வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Love Poems. Show all posts
Showing posts with label Love Poems. Show all posts

Monday, July 25, 2011

காதல் கவிதைகள் !

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
நாம் சதுரங்கம் விளையாடும் போது !

*

உன் ஒவ்வொரு குறுந்தகவலும்
உன் விரல் ஸ்பரிசத்தை கொடுக்கிறது
உன் ஒவ்வொரு அழைப்பும்
பிரிவின் சுகத்தை மறக்க வைக்கிறது !

*

பல புத்தகங்களை படித்த
மனநிறைவு கொடுக்கிறாய்
உன்னிடம் பேசும் போது !

*

உன்னிடம் பேசிப் பழகும் போது
கடவுளுக்கு ‘நன்றி’ சொல்லி
ஆத்திகனாகிறேன் !
சண்டையிட்டு பிரியும் போது
கடவுளை மறுத்து பேசும்
நாத்திகனாகிறேன் !

*

நீ கொடுக்கும்
சக்கரையில்லாத தேநீரை
சுவைத்து குடிக்கிறேன்
உன் புன்னகையில்
அரைகிலோ சக்கரை இருப்பதால் !

Tuesday, October 26, 2010

காதல் கவிதைகள்

இயற்கை செய்த
க்ளோனிங்
அவள் மேல் விழுந்த
மழைத் துளி !

**

உன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த
வைரமாலை கரைந்து விட்டதாக சொன்னாய் !
என் காதலை புரிந்து கொள்ளாத உனக்கு
என் கண்ணிர் துளியா தெரிய போகிறது !

**



உள்ளங்கையறித்தால்
பணம் வருமாம்
யார் சொன்னது ?
புதையல் நீ கை கொடுத்ததால்
எனக்கு
கை ரேகையே வந்தது !!

**

அதே புன்னகை
அதே காதல்
அதே மோகம்
அறுபது வயதில்... !

**

என் வீட்டு
எதிரே வந்த பிறகு
காலியாய் இருந்த
என் டைரி பக்கங்கள்
கவிதை வாசித்தது !!

**
என் பழைய கவிதைகளை
காட்டிய போது
ஒவ்வொரு பக்கமும்
தனியாக வருகிறது
என்று சொன்னாய் !

நன்றி கெட்ட கவிதை
எழுதியவனை விட்டுவிட்டு
எழுத தூண்டிய
உன்னை தேடி வருகிறது !!

Tuesday, October 5, 2010

காதல் கவிதைகள் !

காதல் என்ற போக்கிஷத்தை
கொடுக்க வந்தேன்
நட்பு என்ற பூட்டைப்போடு
முட வைத்தாய் !

கள்ள சாவி போட்டு
திறக்க நினைத்தேன்
உன் வசீகர பார்வையில்
நீயே திறந்து விட்டாய் !!




**
உன் புகைப்படம் என்று
வெள்ளை நிற அட்டையை நீட்டினேன்

நீ செல்லமாக முறைத்து பார்த்தாய்

"போட்டோ எடுக்கும் போது
சிரிக்காதே சொன்னேன் கேட்டியா !"

**

வெள்ளை, சிவப்பு
இரண்டு அணுக்கள் இல்லாமல்
புதிய அணுக்கள் தோன்றுதடி
உந்தன் காதலால் !

**
உன் நகங்களுக்கு
நெயில் பாலிஷூடன் வந்தேன்

நீ நகங்கள் வெட்டப்பட்ட
விரலை காட்டினாய் !

நேற்று
உன் நகத்தால் கீரப்பட
காயத்தை நான் ரசித்தேன் !

இன்று
நீ எனக்காக
உன் நகத்தை துறந்தாய் !

Friday, June 25, 2010

காதல் கவிதை !



"இலங்கை அதிபரின் பேத்தியோ
அழகாளே தமிழர் நெஞ்சை
கொலை செய்கிறாய்" என்றேன் அவளிடம்.

"பார்வையாலே கற்பழிக்கிறாய்
நீ என்ன இலங்கை இராணுவமா !!"
என்றாள் அவள்.

***

A +ve இரத்தமும்
A –ve இரத்தமும்
சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து
என்று விஞ்ஞானம் சொன்னது !

இரண்டு இரத்தம் சேர்ந்ததால் தானே
நம் காதலுக்கு சாட்சியாக
சிசு உருவானது !

***

நான் இவ்வளவு அழகாக கவிதை எழுதுவேன் என்று
உன்னை பற்றி எழுதும் போது தான் தெரிந்துக் கொண்டேன்.

LinkWithin

Related Posts with Thumbnails