வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, October 3, 2009

வாடிய மல்லி !

"பிச்ச வாங்கி தான் வாழனும்னு மனசுல பச்ச குத்தியிருக்காங்க போலிருக்கு..." என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோகுல்.

மதுரை செல்லும் வரை ட்ரெயினில் போழுது போகவில்லை என்று ஒரு பழைய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டு இருந்தான். ஒருவன் அமர்ந்த படி இறுக்கையில் இருந்தவர்களின் கால் கீழ் இருக்கும் குப்பையை சுத்தம் செய்து பிச்சைக் கேட்டு வந்தான். ஸ்வரஸ்யமாக படித்துக் கொண்டு இருக்கும் போது அந்த பிச்சைக்காரன் கோகுலின் காலை தொட்டு பிச்சை கேட்டான்.

" ஏப்பா உக்காந்த இடத்துல ஷூ பாலீஷ் போடலாம், பேப்பர் கடை வைக்கலாம். எதுக்கு பிச்ச எடுக்குற " என்று சொல்ல கோகுல் வாய் எடுத்தான். வார்த்தைகள் தொண்டை வரை நின்றது. " காசு இருந்தா போடு. வெட்டி பேச்சு பேசாத ! " என்று அந்த பிச்சைக்காரன் சொல்லிவிட்டால், மதுரை வரும் வரை மற்ற பயணிகள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். எதுக்கு வம்பு என்று காசு கொடுக்காமல் அமைதியாக மீண்டும் புத்தகம் படித்தான்.

ஆர்வமாக படித்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் பிச்சை கேட்கும் குரல். கவனிக்காமல் இருந்தான். இரண்டு கை தட்டல் சத்தம் கேட்டது. பிச்சை கேட்பவனை அடித்து துரத்த வேண்டும் என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தான். ஒரு திருநங்கை பிச்சை கேட்டு நின்றது.... மன்னிக்கவும் நின்றார்.கோகுல் மனதில் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

" மகராசனா இருக்கனும்..!" என்று வாழ்த்தி விட்டு அந்த திருநங்கை சென்றார். அவனுடன் பயணம் செய்தவர்கள் யாரும் அந்த திருநங்கைக்கு காசு போடவில்லை. ஊனமுற்றவனுக்கு காசு போடாதவன், திருநங்கைக்கு பணம் கொடுத்த கோகுலை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அவன் அதை பற்றி கவலைப்படாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை படித்தான்.

" பிஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி, அர்ஜூனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போது தான் கௌரவப்படைகள் தன்னந்தியாய் தோற்கடித்தான். கடவுள் ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாராபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில் தான் இருக்க வேண்டும்"

மதுரை வரும் போது, சு. சமுத்திரம் எழுதிய 'வாடா மல்லி' புத்தகத்தை படித்து முடித்தான்.

--
குட்டி கவிதை

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்' என்று அழைப்போம் !!

1 comment:

துபாய் ராஜா said...

அழகான கதை.

அருமையான கருத்து.

LinkWithin

Related Posts with Thumbnails