
சாப்பாடு மறந்து அலுவக வேலை என்னை விழுங்கும் போது, பல நேரங்களில் எனக்கு உணவாய் இருப்பது பிஸ்கெட் தான். பலருக்கு அப்படி தான். அவசர அவசரமாக சாப்பிட்டப்படியே பிஸ்கெட் சாப்பிட்டப்படி வேலை செய்ய வேண்டியது வரும். எதோ வயிற்றுக்கு ஒன்று அனுப்பி விட வேண்டும். இல்லை என்றால் நம்மை நிம்மதியாக வேலை செய்ய விடாது. ஏதோ ஒன்று வற்றில் கிள்ளுவது போல் இருக்கும். அதற்காகவாவது பிஸ்கெட்டை சாப்பிடுவோம். நாம் சாப்பிடும் பிஸ்கெட் க்ரீமா, நட்ஸா என்று கவலை இல்லை. சாப்பிட்டால் போதும். இதை சாப்பிட நேரம் இருப்பதே பெரிய விஷயம்.
பால்யத்தில் இதே போல் எத்தனை பிஸ்கெட் சாப்பிடுயிருப்போம். உணவே இருந்தாலும், பிஸ்கெட் வேண்டும் என்று அடம் பிடிப்போம். குறிப்பாக க்ரீம் பிஸ்கெட்டுக்கு. இது மட்டும் இருந்தால் போதும் சாப்பாடே வேண்டாம்.
க்ரீம் பிஸ்கெட்டை ரசித்து சாப்பிடுவது போல் வேறு எதையாவது இவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருக்கேனா என்று தெரியவில்லை. எடுத்தோம்மா, சாப்பிட்டோமா என்று க்ரீம் பிஸ்கெட்டை சாப்பிடுவதில்லை. க்ரீமால் ஒட்டிய பிஸ்கெட்டை திறந்து, முதலில் க்ரீம் மட்டும் சாப்பிடுவோம். ( உண்மையை சொல்லுவது என்றால் நக்குவோம்). இருக்கும் க்ரீம் சாப்பிட்ட பிறகு தான் பிஸ்கெட்டை சாப்பிட தோன்றும். சில சமயம் க்ரீம்மை மட்டும் சாப்பிட்டு பெரிய மனதோடு பிஸ்கெட்டை ( சிறுவயதில் இருக்கும் போது ) மற்றவர்களுக்கு கொடுப்போம். சிறுவர்களும், பெரியவர்களும் சாப்பிடும் பிஸ்கெட்டுக்கு இருக்கும் வித்தியாசமே இந்த க்ரீம் தான்.
அலுவலக வேலை எப்படி நம்மை விழுங்கியதோ, பிஸ்கெட் கவர்கள் சுற்று புற சுழலை விழுங்கிக் கொண்டு இருக்கிறது. அன்று எந்த பிஸ்கெட் பாக்கெட்டாக இருந்தாலும் காகிதத்தில் தான் தயாரிப்பார்கள். ஆனால், இன்று எல்லாம் பிலாஸ்டிக் மயம். பேப்பர் கவரில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டை கூட நாம் மறந்துவிட்டோம். நிறுவனங்களும் மறந்துவிட்டன.
நமக்கு பெரிய சாபமாக இருப்பது இரண்டு. ஒன்று பண தேவை. இன்னொரு நம்மை பற்றிய தற்போதைய நினைவு. ஒரு நிமிடதிற்கு இந்த இரண்டையும் மறந்து விட்டால் பாலியத்தில் தொலைத்தை இப்போது கூட நாம் பெற முடியும்.
சமிபத்தின் ஒரு ரயில் பயணத்தில் விழுப்புரம் அருகே என் கண்ணில் பட்டது க்ரீம் பிஸ்கெட். இன்று மத்திய சாப்பாடு இதை தான் சாப்பிட வேண்டும் என்று மனம் சொன்னது. வாங்கினேன். ரயில் தண்டவாளத்தில் செல்ல, க்ரீம் பிஸ்கெட் இரண்டாக பிரித்தேன். க்ரீம்மை முதலில் சாப்பிட்டு, பிறகு பிஸ்கெட்டை சாப்பிட்டேன். என் பக்கத்தில் அமர்ந்தவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். கவலையில்லை. நான் இழந்த பாலியத்தை க்ரீம் பிஸ்கெட் சாப்பிடும் வரை கிடைத்தது.
(க்ரீம் பிஸ்கெட் சாப்பிட்டப்படி எழுதிய கட்டுரை)
1 comment:
ரசித்த பதிவு குகன்
Post a Comment