வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 9, 2010

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் நன்மைநம்மிடம் பணம் இருக்கும் போது கிரடிட் கார்ட் பயண்படுத்தி ஏன் வாங்க வேண்டும் ? நீங்கள் கேட்பது சரி தான். ஆனால், எல்லா சமயமும் நம்மிடம் பணம் உள்ளதா... நிச்சயமாக இருக்காது. எதோ கடையை வேடிக்கை பார்க்க செல்கிறோம், அங்கு ஒரு புத்தகம் படித்து நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது.... வாங்க வேண்டும் என்று நினைகிறீர்கள். ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வோம்.. வாங்காமல் வந்து விடுவோம். மீண்டும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், அதே கடையில் வாங்வோம் என்பதில் நிச்சயமில்லை. நீங்கள் ஆசைப்பட்ட பொருள் வான்க முடியாமல் போகிறது. அந்த கடைக்காரனுக்கு விற்க பட வேண்டிய பொருள் விற்கமுடியாமல் போகிறது. இரண்டு பேருமே பாதிக்க படுகிறார்கள்.

ஆனால், நம் கையில் கிரடிட் கார்ட் இருந்தால், கார்ட்டை தெய்த்து விட்டு அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்லலாம். அந்த கடைக்காரனுக்கு வியாபாரம் நடக்கிறது. இதில் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தான்.

சரி ! கிரடிட் கார்ட் பயன்படுத்தி புத்தகம் வாங்கி விட்டீர்கள். ஆனால், அந்த பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றால் கடைக்காரன் நம்மிடம் வந்து கேள்வி கேட்பானா..? இல்லை. நீங்கள் வந்து வங்கியின் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருள் வாங்கினீர்களோ... அந்த வங்கி கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் கடையில் பொருளை வாங்கி கிரடிட் கார்ட் தெய்து,கையெழுத்து போட்ட பிறகு உங்களுக்கு, அந்த கடைக்காரனுக்கும் சம்மந்தமில்லை. பொருளுக்கு தேவையான சர்வீஸ், வாராண்டி போன்றவைக்கு நீங்கள் கடைக்காரனிடம் கேட்கலாம். ஆனால், கடைக்காரன் அந்த பணத்தை பற்றி உங்களிடம் கேட்க மாட்டான். ஒரு மாதத்திற்குள் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை வங்கியில் செலுத்தி விட வேண்டும்.

உங்களுக்கு திடிர் என்று மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்கிறீர்கள். கையில் டிக்கெட் மற்றும் சிறிய அளவு தான் பணம் உள்ளது. விரும்புபவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டும். டெபிட் கார்ட்டில் கூட பணமில்லை. அப்பொது நமக்கு ஆபத்பாண்டவனாக இருப்பது கிரடிட் கார்ட் தான்.

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். விருந்து கொடுப்பதாக சொல்லி ஹோட்டலில் இஷ்டத்துக்கு சாப்பிட்டாச்சு. பணம். கையில் இல்லை...!! இருக்கவே இருக்கிறது கிரடிட் கார்ட்.

இன்று கிரடிட் கார்ட், செல்போன் இரண்டும் தான் வேலை செய்பவர்களின் ஸ்டேடஸ் ஸிம்பில். சமிபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தனக்கு வர போகும் வருங்கால கணவன் கிரடிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். அதுவும் 'Add-on' கிரடிட் கார்ட். அதாவது கணவன் - மனைவி இருவரும் இரண்டு கிரடிட் கார்ட் வைத்திருப்பார்கள். ஆனால், மாதம் வரும் பில் மட்டும் ஒருவர் பெயரில் வரும். அதாவது கணவன் பெயரில் வரும். அது தான்... 'Add-on' கிரடிட் கார்ட். இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அடிப்படையாக கிரடிட் கார்ட் இருக்கிறது.

கிரடிட் கார்ட் தெய்து பொருள் வாங்கி விட்டீர்கள் ? அது ஏமாற்று பொருள் வாங்கிய பிறகு தான் தெரிந்தது. அதனால், கிரடிட் கார்ட்டுக்கு பணம் கட்டாமல் இருக்க முடியுமா ? முடியாது. வங்கியிடம் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவும் முடியாது. வங்கி எப்படியும் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் வாங்கி கடையில் பேசி பொருளை கொடுத்து பணத்தை பெற்றால் தான் உண்டு. நீங்கள் ஏமாறியதற்கு எந்த வங்கியும் (கிரடிட் கார்ட் வங்கி) பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது.

கிரடிட் கார்ட்டில் செலவு செய்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் பண கஷ்டத்திற்கு உதவும் நண்பனாக இருக்கும். பணம் கட்ட தவறிவிட்டால் பண நெருக்கடி கொடுப்பதில் முதல் எதிரியாக இருக்கும்.

7 comments:

andygarcia said...

nice and informative articles about credit cards,please continue!

Anonymous said...

Never had a credit card. very very happy on that count.

KATHIR = RAY said...

Credit Card Uses pathi solli irukeenga ok right.

Atha epdi muraya use pandrathunnu sollunga.
1.Credit period epdi calculate pandrange. Porul Vanganathula irunda? or Card Active la irundu every 50 days count ah?
2. What are the Hidden charges is there?

3. How the service charges differ from each credit card companies?

4. What are the solution for technical problem?

Like excess money transferred.
Like double time credit problem

5.What is the service charge for monthly or yearly?

6.What are the risk factors?

7.Details of Terms and conditions of every credit card company?

8.Which card is best?

9. Comparative statement of Every credit card companies Services and charges.

10. Describe details statement of the good process using Credit card. Example Credit card Statement for Good Transaction and bad transaction.

So Note this points and Write about Credit card that will be useful. Dont say any message "MOTTAYA" K

"உழவன்" "Uzhavan" said...

வேற எதோ புதுசா சொல்ல போறீங்கனு பார்த்தேன்

Atchu said...

உலகின் TOP 10 கோடீஸ்வரர்கள் பட்டியல்
http://pangusanthai-srilanka.blogspot.com/2010/03/top-10.html

நாமக்கல் சிபி said...

better to use debit card always!

chumma said...

If we had any problems relating to the products which we purchased thru card, we can raise disputes thru our bank and if we provide sufficient info asking by the bank, then they will give temporary credit and after further investigatoins, they will give permanent credit for that amount and they will recover that money from the merchant's bank.

LinkWithin

Related Posts with Thumbnails