உண்மையாக புத்தகம் எழுதுவதை விட புத்தகம் வெளியீடுவது அதை விட சிரமம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.
பதிவு போடாமல் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். வேறு வழியில்லாமல் என் விரதத்தை விட்டு பதிவு போடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் படைப்பை அனுப்புங்கள்.
நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீடப்படும் இரண்டு தொகுப்பு நூல்
'ஒரு நிமிட கதை'- சிறுகதை தொகுப்பு
1.கதை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும். அதிகப்படி 250 வார்த்தைகள் இருக்கலாம்.
2.கதை எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசமான கதைகள் இருக்க கூடாது. அவ்வளவு தான்.
3.தேர்வு செய்யப்படும் கதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.
'காந்தி வாழ்ந்த தேசம்'- கவிதை தொகுப்பு
1. 24 வரிகள் மேல் இருக்க கூடாது.
2. காந்தி வாழ்ந்த காலம், இப்போதைய இந்தியா, காந்தி அரசியல், காந்தி இல்லாத அர்சியல் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.
3. ஹைக்கூ, மரபு, புதுகவிதை - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.
தயவு செய்து காந்தியை தாக்கி கவிதை எழுத வேண்டாம்.
( சத்தியமாக நான் காந்தியவாதி இல்லை. ஆனால், அவரை பற்றி தொகுப்பு நூல் போட வேண்டும் என்று தோற்றியது. அதான், இந்த தலைப்பு....!!)
4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.
படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.10.09
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO :nagarathna_publication@yahoo.in
CC : kannan.gurumurthy@gmail.com போடவும்.
பொது விதிமுறைகள்.
நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.
மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.
தயவு செய்து பதிவில் போட்ட படைப்புகளை அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்பு தேர்வாகாத பட்சத்தில், நீங்கள் உங்கள் படைப்பை பதிவில் போட்டுக் கொள்ளுங்கள்.
இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நீங்கள் அனுப்பும் கவிதைக்கும், கதைக்கும் உதவி தொகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
குகன்
பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

25 comments:
நல்ல முயற்சி
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
முதல் முயற்சி என்ற போதிலும் முழுமுயற்சி. நன்றி தோழரே
தொடரட்டும் உங்கள் பணி
த்மிழ்சித்தன்
சிறந்த முயற்சி..
தொடரட்டும்..
வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் குகன்
வாழ்த்துக்கள் குகன். என் ஒருபக்கக் கதைகள் இரண்டை அனுப்புகிறேன். சன்மானம் முக்கியமில்லை. தரமான நூல் ஒன்று வெளிவர என் பங்களிப்பாக இருக்கட்டும்.
http://kgjawarlal.wordpress.com
நல்லதொரு முயற்சி.
வாழ்த்துக்கள் குகன்.
வரவேற்கிறேன். புதிதாக மட்டுமே எழுதி அனுப்ப வேண்டுமா? எழுதி ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளையும் அனுப்பலாமா? g மெயிலில் in text ஆக அனுப்பலாமா? --கே.பி. ஜனா
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி :)
// K.B.JANARTHANAN said...
வரவேற்கிறேன். புதிதாக மட்டுமே எழுதி அனுப்ப வேண்டுமா? எழுதி ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளையும் அனுப்பலாமா? g மெயிலில் in text ஆக அனுப்பலாமா? --கே.பி. ஜனா
//
பதிவில், பத்திரிகையில் பிரசுரம் ஆனா கதைகள் வேண்டாம்.
தராலமாக gmail in-text அனுப்புங்கள்
நன்றி
குகன்.
வாழ்த்துகள் குகன்! நீங்களும், உங்கள் பதிப்பகமும் மேன்மேலும் கண்டிப்பாக வளருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு!!
வாழ்த்துக்கள் குகன்.
இதிலாவது என் கதைகள் தேறுதா என்று பார்ப்போம். நானும் அனுப்புகிறேன்..!
நன்றி..
குகன்.. பதிப்பகம் சிறக்க வாழ்த்துகள்.
வாழ்த்துகள் :)
மதுரையம்பதியிலிருந்து வாழ்த்துகள் குகனாரே, தபால் முகவரி தரலாமே...
வாழ்த்துக்கள் குகன். சிறுகதை பட்டறையில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்ததுக்கள்.
நானும் ஏதாவது முயற்சி செய்கிறேன்!
வாழ்ததுக்கள்!
வாழ்த்துக்கள் குகன்.. :)
கேபிள் சங்கர் அண்ணா வலைப்பக்கத்தில் பார்த்தேன்...
உண்மையிலேயே பதிப்பகம் தொடங்குவது சிறந்த முயற்சி...
நானும் ஏதேனும் நல்ல கதை எழுதி அணுப்ப முயற்சி செய்கிறேன்... நண்பர்களுக்கும் அணுப்புகிறேன்...
நல்ல முயற்சி குகன்.
ஏற்கனவே பதிப்பக துறையில் இருப்பவர்களை சந்தித்து அல்லது கிழக்கு எனி இந்தியன் போன்ற நிறுவனங்களின் தலைவர்களின் மின்னஞ்சல்களை பெற்று, இதன் சாதக பாதகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
மிக நல்ல முயற்சி வாழ்த்துகள் குகன் :)
நல்ல முயற்சி...வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நல்ல முயற்சி. கைகூட பிரார்த்தனைகளும் மனமார்ந்த பாராட்டுக்களும்.
வந்ததுக்கு ஒரு 50 போட்டுக்கிறேன். (ஃபாலோயர்ஸ சொன்னேன்)
பதிப்பகம் சிறக்க வாழ்த்துக்கள் குகன்.
இரு நல்ல தொகுப்புகளை எதிர்நோக்கி ..கார்த்திக்
ஆமாம் அறிவியல் புனைகதை உண்டா?
வாழ்த்துக்கள்!!
// "நான் யாராக இருப்பினும் நீ எனக்கு சொந்தமே.." அந்த 'நான்' : கார்த்திக் சுப்பிரமணி said...
பதிப்பகம் சிறக்க வாழ்த்துக்கள் குகன்.
இரு நல்ல தொகுப்புகளை எதிர்நோக்கி ..கார்த்திக்
ஆமாம் அறிவியல் புனைகதை உண்டா?
//
நன்றி... கதை எது பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும்.
என்னதான் வலைப்பூ,இணையம் என்று வளர்ந்தாலும் புத்தக உலகத்திற்கு என தனி மதிப்பு இருக்கத்தான செய்கிறது.தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com
Post a Comment