நேற்று(4.4.10) காலை 9 மணிக்கு, விஜய் டி.வியில் புது டாக் ஹோ 'நாளும் நமதே' என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பினார்கள். அதில் ஒரு யுவதி, இந்தியாவில் 70% சதவீத இளைஞர்களுக்கு 'AIDS' இருப்பதாக சொன்னதும் என்னை தூக்கி வாரிப்போட்டது. பிறகு, Arrears In Different Subject என்ற விளக்கம் சொன்னவுடன் கூட்டத்தின் ஆரவார கை தட்டல்கள் ஒலித்தது.
ஒரு இளைஞன், "20 வருடங்கள் முன்பு அரசாங்கம் கல்வி நிறுவனங்களையும், தனியார் மது கடையையும் நடத்தியது. ஆனால், இப்போது அரசாங்கம் மது கடையையும், தனியார் கல்வி நிறுவங்களையும் நடத்தி வருகிறது" என்றார். இதற்கும் பலத்த கைதட்டல்.
இதுவும் இன்னொரு டாக் ஷோ என்று இல்லாமல் சில வித்தியாசமாக உத்தியை கையாண்டு இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய நான்கு பேச்சாளரை தேர்வு செய்து அவர்கள் முன் உண்மையான பிரச்சனை முன் வைத்து தீர்வு கேட்கிறார்கள். இந்த பகுதி கண்டிப்பாக பேச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரம்ப காலத்தில் விசுவின் 'அரட்டை அரங்கத்தை இயக்கிய 'உதயம்' ராம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தேர்தல் அணையர் டி.என்.சேஷன் அவர்கள் கலந்துக் கொண்டார். தொகுத்து வழங்கியவர் மதன் பாப். ( நகைச்சுவை டைமிங் வர மாட்டேன் என்ற்கிறது.)
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள். தொடர்பு கொள்க.... 'உதயம்' ராம் - 94440 11105
***
நேற்று தினதந்தியில் 'போலி சாமியார்கள்' பற்றிய கட்டுரை படித்தேன். பிரேமானந்தா, ஷிவ் முராத் திவிவேதி, ஸ்ரீகுமார் முதல் சமிபத்திய நித்யானந்தா வரை குறிப்பிட்டு இருந்தார்கள். இதில், நடிகையுடன் தொடர்பு வைத்து கொண்ட சாமியார்களில் நிதியானந்தாவுக்கு சீனியர் சாமியார் பற்றி குறிப்பிடவில்லை. எல்லாம் 'அவாள்' செயல் என்று புரிகிறது.
***
ஒரு வழியாக புத்தக கண்காட்சி வாங்கிய எல்லா புத்தகங்களையும் படித்து முடித்தேன். 'Prodigy' வெளியீட்ட உலக எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை நூல்கள் மொத்தம் 24 நூல்களை வாசித்தேன். எல்லா நூல்களும் மிக நன்றாக எளிமையாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆங்கில பாட புத்தகங்களில் கேட்ட கதை, படிக்க தவறிய கதை மீண்டும் தமிழில் படிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.
***
'IPL' கிரிக்கெட் காய்ச்சல் இணையத்தையும் விட்டு வைக்கவில்லை. நீங்களும் 'IPL' கிரிக்கெட் விளையாடலாம். கீழ் காணும் தளத்தும் உங்களுக்கு விருப்பமான ஒரு அணியை தேர்வு செய்து மற்ற ஏழு ஐ.பி.எல் அணியுடன் விளையாட வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு.
10 ஓவரில் 180 ரன் மேல் எடுக்க வேண்டும் என்று கடின இழக்கை கொடுக்கிறது. விளையாட விளையாட பழகிவிடும். அலுவலகத்தில் சும்மா இருப்பவர்கள் விளையாடி பாருங்கள்.
www.stickcricket.aol.in/gamepremierleague.php
1 comment:
ரைட்டு..
Post a Comment