
காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் அவர்கள் பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறார்கள். அந்த அளவிற்கு காதல் என்பது ஒவ்வொருவரின் மனத்திலும் புதைந்து கிடக்கிறது. தங்கள் காதலை மறந்திருந்தாலும், மறைத்திருந்தாலும் உள்ளுக்குள் அது உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. யாராவது காதலைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஏதாவது காதல் பற்றிய செய்தியைப் படித்தாலோ, காதல் பற்றிய படங்களைப் பார்த்தாலோ உறங்கிக் கொண்டிருந்த உள்ளம் உற்சாகத்துடன் எழுந்து கொண்டு விடுகிறது. இப்படித்தான் நூலாசிரியர் குகன் தன்னுடைய காதலையும் நண்பர்கள் சிலரது காதல்களையும் கதைகளாக்கித் தந்திருக்கிறார். குகனின் கதைகள் கவிதைகளைப் போல் விளக்கம் தேடும் வகையில் சொல்லப்பட்டிருந்தாலும் பல காதல் தேவைதைகளைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
காதலைத் தொலைத்த பலர் தங்கள் தேவதையை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனைவி மக்கள் என்று தங்களுக்கென்று குடும்பம் ஒன்று அமைந்து விட்டாலும் காதலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக குகன் இந்நூலை சென்னை, நாகரத்னா பதிப்பகம் மூலம் அளித்திருக்கிறார். காதலைப் பற்றித் தெரியாதவர்களும் இந்நூலைப் படிப்பதன் மூலம் காதல் அனுபவங்களை அடைய முடியும்.
நன்றி : முத்துகமலம்.காம்
நூலை வாங்க... இங்கே
No comments:
Post a Comment