நேற்று (28.2.10), உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு தனது 26ஆம் ஆண்டு விழாவை சென்னை எல்.எல்.ஏ லைப்பரரியில் நடந்தது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் ஸ்டால் போட இவர்கள் அனுமதிப்பத்தில்லை. சென்ற வருடம், வெள்ளி விழா அண்டு என்பதால் புத்தக சந்தை வைத்தார்கள். உரத்தசிந்தனை உறுப்பினர் புத்தகங்கள் எல்லாம் வைத்து கண்காட்சி நடத்தினார்கள். நல்ல வரவேற்று கிடைத்தது. இந்த வருடம் புத்தக சந்தை எடுத்து நடத்த அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
சென்ற வருடம் சாதான உறுப்பினர் என்ற முறையில் நான் தான் புத்தக சந்தையின் வேலைகளை கவனித்தேன். இந்த ஆண்டு, நான் உறுப்பினர் மட்டுமல்லாமல் செயர்குழு உறுப்பினர் என்ற கூடுதல் பொறுப்பு. எப்படியாவது புத்தக சந்தை எடுத்து நடத்த வேண்டும் என்று பொது செய்லாளர் உதயம்ராம் அவர்களிடம் அனுமதி கேட்டிருந்தேன்.
ஆண்டு விழாவுக்காக பல வேலைகள் இருந்ததால் அவரால் உறுதியான பதில் சொல்ல முடியவில்லை. நானும் அதன் பிறகு அவரிடம் கேட்பதை விட்டுவிட்டேன்.
நிகழ்ச்சிக்கு முன் தினம் இரவு, பதிவர் ஒருவர் 'ஸ்டால் போடுலையா' என்று கேட்டார். நான் நடந்ததை சொன்னேன். மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்க என்றார். இது போன்ற நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அவர் நெருங்கிய நண்பர் என்பதால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தேன். இந்த முறை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு எந்த தடங்கல் வராமல் புத்தகசந்தை அமைக்க அனுமதி அளித்தார்.
ஒரே இரவில் பேனர், நாகரத்னா பதிப்பக புத்தகங்கள், நண்பர்களின் ஒரு சில புத்தகங்கள் என்று வாங்கி கண்காட்சிக்காக தயார் செய்தேன். ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது.
நான் செயற்குழு உறுப்பினர் என்பதால், ஆண்டு விழா நிகழ்ச்சியில் எனக்கு ஒரு சில முக்கிய பொறுப்புகளும் இருந்தது. என்னால் ஒரே சமயத்தில் இரண்டு இடத்திலும் இருக்க முடியாத நிலை. இது வேலைக்கு நண்பர்களிடம் வேலை வாங்குவதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
ஆனால், எனக்கு புத்தக சந்தை ஆலோசனை வழங்கிய நண்பரே எனக்கு உதவியாக அவரது நண்பரை வரவழைத்தார்.
நாகரத்னா பதிப்பக புத்தகங்களையும் சேர்த்து 13 தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் மட்டும் தான் வைக்கமுடிந்தது. ஆனால், எதிர்பார்த்ததிற்கு மேல் நல்ல வரவேற்பு கிடைத்தது. ( குறிப்பாக, 'எனது கீதை' எடுத்து போன நூல்கள் விற்றது).
அந்த பதிவர் நண்பர் இன்னும் யார் என்று சொல்லவில்லையே....!!
'கேபிள் சங்கர்' தான்.
அவருக்கு நான் நன்றி சொல்லபோவதில்லை.
காரணம், என் பதிப்பகத்தின் சிறப்பு ஆசிரியரே இனி அவர் தானே..!!
2 comments:
நன்றி.. குகன்.. எதோ என்னால்முடிஞ்சது.. :)
விரைவில் சென்னை வந்து செட்டிலாகிறேன். இது மாதிரி விஷயங்களை முன் கூட்டித் தெரிவியுங்க.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment