வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Thursday, March 4, 2010
வங்கி ரகசியம் : தற்கொலை ஓர் தீர்வில்லை !!
ஒரு தனியார் தொலைக்காட்சியில் குடும்ப தலைவன் தற்கொலை செய்துக் கொண்டதை காட்டினர். அதில் தற்கொலை செய்துக் கொண்டவரின் மனைவி, குழந்தை கண்ணீர் தழுமப பெட்டி அளித்தனர். குடுமப தலைவன் தற்கொலை செய்துக் கொண்ட காரணம்...? வங்கியில் இருந்து ஐந்து பேர்கள் மிரட்டினார்கள். எதற்காக... கிரடிட் கார்ட் மூலம் செலவு செய்த பணத்தை கட்டவில்லை. அந்த சமயத்தில் அவர்களின் குடும்ப சூழ்நிலை பணம் கட்டமுடியவில்லை. வந்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்டியவுடன், பணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக வங்கியில் வாங்கிய பணம் செலுத்தவில்லை என்றால் கேட்டுப்பார்ப்பார்கள், அது நடக்காத போது வக்கில் நோட்டீஸ் விடுவார்கள். ஆனால், வங்கிகளே இப்படி அடி ஆட்கள் கொண்டு மிரட்டுகிறார்களே !! என்ன செய்வது....? என்று தோன்றலாம்.
போலீஸ்க்கு போனாலும் " பணம் செலவு பண்ண தெரியுதுல.... கட்டு " என்று தான் சொல்வார்கள். பணம் திரும்பி செலுத்த முடியாத சூழ்நிலை... கையில் பணம் கூட இல்லை... ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது... !! இந்த சமயத்தில் மிரட்டல் வந்தால்... தற்கொலை தான் தீர்வாக நினைக்கிறார்கள்.
தற்கொலை செய்த நபரை மிரட்டியவர்கள் கண்டிப்பாக அந்த வங்கியில் வேலை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி வங்கியில் வேலை செய்பவர் என்று சொல்லி மிரட்டினால் வங்கியின் அடையாள அட்டை கேளுங்கள். கட்டிப்பாக இருக்காது. ஏன் வங்கிகள் பணம் வாங்க அடியாட்கள் உதவியை நாட வேண்டும்....?
சட்டப்படி கொடுத்த பணத்திற்கு வங்கிகள் வட்டி கேட்கலாம்.ஒரு வருடத்திற்கு இவ்வளவு தான் வட்டி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்லும் போது அந்த வட்டியை கேட்பது தவறில்லை.ஆனால், மாதம் 3 சதவீதம்.... வருடத்திற்கு 36 சதவீதம் வட்டி வாங்கக்கூடாது. வங்கிகள் கிரடிட் கார்ட் பிரச்சனைகளை கோர்ட்க்கு கொண்டு போனாலும் வாடிக்கையாளருக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும். அதனால், வங்கிகள் வாடிக்கையாளருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்புவதில்லை. அதற்கு பதிலாக மிரட்ட ஆட்கள் அனுப்புகிறார்கள்.
சரி ! வீடு தேடி வந்து மிரட்டுகிறார்களே உடனே போலீஸ்யிடம் புகார் கொடுக்கலாமா...? எந்த பலனும் இருக்காது. வீடு தேடி வந்து மிரட்டியவர்கள் ரௌடிகளாக இருப்பார்கள். சில போலிஸ் நபர்களிடம் நட்பு உறவு வேறு இருக்கும். அது மட்டுமில்லாமல்... கொலை, கொள்ளை கேஸ்கள் பார்த்து கொண்டு இருக்கும் போலிஸ் நபர்களுக்கு கிரடிட் கார்ட் கேஸ் கதை புளித்து போன விஷயம். நாம் வாங்கிய பணத்தை கொடுப்பது தான் முறை என்பார்கள்.
நாம் வாங்கிய பணம் செலுத்தி தான் திர வேண்டும். வீட்டுக்கு வந்து மிரட்டுவது கொஞ்சம் ஓவர் தான். பிறகு எப்படி தான் சமாளிப்பது...? முதலில் பணம் செலுத்துவதாக சொல்லி மிரட்டும் ஆட்களை திருப்பி அனுங்கள். வங்கிக்கு சென்று உங்கள் குடும்ப சூழ்நிலையை சொல்லி பணம் கட்ட அவகாசம் கேளுங்கள். வட்டியை நீக்கி விட்டு... அசல் மட்டும் தான் கட்ட முடியும் என்றாலும் பரவில்லை. கேளுங்கள்.
பணம் செலவு செய்து நான்கு மாதம் தான் இருக்கும். யாரும் அதற்கு 12 சதவீத வட்டி கொடுக்க விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் வங்கி ஆட்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களும் அசல் வந்து சேர்ந்தால் போது என்ற நிலையில் தான் இருப்பார்கள். அப்படியும் அவர்கள் வட்டி செலுத்த தொல்லை கொடுத்தால்....கவலை வேண்டாம்.
நீங்கள் வங்கி மீது வக்கில் நோட்டீஸ் கொடுக்கலாம். அது வேண்டாம் என்று நினைத்தால் , ஆர்.பி.ஐ இணையத்தளத்தில் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். வாடிக்கையாளர் எண், வங்கி, கிரடிட் கார்ட் விவகாரம் போன்ற எல்லா விபரங்களையும் கொடுங்கள். பிறகு என்ன... வங்கி இறங்கி வந்து உங்களிடம் பேசி பார்க்கும். அசல் கட்டுவதாக இருந்தாலே போதும் என்பார்கள். நாமும் வட்டி கட்டாமல் அசல் மட்டும் கட்டலாம்.
இப்படி உயிருக்கு ஆபத்து விலைவிக்கும் அளவிற்கு கிரடிட் கார்ட் இருக்கும் போது.... அதை எதற்கு வாங்குவான் ஏன்..? என்று பலரும் நினைப்பதுண்டு. அப்படி நினைத்தாலும் தவறில்லை தான். ஆனால், 'கிரடிட் கார்ட்'டால் வங்கிகளுக்கும் சரி, நமக்கும் சரி.... நன்மைகள் இருக்கின்றன. கிரடிட் கார்ட்டில் செலவு செய்யத பணத்தை கட்டாமல் தப்பித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அதே சமயம் மாதம் 3 சதவீதம் வட்டியும் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Labels:
Credit Card,
Finance,
வங்கி ரகசியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment