மார்ச் மாதம் என்றால் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல் மாத சம்பள வாங்கும் எல்லா ஊழியர்களும் ஜூரம் வரும். ஆண்டு முழுக்க சந்தோஷமாக வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை செலவு செய்தவர்களுக்கு, இந்த மாதத்தில் கணக்கில் கொண்டு வர வேலை செய்ய வேண்டும். கொடுக்கல், வாங்கல், பில் என்று எல்லாம் இப்போது தான் கண்ணில் பட்டு தொலையும். இவ்வளவு நாள் என்ன கிழிச்ச என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
இந்த மாதத்தின் உழைப்பு தான் அடுத்த வருட வளர்ச்சிக்கான திட்டத்திற்கு உதவுகிறது.
இப்படி, மாத கடைசி என்பதை விட வருட கடைசி என்பதில் மார்ச் மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்த மாதமாக இருக்கிறது.
மார்ச் வந்தது, நாகரத்னா பதிப்பகத்தின் ஆண்டு அறிக்கை தயார் செய்யும் பொது தான் கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்த விபரம் தெரிந்தது. நூல் விறபனை மூலம் வந்த வருமானம் செலவு செய்த தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட வரவில்லை. இத்தனைக்கும் கேபிள், பரிசல் புத்தகங்கள் வெளியிட்ட ஒரு மாதத்தில் 350 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. நான்கு மாதத்தில் 'என்னை எழுதிய தேவதைக்கு' 180 பிரதிகள் மற்றும் 'காந்தி வாந்த தேசம்' 200 பிரதிகள் வரை விற்றுள்ளது.
கழிவு, கடைகளுக்கு கமிஷன் என்று போக கைக்கு வந்த பணம் எப்படி மூன்றில் ஒரு பங்கு கூட ஏட்டவில்லை ?
இத்தனைக்கும் பதிப்பகத்திற்காக தேவையில்லாத எந்த செல்வும் செய்யவில்லை. இன்னும், அடிப்படை தேவைகளுக்காக பல செலவுகள் செய்ய வேண்டியதுள்ளது.
இதை என் நண்பனிடம் சொல்லும் போது, "ஆரம்ப ஆண்டு நிதி அறிக்கையே நஷ்டமா ! நா அப்பவே சொன்னேன் பாஸ்ட் புட் வைக்கலாம்னு" என்று கேலியாக சொன்னான்.
கண்டிப்பாக இதை நான் நஷ்டம் என்று சொல்ல மாட்டேன். எந்த புத்தகமும் நான் நஷ்டத்தில் விற்கவில்லை. இன்னும் விற்க வேண்டிய பிரதிகள் என் கையில் இருக்கிறது. இந்த வருடம் இல்லை என்றாலும் அடுத்த வருடம் விற்பனையாகும். இருந்தாலும் இது போன்ற கேலி பேச்சு மனதை புண் படுத்தாமல் இருப்பதில்லை.
எந்த தொழிலில் நஷ்டம் ஏற்ப்பட்டாலும் ஆறுதல் கூறும் நன்பர்கள் பதிப்பக தொழிலுக்கு மட்டும் ஏன் கேலியாக நினைக்கிறார்கள். எந்த முயற்சியையும் வீட்டில் ஆதரிப்பவர்கள் எழுதுவதையும், படிப்பதையும் மட்டும் ஏன் எதிர்கிறார்கள் என்று புரியவில்லை.
“நமக்கு எழுத வராதா !” என்று நினைக்கும் போதெல்லாம் எஸ்.ரா, சுஜாதா இல்லை கையில் கிடைக்கும் புத்தகத்தை படித்தால் போதும். மனது உற்சாகமாகிவிடும். அதே போல், எழுத்து மூலம் பொருளாதாரரிதியாக மன உலைச்சல் எற்பட்டால் நான் தேடிப்படிப்பது பா.ராவின் எழுத்துக்கலை தான். எழுத்தை எப்படி வியாபாரமாக்க வேண்டும் என்பதை அவர் கட்டுரையில் இருந்து கற்றுக் கொள்ளலாம். எழுத்தை சேவை என்று சொல்லுபவர்கள் அதற்காக அதிகம் உழைப்பதில்லை. ஆனால், அதை தொழிலாக கொண்ட எழுத்தாளரின் உழைப்பு சராசரி மனிதனின் உழைப்பை விட மிக பெரியது. இவரின் எழுத்து சிற்றிதழில் வந்து நான் பார்த்தில்லை. இவர் எழுதினால் ஜனரக பத்திரிக்கையில் வரும்.
இவரிடம் நான் பேசிய தருணங்கள் மிகவும் குறைவு. பேசிய கொஞ்ச நேரத்தில் என்னை எதோ யோசிக்க வைத்துவிடுவார். இவரிடம் பேசும் போதெல்லாம் எழுத்தை ஏன் தொழிலாக எடுத்துக் கொள்ள கூடாது என்று மனுஷன் யோசிக்க வைத்துவிடுவார். அந்த அளவிற்கு என்னை ஏகலைவனாக மாற்றிய துரோனர். (இவர் கண்டிப்பாக கட்டை விரல் கேட்க மாட்டார்)
சரி.. ! எதற்கு பா.ரா புராணம் என்கிறீர்களா.....??
நண்பனின் கேலி பேச்சாலும், நஷ்டத்தாலும் மன முடைந்த போது பா.ரா கிழக்கில் வெற்றி கதையை தனது பதிவில் எழுதியதை படித்தேன். மொத்தம் 10 கட்டுரைகள். முழு வீச்சில் படித்து முடித்தேன். அடுத்து, நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய கட்டுரையும் படித்தேன். மனது தெளிவு பிறந்தது. என் தவறுகள் புரிந்தது.
தவறுகளை ஏற்றுக் கொண்டால் தான் அதை திருத்த முடியும்.என் தவறுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில், பதிப்பகம் தொடங்க இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
பா.ரா கட்டுரையில் கிழக்கில் வெற்றியை தனது குழுவில் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். ஆம் ! அது தான் என் பதிப்பகத்தின் மிக பெரிய குறை. அவ்வபோது, நிலா சில ஆலோசனை வழங்குவார். கேபிள் தன்நம்பிக்கை கொடுப்பார். பதிப்பகத்திற்கு என்று ஒரு குழு உருவாக்காமல் இருக்கிறேன். அதை செய்ய வேண்டும்.
புத்தகக் கண்காட்சி முடிந்து தேர்வு சமயத்தில் இரண்டு புத்தகம் வெளியிட்டிருக்க கூடாது. கண்காட்சிக்கு முன்பு கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Non-fiction புத்தகங்கள் சக்கை போடும் நேரத்தில் 'Fiction' புத்தகம் போட்டிருக்க கூடாது. இனி ! ' Non-fiction புத்தகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை, திருச்சியில் மட்டுமே நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற வெளியூரிலும் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.வெளியூரில் புத்தகம் விற்பனை செய்து தரும் நண்பர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
இடை தரகரர்களிடம் புத்தகம் போடும் வேலை வாங்குவதை நேரடியாக நானே களத்தில் இறங்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு பணியாள் வைக்க வேண்டும். இரண்டும் என்னால் இப்போதைக்கு செய்ய முடியாது.
பதிப்பகத்திற்கு என்று Shopping Cart' இணையதளம் உருவாக்க வேண்டும். 'EZee BookShop' தளத்தில் கேபிள், பரிசல் புத்தகங்கள் பெஸ்ட் செல்லராக இருப்பதால், சொந்தமாக இணையதளம் இருந்தால் இன்னும் லாபம் கொடுக்கலாம்.
குறைந்த அளவில் புத்தகம் வெளியீட்டு இருப்பதால் மார்க்கெட்டிங் செய்யும் போது மற்ற புத்தகங்கள் விற்பனை உரிமை வாங்கி அதனுடன் சேர்த்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.
எந்த தொழிலிலும் முதல் வருடத்திலேயே லாபம் கண்டவர்கள் யாருமில்லை. அப்படி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிக நாள் நிலைத்திருப்பதில்லை. கண்டிப்பாக வரும் நிதியாண்டு தவறுகளை திருத்தி லாபகரமாக்க வேண்டும்.
இதுவும் கடந்து போகும் !!
1 comment:
hey!
The same thing I wanted to learn, which you shared with us, really inspiring!
Thanks For sharing !
Car Insurance Texas
Post a Comment