வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, October 18, 2009

ஈழ கவிஞன்

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

என் கையாளகாத தனத்திற்கு
எதற்கு விருது ?
புலம் பேர்ந்தவர்களின்
புலம்பலை பதிவு செய்ததற்கு
சால்வை எதற்கு ?

மிஞ்சியவர்களை
காப்பாற்ற முடியாமல்
பேனா பிடித்து
எழுதும் என் போன்றோர்களால்
உணர்வுகளை மட்டுமே
தட்டி எழுப்ப முடியும் !
உயிர்களை அல்ல...!!

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

**

பாப்லோ நெருடா கவிதைகள் படிக்கும் போது எனக்கு தோன்றிய கவிதை.

1 comment:

ரோஸ்விக் said...

பூமாலைகளை வாங்கிக்கொள்ள இங்கே ஒருவர் தயார் நண்பா...அனைத்து விருதும் அவருக்கே வேண்டுமாம். வெட்க்கங்கெட்ட மனிதர்கள்....ம்ம்ம்ம்


http://thisaikaati.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails