
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசித்த கவிதை புத்தகம்.
ஆரம்ப காலத்தில் கவிதை மட்டுமே படிப்பேன். கவிதை மட்டுமே எழுதுவேன். வைரமுத்து, அப்துல் ரகுமான், கண்ணதாசன், பழநிபாரதி, அறிவுமதி என்று பிரபல கவிஞர்கள் முதல் புதிதாக வந்த கவிஞர்களின் புத்தகங்கள் எல்லாம் படிப்பேன். நாளாக நாளாக என்னுடைய கவிதை வாசிப்பும், கவிதை புத்தகங்களின் மீது எனக்கு இருக்கும் பார்வையும் மாறிவிட்டது.
எந்த கவிதை நூல் எடுத்தாலும் முழுமையாக முடிக்க முடிவதில்லை. ஐந்து கவிதைகள் படித்து விட்டு புத்தகத்தை வைத்துவிடுவேன். தொடர்ந்து அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆர்வம் வராது. முழு வீச்சில் படிக்க வேண்டிய கவிதை புத்தகத்தை படிக்காமல் என் அலமாரி ஒரத்தில் எங்கோ கிடக்கும்.
பல நாட்களுக்கு பிறகு, என் வாசிப்புக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக வாசித்தது ஒரு பட்டாம்பூச்சியின் கனவு " கவிதை புத்தகம்.
நான் எந்த புத்தகத்தை வாசித்தாலும் எனக்கு பிடித்த வரிகளை கொடு பொடுவது என் பழக்கம். இந்த புத்தகம் விற்பனைக்கு வந்ததால் என் பேனாவை அடக்கி வைக்க வேண்டியதாக இருந்தது. ஒரு கட்டத்தின் மேல் நல்ல வரிகளை குறிக்க முடியததால் பிடித்த வரிகளை குறிப்பு எடுத்துக் கொண்டேன். இந்த புத்தகத்தில் நான் ரசித்த ஒரு சில கவிதைகள்.
மறக்கப்படுதலுக்கான உரையாடல்
மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
அழ்ல்கிறது தாத்தாவுக்கு
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல் !
சுதந்திரம்
இருநூறு வருடம்
ஆட்சி செய்தவனிடமிருந்து
பெற்றுத்தர முடிந்தது ஒரு
கிழவனால்...
அறுபது வருடம்
ஆட்சி செய்பவர்களிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...
நிலா பார்த்தல்
பிள்ளைக்கும்ச் சோறூட்டுவதற்காக
நிலவைத் தேடுகிறாள்
ஒருத்தி...
கந்தல் உடையும்
கையில் தட்டுமாய்
வாசலருகே நிற்கிறது
பசித்த பிறை நில்வொன்று !
விழி தொலைந்தவன்
கோவில் வாசலில்
சூருண்டு படுத்திருக்கும்
குருட்டுப்
பிச்சைக்காரணைத்
தாண்டிச் சென்று
இறைவனிடம்
கேட்கிறான் பிச்சை
காதல் கவிதைகளில் அதிகம் எழுதி பழக்கப்பட்ட நிலா ரசிகன் இந்த நூலில் மூலம் சமூக கவிதையிலும் தன் பார்வையை பதியவைத்திருக்கிறார். கிராமத்துக்கு கவிதைகளில் வாசிக்கும் போது வைரமுத்து குரல் கேட்பதை தடுக்க முடியவில்லை. பெரிய கவிதைகளை விட சிறு கவிதைகள் நம் மனதில் இடம் பெருகிறது. குறிப்பாக, 'ஈழ கவிதைகள்' மனதை நெருடுகிறது.
ஈழ கவிதைகள்
இக்கரைக்கு அக்கரை
சிகப்பு
ஈழம்
*
உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டி ஒடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்
குண்டுகள் வீசும் விமாங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே !
பெரிய கவிதை மிகவும் ரசித்தது "மரத்திடம் பேச்சுவார்த்தை" மனிதன் கேட்கும் மரம் பதிலளிப்பது போன்ற கற்பனை.
பெருமைப்படும் விஷயங்கள் ?
என்னிடம் ஞானம் கற்ற
புத்தர்
என்னைச் சுமந்த
கர்த்தர்
மரங்களை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த வரிகள் நினைவுக்கு வரும்.
வைரமுத்து எழுதிய கவிதை நூலாக இருந்தாலும் அதிக பக்கங்கள் கொண்ட கவிதை புத்தகங்கள் சரியாக விற்பனையாவதில்லை. பெரும்பாலான வாசகர்கள் கவிதை நூல்களை ஒரே மூச்சில் படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், 150 பக்கங்கள் கொண்ட கவிதை புத்தகத்தை வாசிக்க வாசகர்கள் ஆர்வ காட்டுவது கடினமாக இருக்கும்.
நிலா ரசிகன் தன் அடுத்த கவிதை தொகுப்பு குறைந்த பக்கங்கள் கொண்ட சிறு கவிதைகள் தொகுத்தால் நன்றாக இருக்கும்.
நூலை வாங்க... இங்கே
Discovery Book palaceயில் நாகரத்னா பதிப்பகம் நடத்து புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் உள்ளது. .
Discovery Book palace,
6, Munusamy salai,
West K.K.Nagar,
Chennai.
2 comments:
வணக்கம் குகன்,
உண்மையில் மிகச் சிறந்த கவிதை நூலையும், சிறந்த கவிஞனையும் அறிய வைத்திருக்கின்றீர்கள்.
உண்மைகளே நிரம்பியுள்ளன கவிதைகளில்...!
வாழ்த்தும்..நன்றிகளும்..!
இரண்டு நாட்களாக இணைய இணைப்பில் பிரச்சினை. இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது. நன்றி குகன். அழகான விமர்சனம். அடுத்த கவிதை தொகுப்பு 90 பக்கங்களுக்கும் குறைவாகத்தான் இருக்கும் :)
நன்றிகள் பல.
Post a Comment