வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 27, 2010

மூன்று காதல் கவிதைகள்பெண்ணே உன் அதிஷ்டம்

நான் உன்னை காதலிப்பது
என் இஷ்டம் !

என் காதலை எற்றுக்கொண்டால்
உனக்கு இல்லை நஷ்டம் !

காதலை ஏன் ஏற்றுக்கொள்ள
உனக்கு கஷ்டம் ?

என்னை நீ மறுத்தால் அது
உன்னுடைய துரதிஷ்டம் !

எந்த பெண்ணுக்கு உள்ளதோ ...
என்னை மணக்கும் பேரதிஷ்டம் !!

***

கவிதை

அவளை
நான் காதலித்தப் போது
என் விரல்
நுணிகள் கூடக் கவிதை எழுதும் !
என் பேனா
முனைக்கூட அவளைப்பாடும் !
தமிழ் எழுத்துக்கள்
எனக்கு தோழியாகும் !
ஒவ்வொரு வாக்கியமும்
காவியம் படைக்கும் !

அவள் என்னை காதலித்த போது
கவிதை எழுத மறந்து போக......
பேனாவில் மையிருந்தும் எழுத தயங்க.....
வார்த்தைகள் தெரியாமல் தமிழை மறக்க......
மௌனமே மொழியாய் மாறி விட ......

இதற்குக் காரணம் மட்டும்
கவிதையாய் வந்தது !
கவிதையே என்னை
காதலிக்கும் போது
கவிதை எழுத
வார்த்தைகள் வேண்டுமா என்றது?

காற்றில் வந்த என்
கவி ( தேவ ) தையின் வாசகங்கள் !
இதை விட
சிறந்த கவிதை இல்லை என்றது
கவிதையின் வர்தகங்கள் !

***

தேர்வு பிட்

என் சிந்தை முழுவதும்
நீயே நிரம்பி இருப்பதால்.......
தேர்வின் போது எனக்கு
உதவும் காகிதம் !

4 comments:

’மனவிழி’சத்ரியன் said...

குகன்,

தேர்வுத் தாள்கள் காதல் கவிதைகள் நிரப்பத்தானா?

மூன்றாம் கவிதை.... முத்து.

பிள்ளையாண்டான் said...

நல்லா இருக்கு!

VELU.G said...

நல்லாயிருக்குங்க

மேலும் எழுதுங்க

காயத்ரி said...

இரண்டும், மூன்றும் மிக அருமை.... வாழ்த்துக்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails