தேவன் என்று அழைக்கப்படும் ஆர்.மகாதேவன் 8.9.1913ல் திருவிடை மருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னை கும்பகோணம் அரசாங்க கல்லூரியில் பி.ஏ பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். பிறகு 1942ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிக்கையில் பல்வேறு எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடைய எழுத்துக்களில் 'துப்பறியும் சாம்பு', 'விச்சுவுக்குக் கடிதங்கள்', ராஜாமணி', 'கோமதியின் காதலன்' போன்ற படைப்புக்கள் மிக பிரபலமானவை.
'தேவன்' தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து சிறந்த தொண்டாற்றியிருக்கிறார். பத்திரிக்கை எழுத்து துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு, மே மாதம் 5ஆம் தேது 'தேவன் தம்முடைய 44வது வயதில் இறந்தார்.
அவர் எழுதிய 'ரங்கூன் பெரியப்பா' சிறுகதை நூலை படித்தேன். திரைப்பட சாராத ஒரு எழுத்தாளர் எப்படி ஐம்பது வருடம் மேல் நினைவில் இருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.
'ரங்கூன் பெரியப்பா' நூலில், "பெண்கள் விஷயம்: தேவனின் நகைச்சுவை எழுத்தாளர் என்பதற்கு சாம்பிள். 'வரப்பிரஸாதி' கதை இன்னும் மேடை பேச்சுக்களில் பேசப்படும் நகைச்சுவை. நகைச்சுவை எழுத்தாளராக இருந்தவர், "மறக்க முடியாது" கதையில் எல்லா தேதியின் சம்பவங்களை சொல்லும் சங்கரன் தன் திருமண நாளை மறந்து போவதும், இதை காரணம் காட்டி அவர் மனைவி வருந்தி வீட்டை விட்டு செல்வதும், அதனால் அவருக்கு பைத்தியம் பிடிப்பதாக கதை முடிகிறது. சென்டிமென்ட் கலக்கியிருக்கிறார்.
சாரு நிவேதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களை நாம் கொண்டாடும் வேளையில் 'தேவன்' போன்ற எழுத்தாளரை நாம் மறக்க கூடாது.
தேவன் அவர்கள் எழுதிய நூல்களை அல்லயன்ஸ் மற்று கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறது.
3 comments:
துப்பறியும் சாம்புவை எத்தனை தடவைப் படித்தாலும் அலுப்புத் தட்டவே தட்டாதுங்க.
// சாரு நிவேதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களை நாம் கொண்டாடும் வேளையில் 'தேவன்' போன்ற எழுத்தாளரை நாம் மறக்க கூடாது. //
சரியாகச் சொன்னீர்கள்.
"துப்பறியும் சாம்புவை எத்தனை தடவைப் படித்தாலும் அலுப்புத் தட்டவே தட்டாதுங்க."
Ditto
என்னுடைய இளம்வயதில் தேவனின் படைப்புகளை விரும்பி படித்துள்ளேன் .அவருடைய எளிய நடை என்னை மிகவும் கவர்ந்தது .அவருடைய கதைகளில் காதல் உணர்வுகள் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.கதையில் வரும் பாத்திரங்கள் எளிமையாகவும் நம்மை பிரதிபலிப்பது போல இருக்கும்.அவர் மறைந்து 50 வருடங்கள் ஆனாலும் அவர் படைப்புகளை இன்று படித்தாலும் புதிதாக படிப்பது போல் உணர்கிறேன்
Post a Comment