
சமிபத்தில் சச்சின் 147 பந்தில் 200 ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை புரிந்தார். அப்படி சாதனை செய்த சச்சினை ஐ.டி துறையில் இருப்பவர்கள் அவருக்கு அப்ரைசல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை.
மேனேஜர் : 200 ரன் எப்படி எடுத்திருக்க...
சச்சின் : பேட்டுல அடிச்சு
மேனேஜர் : அது இல்ல... 200 ரன்ல எத்தன 4, 6 அடிச்ச
சச்சின் : 25 * 4 (100), 3 * 6 (18) அடிச்சேன்
மேனேஜர் : அப்போ 28 பால்ல 118 ரன் எடுத்திருக்க...! அப்புறம் எப்படி எல்லாம் ரன் எடுத்த
சச்சின் : 12 இரண்டு ரன் ( 24), 58 ஒரு ரன் (58) எடுத்தேன்.
மேனேஜர் : மொத்ததுல 98 பால்ல 200 ரன் எடுத்திருக்க..
சச்சின் : ஆமா...!
மேனேஜர் : அப்படினா 49 பால்ல ( 147 - 98) நீ வெஸ்ட் பண்ணியிருக்க... ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தாலும் 49 ரன் இன்னும் எடுத்திருக்கலாம். நீ நல்ல வேல பண்ணியிருந்தாலும், நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பண்ணல. அதனால என்னுடைய ரேட்டிங் 3 மூனு தான். இன்கிரிமென்ட் கிடையாது.
சச்சின் : $*$**
***
எமதர்மராஜர் ஒருவனிடம் வந்து " பத்து வருடத்திற்கு எந்த நொய் நொடி வராது. நீ சந்தோஷமாக சுந்திர பறவை போல் வாழலாம்" என்கிறார்.
அவர் சொல்வதை நம்பி அவனும் வெளியே வந்து விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறான்.
நரகத்தில் வந்து தன்னிடம் "ஏன் பொய்" சொன்னதாக கேட்கிறான். அதற்கு எமதர்மராஜர் " மன்னிச்சிடுப்பா ! மாச கடைசி. பத்து பேரையாவது போட்டு தள்ளனும்" என்றார்.
***
சாப்ட்வேர் கம்பெனி புதிதாக ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவன் அமர்ந்திருக்க்கும் இடத்தில் ஏ.சி சரியாக வேலை செய்யவில்லை. போன் எடுத்து
அவன் : ஏ.சி. சரியா வேலை செய்யல்ல... என்னையா வேல செய்றீங்க...!
(எதிர்முனையில்) நீ யார் கிட்ட பேசுற தெரியுமா !
அவன் : தெரியாது !
(எதிர்முனையில்) இந்த கம்பெனி Vice President கிட்ட...
நீ யார் கிட்ட பேசுற தெரியுமா...
(எதிர்முனையில்) தெரியாது !
அவன் : நல்ல வேல... ( போனை வைத்திவிட்டான்)
(மின்னஞ்சலில் வந்த ஆங்கில நகைச்சுவையின் தமிழாக்கம் )
4 comments:
சச்சின் அப்ரைல் ஒரு வாரம் முன்னாடியே வந்தாச்சு நீங்க லேட் இருப்பினும் உங்களுக்கு 2ம் கிரேடு
நன்றி. நல்ல நகைச்சுவை. வாழ்த்துக்கள்.
thanks FFA(fun and fun only) for calculation
ஏன்னா சார் குகன் கட்டுரைன்னு ஆசையா வந்தா பழைய மெயிலுக்கு தமிழாக்கமுனு போட்டுருக்கேங்க
Post a Comment