கிரேக்கத் தத்துவ ஞானியான பிளாட்டோ ஹோமரை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
" எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. அது தான் எனது வார்த்தைகளுக்கு ஒரு கட்டுகோப்பையும், தொடர்ச்சியையும் அளிக்கிறது. அவர் மகத்தான ஒரு தலைவரும், ஆசார்யனும் கூட !"
இந்தியாவின் மகத்தான இரண்டு இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கொண்ட மற்றொரு நாடு உலகில் உண்டென்றால் அது கிரேக்கம் தான் ! இலியட், ஒடிஸி என்ற இடண்டு கிரேக்க இதிகாசத்தை எழுதியவர் ஹோமர். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. கண் பார்வையற்றவர். இதில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களையெல்லாம் ராகத்துடன் தெருவில் பாடிக் கொண்டே சென்றதாக வரலாற்றுக் குறிப்பு ஒன்று தெரிக்கிறது.
அதே சமயம், இப்படி ஒரு கவிஞரே பிறக்கவில்லை. இது அவரால் இயற்றப்படவுமில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால், பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கை ஹோமர் இயற்றிவை என்பது தான்.
அச்சிடும் இயந்திரங்கள் இல்லாத காலத்தில், கவிதைகளை படைத்து உடனுக்குடனே சபைகளில் அரங்கேற்றும் கவிஞர்களுக்கு கிரேக்கத்தில் அந்த நாளில் உயரிய மதிப்பு இருந்தது. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் பாடல்களைப் பாடித்திரிந்த அப்படிப்பட்ட ஒரு கவிஞராக ஹோமர் இருந்திருக்கலாம்.
ஹோமர் பாடிய இந்தக் கவிதைகளை, பிற்காலத்தில் தலைநகரான அலெக்ஸாண்ட்ரோ நகரில் வாழ்ந்த புலவர்கள் தொகுத்து வரைமுறைப்படுத்தினர். அவர்கள் தான் இதற்கு இதிகாசங்களின் வடிவத்தை வழங்கியவர்கள். பிற்காலத்தில் உருவான வீரசாகச கதைகளுக்கெல்லாம் இந்த இரண்டுமே முன்னோடியாக விளங்கின. மேலைநாட்டுக் கதைகளில் இவற்றின் தாக்கம் தெளிவாகவோ புலப்படுகிறது.
இலியட் சுருக்கம் :
பிரயாம் என்ற மன்னரின் பிள்ளைகளில் ஒருவானான பாரிஸ் மிகவும் அழகானவன். அவன் அதீனிதேவியின் அன்புக்குப் பாத்திரமானவனும் கூட. அவன் பேரழகியான ஹெலனைப் பற்றிக் கெள்விப்பட்டு, அவளை காதலித்து, அவளது கணவரிடமிருந்து கடத்திச் தன் நாட்டுக்கு அழைத்து வருகிறான். கிரேக்கர்கள் இதை ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி, டிராய் வீரர்களுடன் போரிட்டு ஹெலனைக் கைப்பற்ற முயன்றனர். அதற்காக ஒன்பது வருட காலம் கடுமையாகப் போர் நடக்கிறது. இதில் தேவர் கூட்டத்தைச் சேர்ந்தவர், இரண்டு பக்கத்திலுள்ளவர்களையும் அணி பிரிந்து ஆதரிக்கிறார்கள். டிராய் போரின் வீரர்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களின் தொக்கு தான் இலியட்.
ஒடிஸி சுருக்கம் :
ஆங்கில மொழிப்பெயர்ப்பில் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு பக்கங்கள் கொண்ட இலியடின் தொடர்ச்சி தான் - ஒடிஸி.
டிராய் நகரப் போருக்குப் பிறகு, அந்த போரில் கலந்து கொண்ட ஒடிஸியஸ் தனது தாய்நாட்டுக்கு திரும்புவதை விவரிக்கும் பகுதி. இதில் கடற்பயணத்தில் இன்னல்கள் மற்று தேவகோபங்களும் இடம் பெறுகின்றன. கிரேக்கர்கள் வீரத்துக்கும் மானத்துக்கும் அந்த காலத்தில் அளித்த மதிப்பை விளக்கும் சம்பவங்களை உள்ளக்கியது.
ஹோமர் எழுதிய இரண்டு இதிகாசங்களை சிவன் தமிழில் மிக எளிமையாகவும், சுருக்கமாவும் எழுதியிருக்கிறார். உலக இதிகாசத்தை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இதை படிக்கலாம். வாசிப்பு அனுபவத்திற்காக படிப்பவர்களுக்கு இந்த மொழியாக்கம் பிடிக்காமல் போகலாம்.
புத்தகம் கிடைக்குமிடம் :
கலா நிலையம்
244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை - 4
'இலியட்' புத்தகத்தை கிழக்கு மொழியாக்கம் செய்த்துள்ளது. வாசிப்பு அனுபவம் இந்த புத்த்கத்தை வாங்கலாம்.
No comments:
Post a Comment