்கு புரியவில்லை. தன் இரக்க பார்வையை அவள் தப்பாக புரிந்துக் கொண்டாளோ என்று அவளிடம் சென்று பணம் கொடுக்க போகிறான். அவள் வாங்க மறுத்து, இரவு 8 மணிக்கு தன் வீட்டுக்கு வர சொல்கிறாள்.
அங்கு, அவள் அவனிடம் பிச்சை வாங்காத காரணத்தை சொல்லும் போது அவளுக்கு பிச்சை கொடுத்தவர்களை மனதில் '..த்தூ!' என்று காரி உமிழ்ந்தப்படி படம் முடிகிறது.
பிச்சைக்காரியாக வரும் பெண் தவறான தேர்வு என்று நினைக்கும் போது, அவள் யார் என்று தெரிந்தவுடன் சரியான தேர்வு என்று காட்டுகிறது. அதே போல் கதாநாயகனாக வரும் இளைஞன் 'கவிஞன்' என்று காட்ட முயற்சித்திருக்கிறார். தன்னிடம் பிச்சை கேட்காமல் செல்லும் பிச்சைக்காரி பார்க்கும் போது அவள் மனதில் கேட்கும் கேள்விக்கு முகத்தில் நடிப்பை காட்டவில்லை.
தன்னை சுற்றி எங்கும் 'வேசிதனம்' என்று வரிகளில் இருக்கும் அழுத்தம் நடிப்பில் இல்லை.
குறும்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம் போன்றது.
"பக்தி என்பது தனி சொத்து
ஒழுக்கம் என்பது பொது சொத்து"
சினிமாவில் வருவது போல் டைட்டிலில் 'ஒழுக்க'த்தை பற்றி அறிவுரை கூறும் பாடலை தவிற்த்திருக்கலாம். யாரும் அறிவுரை கேட்கும் எண்ணத்தில் படம் பார்ப்பதில்லை. இருந்தாலும், பாடல் வரிகள் மிகவும் அருமை.
இந்த குறும்படத்தை இயக்கியவர் மணிமேகலை நாகலிங்கம். அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால், சில கவிஞர்களுக்குரிய பாணி தெரிகிறது.
கதாநாயகனிடம் அண்ணன் கேள்வி கேட்கும் போது, வாதம் செய்யாமல் அவன் அறையில் இருக்கும் 'பெர்ணார்ட் ஷா'வின் பொன்மொழியை காட்டி வசனத்தை குறைத்திருப்பது நல்ல முயற்சி.
குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்ல தான் என்று விதியில் இருந்த இந்த படமும் தப்பிக்கவில்லை.
படம் வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்க...
மணிமேகலை நாகலிங்கம் - 94444 86055
விலை. ரூ. 60/-
No comments:
Post a Comment