வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 20, 2010

Inside : கொடூரத்தின் உச்சக்கட்ட படம் (18+)பிரன்ச் மொழி படம் (À l'intérieur). ஆங்கிலத்தில் ‘Inside’.

கண்டிப்பாக 18+ மட்டும். கர்ப்பிணிகள் இந்த படத்தை பார்ப்பவதை தவிற்பது நல்லது.

Saw, Hannibal, Psycho என்று பல சிரியல் கில்லிங் படங்கள் பார்த்திருக்கிறேன். காரணமே இல்லாத பல கொலைகள் நடக்கும். Urban legend, I know what you did last summer போன்ற படங்கள் பழிவாங்குவதற்கு சிரியல் கில்லிங் நடக்கும். ஆனால், இதில் பழிவாங்குவதற்காக அவள் பாதையில் வரும் ஒவ்வொருவரை கொலை செய்கிறாள் ஒரு பெண்.

ஒரு சராசரியான பெண்ணை இந்த அளவுக்கு கொடூரமாக காட்ட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. தன் கருவில் இருக்கும் குழந்தையை சாலை விபத்து மூலம் கொன்ற பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையை அடைய துடிப்பது தான் கதை.

ஆரம்ப காட்சியே கருவில் இருக்கும் குழந்தையுடன் அம்மா பேசுவது போல் படம் தொடர்கிறது. அடுத்த காட்சியே சாலை விபத்து. சாரா தன் கணவனை இழக்கிறாள். அதிஷ்டவசமாக அவளும், அவள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எதுவுமாகவில்லை. மருத்துவ பரிசோதனை வீட்டுக்கு திரும்பும் சாராவை ஒரு பெண் உருவம் மிரட்டுகிறது.

பயத்தில் தனது பாதுகாப்புக்கு போலீஸ்யை அழைக்கிறாள். பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் வீட்டை சோதனை செய்து விட்டு யாருமில்லை என்று செல்கிறார்கள். மன நிம்மதியுடன் சாரா தூங்கும் போது, மற்ற பெண் உருவம் சாராவில் வயிற்றை கத்தியால் குத்துகிறாள். திட்டுக்கிட்டு எழுந்து அந்த மற்ற உருவத்தை தள்ளிவிட்டு சமையல் அறைக்குள் செல்கிறாள். சாராவை காப்பாற்ற வரும் அவள் அம்மா, முதலாளி, காவலாளி என்று ஒவ்வொராக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.

சாராவை கொல்ல துடிக்கும் மற்ற பெண், முதல் காட்சியில் அவளால் சாலை விபத்தில் கருவில் இருக்கும் குழந்தை இழந்த பெண் டேல். தன் குழந்தையை கருவிலே கொன்றதற்காக சாராவின் கருவில் இருக்கும் குழந்தையை அடைய முயற்சிக்கிறாள் என்று சாராவுக்கு தெரியவருகிறது. சாரா டெல்லிடம் இருந்து தப்பித்தாளா ? டெல் சாராவின் குழந்தையை அடைந்தாளா ? என்பது தான் க்ளைமேக்ஸ்.

பனி குடம் உடைவது, கர்ப்பினி வயிற்றை கத்தறிகோளால் குத்துவது, கொடூரமாக கொலைகள் செய்வது என்று மனதை பதர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. கடந்த பத்து வருடங்களாக பிரன்ச் மொழி ஹாரர் படங்களில், 12வது இடத்தில் இந்த படம் இருக்கிறது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் வாழ்வா ? சாவா ? போராட்டத்தை ஒரு வீட்டில் நடப்பது போல் இயக்கி இருக்கிறார்கள் Alexandre Bustillo - Julien Maury என்ற இரட்டை இயக்குனர்கள்.

இதில் நடித்த இரண்டு நாயகிகளும் (Alysson Paradis and Béatrice Dalle) Sitges - Catalonian International Film Festivalஇல் Carnet Jove Jury விருது பெற்று இருக்கிறார்கள்.

நாம் புனிதமாக நினைக்கும் கருவறையை இந்த படத்தில் எப்படி எல்லாம் வதைத்திருக்கிறார்கள் என்ற பார்த்த பிறகு அன்று இரவு என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

மனதை தயார் படுத்துக் கொண்டு படத்தை பார்க்கவும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails