வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 27, 2010

கவிதை : மகாகவி பாரதி

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதி பிறந்த தமிழ் நாடு !
சிந்தனை பிறந்தது எந்நாளாம்
சிந்து பாடும் பாரதி பிறந்த நாளாம் !

தன் திம்தரிகிட பாட்டால்
தமிழனை தட்டி எழுப்பினார் !
தன்னலம் பாராமல் எழுதியதால்
தருமி போலவே வாழ்ந்தார் !



இவர் மீசையை நிமிர்த்தி
தமிழர்களில் நரம்புகள் முறுக்கேறினார் !
அதட்டும் கண்களால்
அன்பு காட்டினார் !

ஹரிஜனை தொட்ட முதல் பிராமிணர் !
பெண் உரிமைக்காக பேசிய முதல் ஆண் !
தமிழுக்கு இருக்கும்
வறுமையை இருபதாம் நூற்றாண்டில்
உணர்த்திய முதல் கவிஞர் !

வறுமை, அலச்சல்
ஒரு கவிஞனை உருவாக்கும் சமையல் !
இதை எங்களுக்கு காட்டிய
பாரதி ஒரு கவிச் செம்மல் !

தமிழ் தாய்
தன்னை தலை நிமிர
இவரிடம் ஆலாதி பிரியம்
இளைமையிலே
தன்னிடம் அழைத்து கொண்டார் !

அச்சத்தை தவிர்க்க வைத்தார்!
மானத்தை போற்ற வைத்தார் !
ரௌத்திரத்தை பழக செய்தார் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டார் !

ஆதலால்,
" நான் கவிஞன்
எனக்கு தொழில் கவிதை "
என்று சொல்லும் துணிச்சல் எனக்கில்லை !
எழுத்தும், வறுமையும் ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை !!

1 comment:

சுஜா செல்லப்பன் said...

"அச்சத்தை தவிர்க்க வைத்தார்!
மானத்தை போற்ற வைத்தார் !
ரௌத்திரத்தை பழக செய்தார் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டார் !"

உண்மை..உண்மை...

“எழுத்தும், வறுமையும்
ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை ”

பாரதியின் கதை, கவிதை பற்றியெல்லம் நிறைய பேசிட்டோம்...அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கு...

அருமையான பதிப்பு...பாராட்டுக்கள்..

அருமையான பதிப்பு....

LinkWithin

Related Posts with Thumbnails