
பெரும்பாலும் கிரடிட் கார்ட்டின் நன்மை என்று சொல்லும் போது பணம் இல்லாத சமயத்தில் பயன்படுத்தலாம் என்று தான் சொல்வார்கள். பணமில்லாத சூழ்நிலையை உருவாக்காமல் இருந்தால் கிரடிட் கார்ட் அவசியமில்லையே ! ஆனால் இன்றைய பொருளாதாரம் பெருகிவிட்ட சூழ்நிலையில் பணத்திற்காக பொருளை அடகு வைத்து ஒரு மாத தவனைக்குள் கட்டுவதை விட கிரடிட் கார்ட் எவ்வளவோ மேல்..!
முதல் தேதி அன்று வாங்கிய பொருளை முப்பதாம் தேதியன்று கட்டி விடுகிவதால், நம்மக்கு வங்கி வட்டியில்லாமல் ஒரு மாதம் பணம் தருவது போல் தெரியும். இதில் வங்கி எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற சந்தேகமும் உங்களுக்கு எழும். நியாயமான சந்தேகம் தான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கடையில் அழகான பொருளை ஒன்று பார்த்து வாங்க விரும்புகிறீர்கள். அந்த பொருளில் மதிப்பு 200 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கியாச்சு... பிறகு என்ன பணம் ஒரு மாதத்தில் கட்ட வேண்டியது தான். நீங்கள் பொருளை வாங்கும் போது கிரடிட் கார்ட் ஒரு மிஷினில் தெய்த்து கையெழுத்து கையெழுத்து பொட்ட காகிதத்தை வைத்து வங்கியில் இருந்து கடைக்காரன் பணம் வாங்கி கொள்வார். ஆனால், வங்கி அந்த கடைக்காரனுக்கு முழுசாக 200 ரூபாய் கொடுக்காது. 160,170 ரூபாய் என்று தான் வங்கி அந்த கடைக்காரனுக்கு கொடுக்கும். அப்போ மீதி பணம்.... அது தான் வங்கி லாபம் !!
இப்படி ஒவ்வொருவரும் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் வங்கிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்...யோசித்து பாருங்கள்...!!
அது சரி ! கடைக்காரன் நமக்கு 200 ரூபாய்க்கு பொருளை கொடுத்து வங்கியிடம் இருந்து 170 ரூபாய் வாங்குகிறார் என்றால்... அந்த கடைக்காரனுக்கு லாபம் தான் என்ன ? நீங்கள் பணம் கொடுத்து வாங்குவதை விட கிரடிட் கார்ட் மூலம் வாங்கினால் அந்த கடைக்காரனுக்கு லாபம் குறைவும் தான். இருந்தாலும் தன் கடையில் இருக்கும் பொருளை விற்க கிரடிட் கார்ட் உதவுகிறதே !! அது தானே அவனுக்கு முக்கியம்.
இன்னும் தெளிவாகவே சொல்கிறேன். நீங்கள் விரும்பும் பொருள் அந்த கடையில் உள்ளது. கையில் பணமில்லை என்றால் வாங்காமல் வந்து விடுவீர்கள். ஆனால், கிரடிட் கார்ட் இருந்தால் வாங்குவீர்கள். அவ்வளவு தான். உங்கள் கையில் பணமில்லாத ஒரே காரணத்திற்காக கடைக்காரன் தன் வியாபாரத்தை இழக்க வேண்டியதில்லை. எப்படியோ அந்த கடைக்காரனுக்கு அவன் பொருள் விற்றுவிடுகிறது. கிடைத்த வரைக்கும் கடைக்காரனுக்கு லாபம்.
தீபாவளி, பொங்கள் பண்டிக்கையில் சிறப்பு சலுகை எல்லாம் கடையில் கொடுப்பார்கள். 30% தள்ளுபடி, 50% தள்ளுபடி என்று கொடுப்பார்கள். அந்த சமயத்தில் கிரடிட் கார்ட் கொடுத்து வாங்கி பாருங்கள். பெரும் பாலும் கடையில் கிரடிட் கார்ட் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு இந்த தள்ளுபடி என்பார்கள். கிரடிட் கார்ட் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் அதே விலையில் வாங்க வேண்டும். இன்னும் சில கடையில் பணம் வாங்குபவர்கள் ஊக்கவிக்க... இன்னும் சில சலுகை எல்லாம் கொடுப்பார்கள். கிரடிட் கார்ட் மூலம் தங்கள் லாபத்தை வங்கிகளிடம் பகிர்ந்து கொள்வதை விட தன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுப்பது பரவாயில்லை என்பதால் கடைக்காரர்கள் இப்படி செய்வார்கள். வாடிக்கையாளர்களும் திருப்தி அடைந்து அந்த வாங்க வருவார்கள்.
தள்ளுபடி விளம்பரத்தை உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கே புரியும். அதில் '*' போட்டு கீழே Condition Apply என்று போட்டிருப்பார்கள். அதில் இந்த தள்ளுபடிகள் எல்லாம் கிரடிட் கார்ட் மூலம் வாங்குவதிற்கு பொருந்தாது என்று இருக்கும். கிரடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குவதை தவிர்க்க கடைக்காரன் தள்ளுபடியை கையாள்கிறான். வங்கிகளும் தான் கொடுத்த கிரடிட் கார்ட் பயன்படுத்துவதற்காக வங்கிகளுக்கு சிறப்பு சலுகை எல்லாம் கொடுக்கும்.
ஆனால், ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ஒரே சமயத்தில் இரண்டு சலுகைகளும் நமக்கு கிடைக்காது. ஒன்று பணம் கொடுத்து கடையில் கிடைக்கும் தள்ளுபடி பயன்படுத்தி கொள்ள வேண்டும் அல்லது கடை கொடுக்கும் தள்ளுபடியை வாங்காமல் கிரடிட் கார்ட் வாங்கிய பிறகு வங்கிகள் கொடுக்கும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
(தொடரும்...)
3 comments:
வணக்கம் தாங்கள் பதிவு வங்கிகளின் நுணுக்கம் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதாய் இருக்கிறது
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.... நல்ல பதிவு.. தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.
its not that much the credit card companys gets from the shops, it would be maximum 5%, even some case only 0.25% only.
but they are getting heavily from the defaulters as late payment, service charges, interest etc.
Post a Comment