வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 19, 2010

படித்ததும் பார்த்ததும் - 19.4.10

'Indiblogger.in’ பற்றி ஹிந்து நாளேடு கட்டுரை வெளியீட்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் பற்றியும், அதன் வளர்ச்சி குறித்தும், குழுவினர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். இதே போல், நம் தமிழ் பதிவர்களின் குழுமமும் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

***

முத்துமீனாள் அவர்கள் எழுதிய 'முள்' நாவலை வாசித்தேன். தொழுநோய்யால் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை.நல்ல இலக்கிய படைப்பு என்று மார்த்தட்டிக் கொள்ளும் படையில்லை. ஆனால், கண்டிப்பாக ஒரு சுயவரலாறாக வாசிக்கலாம். பள்ளி பருவம், விடுதியில் தான் சந்தித்த ஒரின சேர்க்கை பெண்கள், தன் ஊர் தோழிகள் என்று கடந்து பாதைகளை மிக எளிமையான நடையில் விவரித்துள்ளார்.

திருமணமான பிறகு பள்ளி பருவத்தில் தனக்கு இருந்த எதிர்பால் இன கவர்ச்சி சொல்லியிருப்பது பாராட்ட கூறியது. இந்த நாவலை படித்தவர்கள் பெரிய சர்ச்சை கிலப்பாமல் இருப்பது பெரிய விஷயம்.

Kathy Acker எழுதிய Blood and Guts in High School Plus Two போன்ற நாவல் தமிழில் வரும் சூழல் இன்னும் வேகு தூரமில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது.

இந்த நூலை வாங்க... இங்கே

விலை.60. பக்கங்கள்.104
ஆழி பதிப்பகம்

***

ஒரு வழியாக ஐ.பி.எல் லீக் ஆட்டம் முடிவடைந்தது. எதோ ரீயால்டி ஷோப்போல் தான் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதுவும், லலித் மோடி சமிபத்திய விவகாரத்தை பார்த்தால், விரைவில் ஐ.பி.எல்லில் மெட்ச் பிக்ஸிங் பற்றி தகவல் கூட வெளிவரலாம். எது எப்படியோ சென்னை அரை இறுதிக்கு வந்தாச்சு !!!

***

சரித்திரம் தோற்றவனை மதிப்பதில்லை என்பது படித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் சுற்றத்தாரும் மதிக்காது என்பதை பிரபாகரனின் தாய் தமிழ்நாட்டுக்கு அனுமதி மறுத்த போது தெரிந்தது. தீவிரவாதிகளுக்கு கோடி கணக்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுப்பவர்கள், ஒரு எண்பது வயது நபரால் என்ன பாதுகாப்பு நெருக்கடி வரும் என்று சரியா சொல்ல மறுக்கிறார்கள்.

பாகிஸ்தான், சீனாவில் இருந்து கூட மருத்துவ உதவி பெற இந்தியாவுக்கு வரலாம். இலங்கையில் இருந்து வர கூடாதா ??

மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் புதிதில்லை. ஆனால், தன் வாரிசுகளுக்கு துரோகம் செய்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஆம் ! தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தி.மு.கவே வழி வகுத்துக் கொடுக்கிறது என்பது போல் சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று...!!

1 comment:

சத்ரியன் said...

//மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் புதிதில்லை. ஆனால், தன் வாரிசுகளுக்கு துரோகம் செய்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஆம் ! தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தி.மு.கவே வழி வகுத்துக் கொடுக்கிறது என்பது போல் சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று...!!//

சரியாகச் சொன்னீர்கள் குகன்.

LinkWithin

Related Posts with Thumbnails