
நீங்கள் யாரவது சிறு வயதில் பள்ளியில் தொலைந்து போனதுண்டா ? மீண்டும் கிடைத்து பெற்றோர்களிடம் அடி வாங்கியதுண்டா ? ஒரு நாள் உங்களை பள்ளியில் எல்லோரும் தேடியதுண்டா ? இப்படி ஒரு அனுபவம் உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் அதிஷ்டசாலி.
அன்று பள்ளி முழுக்க நீங்கள் தான் ஹீரோ. இவன் தான் அந்த பையன் ? என்று விசாரிப்பார்கள். “ஏன்டா தம்பி இப்படி பண்ண” என்று அறிவுரை கூறுவார்கள். டிச்சர், ஹெட்மாஸ்டர், பிரன்ஸ்பால் முதல் கொண்டு ஓவர் நைட் பிரபலமாகிவிடலாம்.
என்னுடைய சிறு வயதின் வீர சாகசங்கள் என்று சொல்ல விரும்பினால் குறிப்பாக இந்த சம்பவத்தை சொல்ல வேண்டும். சாகசத்திற்கு வயது என்று ஒரு தடையில்லை. இந்த சாதனையை நான் நிகழ்த்திய போது எனக்கு வயது ஐந்து ! ( யூ.கே.ஜி படித்த போது). ஓவர் நைட்டில் பள்ளி முழுக்க 'கண்ணனா..! யூ.கே.ஜி படிக்கிறானே அவன் தானே' என்று சொல்லும் அளவிற்கு கொண்டு சென்றது.
இன்று திருச்சியில் ரொம்ப நல்ல பெயர் வாங்கிய வெஸ்ட்ரி ஸ்கூலில் படித்துக் கொண்டு இருந்தேன். பள்ளி முடிந்ததும் ஆட்டோக்காரன் வந்து எல்லோரையும் அழைத்து சென்று வந்தார். எல்லோரும் ஆட்டோவில் ஏறினோம். கொஞ்ச நேரத்தில் நான் குடிக்க தண்ணி பிடித்து வருவதாக சொல்லி கிளம்பினேன். நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொண்டாரா என்று தெரியவில்லை. நான் தண்ணி படித்து வந்த போது அங்கு ஆட்டோ இல்லை. அங்கும் இங்கும் தேடிப்பார்த்தும் என்னுடன் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் யாருமில்லை.
பள்ளி வெளியே வந்து பார்த்தேன். தெரிந்தவர்கள் யாருமில்லை. இன்னும் கொஞ்சம் தூறம் பார்க்கலாம் என்று நடந்து நடந்து தென்னூர் வந்துவிட்டேன். குறைந்தது என் பள்ளியில் இருந்து தென்னூருக்கு 3 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். ஐந்து வயது சிறுவன் பஸ், லாரி போகும் மெயின் ரோட்டில் நடந்து வந்தது இப்போது பெரிய விஷயம் இல்லை என்றாலும் அப்போது பெரிய விஷயமாக தான் எனக்கு தெரிந்தது.
என் பெரியப்பா வீடு தென்னூரில் இருப்பதால் அங்கு சென்றேன். நான் பள்ளியில் இருந்து பெரியப்பா வீட்டுக்கு செல்லும் நேரத்தில் ஆட்டோக்காரர் என்னை பள்ளி முழுக்க தேடியும் கிடைக்கவில்லை என்று என் அப்பாவுக்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார். அப்பா பள்ளி மேலாளரிடம் விசாரிக்க ஆளுக்கு ஒரு பக்கம் என்னை இரண்டு மணி நேரம் தேடியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த பெரியப்பா அப்பாவிடம் நான் அவர்கள் வீட்டில் இருக்கும் தகவலை கூறினார்.
அவ்வளவு தான் ! அன்று நான் வாங்கிய அடி இன்றளவும் மறக்காமல் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு செய்துள்ளது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்த நாள் பள்ளியில் நான் தான் ஹீரோ ! பள்ளியில் வேலை செய்யும் அய்யம்மா முதல் பிரின்ஸ்பால் வரை என் பெயர் பிரபலமானது.
ஒரு முறை, அப்பா திருச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கிய சமயத்தில் டி.சி வாங்கி சென்னை படிக்க பள்ளி தேடினோம். அப்போது திடீர் என்று அப்பா சென்னைக்கு செல்ல ஒரு வருடம் தள்ளி போனது. மீண்டும் அதே பள்ளியில் அட்மிஷன் கிடைக்க நான் செய்த இந்த சாதனை தான் எனக்கு உதவியது.
இன்று பல வீட்டில் குழந்தைகள் வீட்டிலே ஒழிந்துக் கொண்டு பெற்றோர்களை பதர வைப்பது குழந்தைகளுக்கு விளையாட்டாக இருக்கும். ஆனால், அவர்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய தவிப்பு கொடுக்கும் என்பதை என் மகன் கட்டில் அடியில் ஒழிந்துக் கொள்ளும் போது என்னால் உணர முடிந்தது.
1 comment:
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Post a Comment