வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, January 3, 2010

எதிர் வீட்டு தேவதை !



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

***

"என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

புத்தகத்தை வாங்க இங்கே !

3 comments:

கடைக்குட்டி said...

ஹா ஹா.. என்னத்த சொல்ல...

மதுரை சரவணன் said...

intha ponnukale ippadithan !

karthikeyan pandian said...

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

LinkWithin

Related Posts with Thumbnails