
ஒரு குட்டி கதை.
எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.
“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.
நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.
நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.
நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.
நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.
நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.
நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.
(மின்னஞ்சலில் வந்த கதை)
எந்த குழந்தையும் தன்னை மேதை என்று சொல்லுவதில்லை. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதில்லை. யார் மனதையும் நோகும் படி நடந்துக் கொள்வதில்லை. யாரிடத்திலும் குறைகள் பார்ப்பதில்லை.
பெரும்பாலான பெற்றோருக்கு தான்மை (Ego) இருக்கும். தன் பினளைகள் தன் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும். தன் பொருத்தமான துணைவனோ துணைவியோ தேடிக் கொண்டால் அவர்கள் தான்மை தடிகஙகிறது. தாங்கள் பார்ககும் பெண்ணை ஆண்ணை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தன் மகன் அவன் மனைவியிடம் அதிக அன்பை காட்டினால் தாய்க்கு அந்த பெண் மீது பொறாமை வந்து விடும். இதுவே மாமியார் மருமகள் சண்டைக்கு காரணமாக அமைகிறது.
இந்த பெற்றோர்களுக்கு இருக்கும் தான்மை மகன்/மகளிடம் மறைமுகமாக திணப்படுகிறது. அவர்களுக்கே தெரியாமல் தங்களுக்கு ஈகோவை வளர்த்துவிடுகிறார்கள்.
இன்று வளர்ந்துவிட்ட நாகரிக மோகத்தை சமாளிக்க கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. தங்கள் பிள்ளைகளை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டு செல்கிறார்கள். பிறகு அதே குழந்தைகள் வளர்ந்த பிறகு மூதியோர் இல்லாத்தில் பெற்றோரை விட்டு செல்கிறார்கள். இல்லற வாழ்க்கை சுலமாக்க எத்தனையோ இல்லங்கள் வந்துக் கொண்டு இருக்கிறது. இல்லறம் சுலமாகிவட்ட பிறகு எந்த பிரச்சனைகளையும் சமாளிக்க தைரியம் இருப்பதில்லை.
தங்களை தொலைத்து தங்களை தேடிக் கொண்டு இருக்கும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஏங்குவது குழந்தை வாழ்ககைக்கு தான். குழந்தைகள் போல் வாழ நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுவதில்லை.
செடி, கொடிகளை பராமரிக்க முடியும். இப்படி வளரு, அப்படி வளரு என்று கட்டளையிட முடியாது. குழந்தைகளும் அப்படி தான். பெற்றோர்கள் அவர்களை பராமரிக்க தான் வேண்டும். அவர்கள் கட்டளைகளை நிறை வேற்றும் பொம்மைகளாக நடத்த கூடாது.
அறிவியல் ரீதியாக குழந்தைகளுக்கு 2 வயதிலே ஈகோ வளரத் தொடங்கி விடுகிறது. எந்த விஷயத்தை தானே தெர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களாக ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் அதை மறுத்து வேறோரு பொருளை கேட்கும். தன் வேலையை தானே செய்ய விரும்பும். பெற்றோர்கள் உனக்கு தெரியாது. நான் செய்யுறேன் என்று சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு எது சரி தவறு சொன்னால் போது, மற்றதை அவர்களே தெர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
இன்னொரு குட்டி கதை
ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.
தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்
“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.
தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”
மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.
தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.
சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.
மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.
அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.
தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.
(எங்கோ படித்த கதை)
இப்படி பிள்ளை மனம் அறியாத பெற்றோர்கள் பல போர் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மனம் தடுமாறுவதற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.
இது போன்ற கதை நாளைய குழந்தையின் டைரி குறிப்பில் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.
இந்த கட்டுரையில் வாழ்ந்த பெற்றோர்களுக்கு எழுதவில்லை. நாளை பெற்றோர்களாக போகும் இன்றைய இளைய பெற்றோர்களுக்காக எழுதினேன்.
( பல வருடங்கள் முன்பு எழுதிய கட்டுரை. இப்போது தான் பதிவு ஏற்ற முடிந்தது.)
2 comments:
very nice
A good view
Post a Comment