சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கர்வம், ஆணவம், வில்லத்தனம், கருணை, அன்பு என்று எல்லா பாவங்களை முகத்தில் காட்ட கூடிய நடிகர் சிவகுமார். சமிபக் காலமாக நடிப்பு ஓய்வு கொடுத்து விட்டு, ஒரு இலக்கியவாதியாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்.
சமிபத்தில், விஜய் டி.வி அவர் சொர்பொழிவாற்றிய 'கம்பராமாயணம்' கேட்டு அதிர்ந்தே விட்டேன். கைத்தேந்த இலக்கியவாதியை விட மிக அழகாக பேசினார். இவ்வளவு நாள் வெள்ளித்திரை நடிப்புக்குள் தன் திறமை மறைத்து வைத்திருக்கிறார் என்று என்னால் நம்ப முடியவில்லை.
இந்த புத்தகம் அவருடைய சுய வரலாறு என்பதால் முதல் பத்து அத்தியாயங்கள் அவர் அம்மா, குடும்பம், கிராமம் என்று சுற்றி வருகிறது. அதன் பிறகு சினிமாவில் தன்னுடன் வேலை செய்த சக நடிகர், நடிகைகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார்.
இவர் எழுதிய 'சிவாஜி' பற்றின கட்டுரையை முன்பே பதிவு போட்டுயிருக்கிறேன். இந்த புத்தகத்தில் என்னை மிகவும் பாதித்த கட்டுரை இது என்று சொல்லலாம். 'பேராசை பிடித்த அந்த கலைஞன்' சிவாஜி நீங்கள் சொல்லும் போது சிவாஜி ஸார் மேல் சிவகுமார் வைத்திருக்கும் உரிமை தெரிகிறது.
அடுத்த குறிப்பு.... ஜெய் சங்கர் பற்றிய கட்டுரையை சொல்ல வேண்டும். பல தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் இருந்தாலும், முகம் சுளிக்காமல் 'Call sheet' கொடுப்பவர் ஜெய் சங்கர். தன்னால் மற்றவர்களுக்கு என்றும் வேலை இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்.
இவரை போற்ற நல்லவர்களை சினிமா என்றும் ஏமாற்றாமல் விட்டதில்லை. இரண்டாவது நாயகனாக, நோயாளி நாயகனிடம் அடிவாங்கும் வில்லனாகவும் நடித்தார். வல்லவன் ஒருவன், சி.ஐ.டி சங்கர் என்று தமிழ் நாட்டு 'ஜெம்ஸ் பாண்டாக வந்தவர் கடைசி கிடைத்த பாத்திரத்தில் நடித்ததில் தன் பழைய அடையாளத்தை இழந்ததை நினைத்து அவர் வருந்தியதை பதிவு செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர், நாகேஷ், கண்ணதாசன்,ரவிசந்திரன், கே.பி., எஸ்.எஸ்.வாசன் என்று தமிழ் சினிமாவின் ஐம்பது ஆண்டு நாயகர்களை இந்த புத்தகத்தின் மூலம் சிவகுமார் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
டைரக்டர் புல்லய்யா சிவாகுமாரிடம்
" டேய் பேபி.. ( பேரன் வயதிலிருந்து என்னை டைரக்டர் அப்படி தான் அழைப்பார் ) நடிகன் வாழ்க்கை, ரேஸ்ல ஒருடற குதிரை மாதிரி ! ஆரோக்கியமாக இருந்து மைதானத்தில் ஒடற வரைக்கும் தான் அதுக்கு மரியாதை ! அடிபட்டுக் கால் உடைஞ்சாவோ , வேறு ஆபத்து நேர்ந்தாலோ அந்த குதிரையைச் சுட்டுடனும். அது மாதிரி கலைஞன் வாழ்க்கை."
தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கு அறிவுரை கூறிய மனிதர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
"வர்றவங்களுக்கு எது பிடிக்குதோ, அதைதான் நாங்க தர்றோம் என்று விலைமாது சொல்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு..." என்று சொல்லும் போது மசாலா படம் எடுப்பவர்களை கடுமையாக சாட்டியும் உள்ளார். நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க வருவேன் என்ற அவரது நம்பிக்கையை தன் எழுத்துகளால் சொல்கிறார்.
பாவம் ! நல்ல கதை எழுத ஆட்கள் தான் இல்லை.
சிவகுமார் சார்!
இவ்வளவு நாள் எழுதாமல் இருந்தது வாசகரிகளின் துரதிஷ்டம் !
இப்போது நீங்கள் எழுதியது வருங்கால வாசகர்களின் அதிஷ்டம் !
No comments:
Post a Comment