2007 உலக சாம்பியன் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எந்த ஒரு வெற்றியும் பெறாமல் நாடு திரும்புகிறார்கள்.
இந்தியா முதலில் ஆடினால், இலங்கை அணியை 20 ரன்னில் வீழ்த்த வேண்டும். அல்லது இரண்டாவதாக ஆடினால் 17.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இன்டிஸ் அணியை வீழ்த்த வேண்டும். இந்த இரண்டும் நடந்தால், இந்தியா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதில் ஆஸ்திரேலியா நமக்கு உதவி செய்தாலும், நமக்கு நாம் உதவி செய்யாத போது யார் தான் காப்பாற்ற முடியும்.
இந்தியாவின் மூன்று தோல்விகளில் நேற்று தான் போராடி தோற்றுயிருக்கிறார்கள். இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா - இலங்கை ஆட்டம் தான் மிகவும் விரு விருப்பாகவும் இருந்தது என்று கூட சொல்லலாம்.
இதில் தோனிக்கு அதிஷ்டம் இல்லை என்று சொல்ல முடியாது. அதிஷ்டம் இருந்ததால் தான் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியில் நுழையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், வெற்றி பெறாமலே அரை இறுதிக்கு நுழைய நினைத்தால் எப்படி ???
ஐ.பி.எல் ஆட்டத்தை விரு விருப்பாக விளையாட்டு மைதானத்தை சிறிதாக வைத்து விளையாடியதில் இந்திய வீரர்களின் உண்மையான ஆட்டம் தெரியவில்லை. இப்போது தெரிந்தது !!!
"என்னை கேட்டால் இந்தியாவின் தோல்விக்கு ஐ.பி.எல் தான் காரண்ம்".
இப்படி நா சொல்லலைங்க. தோனி இந்தியா வந்தா இதை தான் சொல்லுவாரு. ஆனா, காரணம் வேற மாதிரி இருக்கும்.
No comments:
Post a Comment