வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.4.10

வரும் சனிகிழமை 1.5.10 அன்று, நம் உரத்தசிந்தனை வழங்கும் 'என்.ஆர்.கே விருது' மற்றும் சிறுகதை போட்டிக்கான பரிசு வழங்கும் விழா நடைப்பெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில், நான் எழுதிய 'முதியோர் இல்லம்' சிறுகதைக்காக பரிசு பெறுக்கிறேன்.

இடம் :
சீனிவாசா சாஸ்திரி அரங்கம்,
லஸ் கார்னர், மைலாப்பூர்.

***

இது வரை நூல் விமர்சனங்களை பற்றி எழுதிய எனக்கு, முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியில் நூல் விமரசனம் செய்ய அழைத்திருந்தார்கள். நான் விமர்சனம் செய்த புத்தகத்தின் பெயர் "அந்த கணத்தில்...". மருத்துவர் மோகன் பாலகிருஷ்ணன் எழுதியது. எனக்கு பிடிக்காத மணிமேகலை பிரசுரம் வெளியீட்டுள்ளனர். விமர்சனம் செய்ய வேண்டும் என்பதர்காகவே படிக்க வேண்டிய நிலைமை. பெரிதாக ஒன்று இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் புத்தகம் எடுத்தேன். ஆனால், நான் நினைத்தளவிற்கு கவிதைகள் மோசமாகயில்லை. காதல், சமூகம் என்று இரண்டு வகையான கவிதைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். ஒரு முறை தைரியமாக வாசிக்கலாம்.

மணிமேகலை பிரசுரம் ஒரு பதிப்போடு இந்த புத்தகத்தை முடக்கியிருப்பார்கள். இருந்தாலும், அந்த புத்தகத்தின் விபரம் இதோ...

அந்த கணத்தில்..
விலை.21 ( 1997 ஆண்டு வெளியீட்டது)
பக்கங்கள் : 110
மணிமேகலை பிரசுரம்

***

'இளைய தளபதி' விஜய் தீவிர தெலுங்கு படம் ரசிகர் என்பது பலர் அறிந்ததே. தெலுங்கு படம், பாடல் எல்லாம் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல லட்சியத்தோடு படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அவரின் 'சுறா' படத்தில் விஜய் 'பில்லா' அஜித் கெட்டப்பில் ஸ்டைலாக வருகிறார். தீடிர் என்று அஜீத் ரசிகராக மாறிவிட்டாரோ என்று நினைக்கும் போது, தெலுங்கு 'பில்லா' வின் பின்னனி இசை வேறு.

இவரை போல் ஒரு சிக்கனமான நடிகர் தயாரிப்பாளருக்கு கிடைப்பது கடினம். தெலுங்கு படத்தின் கதை, இசை, திரைகதை என்று எடுத்து நடிப்பதால் தயாரிப்பாளருக்கு சம்பளம் கொடுக்கும் பணம் மிச்சமாகிரதாம்.

'சுறா' நம்மை வேட்டையாட... 'யூத்' கேட்டப்பில் ஏப்ரல் 30 வருதுங்கோ...!

***

நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் இப்போது திருச்சியிலும் கிடைக்கிறது.

Rasi publication
Tamil Sangam Buildings, Tiruchy-8

Guruji Books
136, W.B.Road, Tiruchy-8

National Book House
34, ராக்கின்ஸ் ரோடு,
திருச்சி ஜங்ஷன்.

மதுரை, சேலம், கோவை நண்பர்கள் கமிஷன் அடிப்படையில் நூல் விநியோகம் செய்ய தேவைப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்க. 9940448599.

4 comments:

Cable சங்கர் said...

பரிசுக்கு வாழ்த்துக்கள்.

Santhappanசாந்தப்பன் said...

சுறா ‍ மலையாளப் படமான "சோட்டா மும்பை" ரீமேக்! மோகன்லால் நடித்தது!

தெலுங்குல சரக்குலாம் தீர்ந்துடுச்சு!

Santhappanசாந்தப்பன் said...

புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன்! மிக்க நன்றி.

பரிசுக்கு வாழ்த்துக்கள்

குகன் said...

சுறா மலையாள படம் கதை தான். ஆனா, 'சர வெடி' பாட்டு தெலுங்கு 'பில்லா' படத்துல இருந்து சுட்டது.

LinkWithin

Related Posts with Thumbnails