
பொங்கலுக்கு என் அறையை சுத்தம் செய்யும் போது கிடைத்த என் பழைய கவிதை. கல்லூரி நாட்களில் எழுதியது என்று நினைக்கிறேன். 'அம்பேத்கர்' பிறந்த நாளுக்காக எழுதியிருக்கிறேன். அது மட்டும் தலைப்பை பார்த்ததும் நினைவுக்கு வந்தது. இதை படிக்கும் போது கல்லூரி நாட்களில் கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில் எவ்வளவு அராஜகம் செய்திருக்கிறேன் என்று எனக்கே தெரிந்தது.
**
அம்பேத்கர்
தீண்டாமையை தீயாய் சுட்டெரித்தவரே !
தொண்டாய் அரசியலை வழிவகுத்தவரே !
தாழ்த்தப்பட்ட இனத்தில் படித்த முதல் மாணவரே !
பள்ளியில் கிடைத்த அவமானத்தில்
தீண்டாமை பற்றி சிந்தித்தாய் !
தீண்டாமை ஒரு பாவ செயல் என்று
பள்ளிப் புத்தகங்களில் அச்சடித்தாய் !
இந்திய சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தாய் ! - உன்
இந்திய மக்களுக்கு உத்வேகமாய் இருந்தாய் !
நீங்கள் கொடுத்த பாடத்தில்
தீண்டாமை ஒழித்துவிட்டோம் !
நீதி புத்தகளில் மட்டுமே
தீண்டாமையை வாழவிட்டோம் !
நீதி மன்றங்கள் சட்டத்தின்
இருப்பிடமாக இருக்கிறதே !
நீதி இருக்கும் இடமாக்க
இன்னும்
எத்தனை அம்பேதகர் தேவையோ ?
ஒரு சிலர் தங்களுக்கு
சாதகமானதை விட்டு விட்டு
பாதகமானதை மாற்றினர் !
உங்கள் சட்டத்தால்
'தலித்' இனம் வளர்ந்தது
சுயநலத்தின் சிலரால்
மனித நேயம் தளர்ந்தது !
மூவெட்டாய் ஒரு நாளை வகுத்து வாழந்தவரே !
மக்களுக்காக உணர்மிகுந்த சட்டத்தை எழுதியவரே !
இன்று மனித இனம் இறக்காமலிருக்க....
உயிர் கொண்டு புதிய சட்டங்கள் எழுத வாருமய்யா
உங்கள் வரவுக்காக
சில சட்டங்கள் மாறாமல் இருக்குதைய்யா !
No comments:
Post a Comment