வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, May 2, 2010

கவிதை : மோர்

உணவு வரலாறு தொடங்கி
நிறம் மாறாதது !
சமயல் புத்தகத்தில் கூட
செய்முறை விளக்கம் தேவையில்லாதது !

பங்கு சந்தை போல்
உயரும் குளிர்பாணம் நடுவில்
ஏழைகளுக்காக உயராமல்
குளிரவைக்கும் ஒரே பாணம் !

அம்பானி முதல்
அருப்புக்கொட்டை முனுசாமி வரை
பருக கூடிய மலிவான பாணம் !

பார்ப்பவர் கண்களுக்கு
கள்ளாகவும், பாலாகவும்
தெரியும் போதே
குணத்தை காட்டிடும் பாணம் !

மண்சட்டியானாலும்
வெள்ளி கின்னமானாலும்
கொடுக்கும் சுவையில்
பேதம் பார்த்ததில்லை !

ஐஸ்கிரீம் - ஒரு நொடி பொழுது
தாகத்தை தனிக்கும் !
பெட்ரோல் விலை போல்
சில சமயம் பழச்சாறு உயரும் !
எட்டாத உயரத்தில்
இளநீர் இருக்கும் !
அரசியல், கோயில் கூட்டத்தில் கூட
மோர் இலவசமாய் கிடைக்கும் !!

எரிபொருளுக்கும் மோருக்கு,
சம்பந்தமில்லை
அதனால்,
இதன் விலை ஏற்ற
இன்னும் காரணம் கிடைக்கவில்லை !

(நம் உரத்தசிந்தனை நடத்திய "எழுத்துக்கு மரியாதை" நிகழ்ச்சியில் (1.5.10) வாசித்த கவிதை.)

7 comments:

அமைதிச்சாரல் said...

மோர் ஜில்லுன்னு இருக்கு.

மதுரை சரவணன் said...

மேர் பற்றி அருமையானக் கவிதை.வாழ்த்துக்கள்

Kowshe Kandasamy said...

கவிதை அருமை...
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...
தொடரட்டும் கவித் திறமை...

யமுனா said...

இதையெல்லாம் கவிதைன்னு சொல்லி எந்த தைரியத்தோட வெளியிடறீங்க?

முதல்ல தமிழை தப்பில்லாம எழுதக் கத்துக்கோங்க. அப்புறம் கவிதை, பதிவு எழுதலாம்.

உங்க எல்லா பதிவிலேயும் ஏதாவது ஒரு பிழை இருந்துட்டேதான் இருக்கு.

/சமயல்/ சமையல்

/பாணம்/ அப்படின்னா வெடி அப்படின்னு அர்த்தம்.

பானம் என்றால் பருகுவது.

/தனிக்கும்/ தணிக்கும்

/கின்னம்/ கிண்ணம்

இதை வாசிச்ச உங்க துணிச்சல விட கேட்டவங்களையும், இதையும் அருமைன்னு பின்னூட்டம் போடறவங்களையும் கோவில் கட்டி கும்பிடலாம்.

ராமலக்ஷ்மி said...

மோரை விட சிறந்த பானம் கிடையாது. அருமை.

ராமலக்ஷ்மி said...

பா'ன'ம். கவனியுங்களேன்.

LinkWithin

Related Posts with Thumbnails