வேலை பளுவால் சென்னை புத்தக கண்காட்சிக்கு முதல் இரண்டு நாள் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக நேற்று (1.1.10), கையில் இரண்டு ஷாப்பிங் பையுடன் புத்தகக் கண்காட்சிக்கு நுழைந்தேன்.
IT க்காக தங்கள் பதிப்பகம் பெயரில் ஸ்டால் வைக்காமல் வேறு பெயரில் ஸ்டால் வைத்திருப்பதை கவனித்தேன். IT வரும் அளவிற்கு புத்தகம் விற்பனையாகிறது என்பது மிக பெரிய விஷயம். நல்லா இருந்தா சரி !!
நாகரத்னா பதிப்பக புத்தகங்களை வேண்டிய ஸ்டாலில் கொடுத்து விட்டு, ஒவ்வொரு புத்தக ஸ்டாலை பார்த்து பார்த்து புத்தங்களை வாங்கினேன். இது வேறும் முதல் கட்டம் மட்டுமே.
ஆதவன் சிறுகதைகள் (அம்ருதா வெளியீடு)
வண்ணநிலவன் சிறுகதைகள் (அம்ருதா வெளியீடு)
ஆயிஷா - இரா.நடராஜன்
கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஜாக் வெல்ச் - ரவீந்தர்
இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்
அய்யனார் கம்மா - நர்சிம்
பலிபீடம் நோக்கி - கலைஞர் (தி.க. வெளியீடு)
சிதம்பர ரகசியம் - கி.வீரமணி (தி.க. வெளியீடு)
வால்மீகி இராமாயண சம்பாஷனை - பெரியார் (தி.க. வெளியீடு)
வழக்கம் போல் நான் வாங்க எடுத்து சென்ற பணத்தில் பாதிக்கு மேல் களவாட நினைத்தவர்கள் கிழக்கு பதிப்பகம் தான். நல்ல வேலை. கிரடிட் கார்ட் மூலம் வாங்கி விட்டேன். NHMயில் வாங்கிய புத்தகங்கள்
பிராடிஜி வோர்ட் கிலாக் - 24 புத்த்கங்கள்
தி.மு.க உருவானது ஏன் ? - மலர்மண்ணன்
சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்
ராஜிவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன்
மாவோயிஸ்ட் - பா.ராகவன்
ஓஷோ ஒரு வாழ்க்கை - பாலு சத்யா
கிழக்கு ஸ்டால் வெளியே பா.ரா அவர்கள் இருந்தார்.அவரிடம் மாவோயிஸ்ட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். ( இந்த புது வருடத்தில் அவர் போடும் முதல் கையெழுத்து.)
தன் பதிவில் இலவச புத்தகம் கொடுக்க கூடாது என்று அவர் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும், என் புத்தகத்தை (என்னை எழுதிய தேவதைக்கு) தைரியமாக கொடுத்தேன். என் மானசீக குருவிடம் அவருக்கே தெரியாமல் நான் எடுத்துக் கொள்ளும் உரிமை. சிரித்தப்படி அவரும் வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டார். என்னை திட்டி பதிவு எழுதுவதாக சொன்னார். இன்னும் பதிவு வரவில்லை. மோதிர விரலில் கொட்டு வாங்க காத்துக் கொண்டு இருக்கிறேன்.
இரண்டு கையில் புத்தகங்களோடு மூன்று மணி நேரம் மேல் நடக்க முடியவில்லை. பாதி மனதோடு திரும்பி வந்தேன்.
மீண்டும் நாளை போகாலாம் என்று இருக்கிறேன். இந்த முறை கிழக்கு புத்தகம் வாங்க கூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். முடிந்தால் அந்த ஸ்டால் பக்கமே போக கூடாது.
ஐயோ..........!! 'இந்தியா வரலாறு காந்திக்கு பிறகு' புத்தகம் வாங்க மறந்துட்டேனே !!
5 comments:
//வேலை பலுவால் //
பளு அதிகம் என்பதால் பலுவாகி விட்டதோ?? :)
இதற்கு தான் Proof பார்க்க உங்களை போல் ஆட்கள் வேண்டும் என்பது... :)
மாற்றிவிட்டேன் நண்பா :)
புத்தாண்டு வாழ்த்துகள் குகன்.
ஸ்டால் என்பதற்கு பதிலாக கண்காட்சி என்ற சொல்லை பயன்படுத்தலாம்
இனிய பொங்கல் வாழ்த்துகள் குகன்!
-அரிமா இளங்கண்ணன்
Post a Comment